நீயும் நானும்

ஒரு கரை நீ
மறு கரை நான்
இடையினில் நதியும் ஓடிடுதே

ஒரு வரி நீ
மறு வரி நான்
இருவரி சேர்ந்தால் பொருள் தருமே

ஒரு முகில் நீ
மறு முகில் நான்
இணைந்திடில் மழையும் பொழிந்திடுமே

ஒரு விழி நீ
மறு விழி நான்
கனவுகள் ஒன்றென வந்திடுமே

ஒரு மனம் நீ
மறு மனம் நான்
இருமனம் இசைந்து இணைந்திடுதே

ஒரு கரம் நீ
மறு கரம் நான்
ஈருடல் ஒன்றாய் மாறியதே...

-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (17-Jun-21, 4:19 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : neeyum naanum
பார்வை : 150

மேலே