கோயில் இல்லன்னா கோவில்னு

அத்தை நம்ம குடும்ப சோசியர் வாக்கு

எப்பவுமே தவறுவதில்லை. உங்களுக்கு

இரண்டு குழந்தைகள். இரண்டும் பெண்

குழந்தைகளாக இருக்கும்னு அவர்

உங்க சாதகத்தைப் பார்த்து கணிச்சுச்

சொன்னதாகச் சொன்னீங்க. அதே போல


உங்களுக்கு இரண்டு மகள்கள்.

இளையவள் தான் என்னோட மனைவி.

அவள் இன்னும் ஆறு மாசத்தில முதல்

குழந்தையைப் பெற்றெடுக்கப் போறாள்.

அது ஆண் குழந்தை தான்னு சோசியர்

சொல்லறாரு.

@@#@#@##

நல்லதுடா நாக்ரேஷு. எம் பொண்ணு

களினிஜா கொடுத்து வச்சவடா நாக்ரேஷு.

@@@@@@

அத்தை பையனுக்கு 'கோயல்' (Goel)னு

இந்திப் பேரை வைக்க முடிவு

பண்ணீட்டேன்.

@@@@@@@@

கோயில்னு வச்சா தப்பில்லை. இல்லன்னா

கோவில்ன்னாவது பேரு வைக்கணும்.

கோயல்ன்னு வச்சா நல்லா இருக்குமா

நாக்ரேஷு?

@@@@@

அத்தை கையில், கோவில், கோயில்

எல்லாம் தமிழ்ப

பேருங்க. தமிழ்ப் பேரை வச்சா நம்மளை

யாரு மதிப்பாங்க. இந்திப் பேருங்களைப்

பிள்ளைகளுக்கு வைக்கிறவங்களுக்குத்

தான் மதிப்பு, மரியாதை.

@@@###

சரிடா நாக்ரேஷு உனக்குப் பிறக்கிற ஆண்

குழந்தைக்கு 'கோயல்'ங்கிற சுவீட்டு

நேமையே வச்சிரு..

எழுதியவர் : மலர் (24-May-25, 10:33 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 11

மேலே