மகராசி
மாச மாசம் வருவது தானே
எல்லா பெண்ணுக்கும் தானே
பேறு கால வலியா என்ன?
வெறும் மாத விலக்கு தானே
நீ மட்டும் விதி விலக்கா ?
என வசை பாடாம
முப்பது நாளும்
குடும்பத்தை பாத்துப்பியே
மூணு நாள் உன்ன
பாத்துக்க மாட்டேனானு சொல்லும்
கணவன் கிடைச்சா அவ தான்
குடுத்து வச்ச மகராசி .