ஞாபகம் வருதே
ஏதமில்லா எண்ணங்கள் நெஞ்செத்தில் நிறைந்த நாட்கள் அவை
முதல் நாள் வகுப்பறை முத்தான நினைவுகளாக இன்றும் என்னில்
முதல் வகுப்பில் பாடம் கற்பித்த இரியர்
என்றும் என் அன்பிற்குரியர்
வள்ளிநாயகி என்ற வஞ்சனையில்லால்
வேம்பு மரத்தை சுற்றி வேண்டுதல்
வேய் கொண்டு வரும் விஜயன் விடுப்பிற்காக
கண்டிப்பான கணக்கு வாத்தியார் -
கறுழ் கொண்ட குந்தம்போல் ஆனோம்
வேட்டமில்லை விலக்க வழியும் இல்லை
உவலை என்று உணர்ந்தேன் - அன்று
அறிவியலை அழகாய் சொல்லித்தந்த
அன்னை கீதாலெட்சுமி
பகுத்துண்டு என்ற வள்ளுவன் வார்த்தைக்கு பின்னரே - எங்கள்
மதியமிகுதி
மணல் நனைத்த கொண்டல்
மனம் நனைத்த மழை
கவிழ்ந்து விழும் காகித கப்பல்
நண்பனிட்ட காகித நேமி
வண்ண வண்ண புத்தகங்களுக்கு
இடையிடையை ஆன வருகம்
உவலை என்று உணர்ந்ததை அவம் என்றரிந்தேன்
ஆரம்ப பள்ளியில் அமைதியாய் அமர ஆசை இன்று