புகைப்படம்📷

இன்பமான நினைவுகளின் சேமிப்பு பெட்டகமாக

கடந்த காலம் மீண்டும் வராது என்பது பொன்மொழி
கடந்து வந்த பாதையின் இன்பமான தருணங்களை மீண்டும்
கண் முன்னே காட்ச்சியாக நினைவுகூர்கிறேன்
உன்னால்

அழகான நினைவுகளை அடிக்கடி
பார்த்து ரசிக்க உதவுகிறாய்

பார்க்க துடிக்கும் மனதிற்கு பிடித்த உயிரான உறவுகள் எல்லாம் உன் தயவால் புகைப்படமாக பார்த்து இன்புறுகிறேன்

தவறிழைத்தவற்க்கு தண்டனை வழங்க சாட்சியாக சட்டத்தில் நீ

கும்பியினுள்ள குழந்தை முகம் காண மருத்துவத்தில் எக்ஸ் கதிர்களாக நீ

எழுதியவர் : தீபிகா. சி (24-Mar-21, 1:31 pm)
சேர்த்தது : தீபிகா சி
பார்வை : 1190

மேலே