விழித்தவுடன் சுத்தோதகம் அருந்தல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தூங்கி விழித்தவுடன் சுத்தோத கம்மருந்தில்
ஓங்கிநின்ற பித்தம் ஒழிவதன்றித் - தேங்கும்
மலமூத் திரந்தங்கா வாதாதி யந்தந்
தலமாத் திரமுலவுந் தான்

- பதார்த்த குண சிந்தாமணி

சுத்தோதகம் - சுத்தமான நீர்

விழித்தவுடன் நீராகாரம் அல்லது தூய்மையான நீரை அருந்தினால் பித்தம் விலகும்; மலக்கட்டு நீங்கும்; வாதமுதல் மூன்றும் தன்னிலை பிறழாது

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-21, 3:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே