நானின்றி வேறில்லை
நானின்றி வேறில்லை
நீ முன் செல்ல
நொடிப் பொழுதும் பிரியாமல்
உனை
தொடர்ந்து வரும் நிழல்
நானின்றி வேறில்லை
நீ தனிமையில் தவிக்கையில்
தனிமைச் சிறை தகர்க்க
உனை
வருடும் பூங்காற்று
நானின்றி வேறில்லை
நீ வெம்மையில் வாடும்போது
தேகம் குளிர்விக்க
உனை
சிலிர்க்க வைக்கும் மழைச்சாரல்
நானின்றி வேறில்லை
காண நினைக்கும் பொழுது
கண் முன் விரியும்
தொடு வானமும்
நானின்றி வேறில்லை
கதைக்க நினைக்கும் காலம்
செவி வழி நுழையும்
குயிலோசையும்
நானின்றி வேறில்லை
என் சுவாசம் வேண்டும்போது
உன் நாசி நுழையும்
மலர் வாசம்
நானின்றி வேறில்லை
விடியல் தேடும் நேரம்
கண் முன் விரியும்
புதுப் பாதையும்
நானின்றி வேறில்லை
கண் அயரும்
அந்திவேளை
கனவிலும் துணை வருவது
நானின்றி வேறில்லை
-உமா சுரேஷ்