உமா சுரேஷ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : உமா சுரேஷ் |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 05-Apr-1984 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2021 |
பார்த்தவர்கள் | : 432 |
புள்ளி | : 58 |
நான் ஒரு இல்லத்தரசி.
கவிதைகள் எழுதுவதிலும்,வாசிப்பதிலும் ஆர்வம் அதிகம்.என்
கவிதைகளை வாசித்து,
விமர்சனங்களை தெரிவியுங்கள்.நன்றி
தனிமை
தன்னந் தனியே தவித்திருந்தேன்
மனதில் உன்னைத் தரித்திருந்தேன்
மனதில் உந்தன் வரவை எண்ணி
வரம் பெற நானும் தவம் கிடந்தேன்...
-உமா சுரேஷ்
மீட்டாத வீணையை
மீட்டெடுத்து மீட்க வா...
கேட்காத ராகம்தனை
காதோரம் இசைக்க வா...
-உமா சுரேஷ்
பிழை
பெண்ணெனப் பிறந்தது
வரமென்றெண்ணியிருக்க...
பெண்ணெனப் பிறந்தது
பிழையென்றாகுமா ???
-உமா சுரேஷ்
எனையன்றி எதுவுமில்லை
இனி
விட்டுக் கொடுக்க
எனையன்றி எதுவுமில்லை....
எனை விதைத்த
பெற்றோரை
விட்டு விட்டேன்...
உயிரென்றிருந்த
உடன் பிறப்புகளையும்
உதரி விட்டேன்...
நாட்படு நட்பாயிருந்த
தோழமையையும்
தொலைத்தே விட்டேன்...
அன்பு பாராட்டி
அரவணைத்த
அனைத்தோரையும் விட்டு
அகன்று விட்டேன்...
கண் முன்
விரிந்தவை அனைத்தும்
கானல் நீராய்
மாறிய பின்பும்
இனியும்
விட்டுக் கொடுக்க
எனையன்றி வேறில்லை...
-உமா சுரேஷ்
என் காதலா...
உனைக் கண்ட களைப்பில்
கண் அயர்கிறேன்...
காணும் களிப்பிலே
கண் விழிக்கிறேன்...
கனவிலும் உனையே
எண்ணித் தவிக்கிறேன்...
எவளோ ஒருவளாக
இருந்த நான் ,
இன்று உன்னுள்
எல்லாமுமாக இருக்கிறேன்...
உன்னாலேயே காதலியானேன்...
உன்னாலேயே கவிஞனுமானேன்...
உன் இதயக் கருவறையில்
முதல் குழந்தையுமானேன்...
உன் மனமெனும் வானில்
வெண்ணிலவுமாய் ஆனேன்...
உன் கண்களால் கைதாகி
கண்ணக் குழியில்
கரைந்தும் போனேன்...
-உமா சுரேஷ்
நினைவுக்குவியல்கள் சிதறிக்கிடக்க
நித்திரை தொலைத்து நின்னையே
சுற்றி திரிகிறது மனசு ...
மனசெல்லாம் நிறைத்துவிட்டு
மறைந்து போனது ஏனோ ...
மறக்கமுடியாமல் மௌனமாய்
மனமது அசைபோடுகிறது
மகிழ்ந்திருந்த தருணங்களை ...
மரணம் ஆட்க்கொண்டு , மண் மூடும்
முன் வந்து மனம் அதை மகிழ்விக்க
மனமுவந்து மடை திறப்பாயா ...
மரணமும் மகிழ்வாய் மாறிவிடும்
மங்கை நின் வாய் திறந்து சொல்லும்
வார்த்தைகளாலே ....
இவன்
மகேஸ்வரன்.கோ (மகோ )
+91-98438 12650
கோவை -35
விடைபெற்றுப்போகும் நேரம்
விம்மலாய் நீ சொன்ன வார்த்தை
விலகாமல் இன்னும் என்னுள் ...
விலகிப்போனது விதியின் சாபமா ? இல்லை
வினை செய்யுத உறவின் பாவமா?
எதுவென்று விளங்கவில்லை ...
விட்டுச்செல்வாய் என விளங்காமல்
விண்த்தொடும் கற்பனைக்கொண்டேன்...
மீண்டும் கிடைப்பாயா ? எனை
மீளாத்துயரில் இருந்து மீட்பாயா?...
கடந்து போன காலம் எல்லாம்
கடைசிவரை கிட்டாதோ ?...
கவலையெல்லாம் தீர்த்து செல்ல
வாய்ப்பு தான் தராதோ ?...
கண் மூடும் கடைசி காலம் வரை
கலக்கம் தான் தீராதோ?...
கையுக்கு கிடைத்த உன்னை
கைவிட்டு போனதற்கு காலம் எல்லாம்
கண்ணீர் தான் தண்டனையோ ....
காதலே!!! கடைசியாய் ஒரு வாய்
காலம் முழுவதும் தன்னுடன் இருந்து
தன்னை காயப்படுத்தாத ,
தன்னால் காயப்படுத்தப்படாத ,
இரு இதயங்களின் இன்ப இணைப்பு ...
இன்னும் நீ என்ன கொடுத்தாலும் ,
இன்னா எது செய்தலும் ,
இனியும் நான் உனக்கு என் அன்பை மட்டுமே
தருவேன் என இதயங்கள் பேசிகொள்ளும் ,
இன்ப மொழி ...
இவன் (ள்) இல்லாது போயிடின்
இந்த வாழ்வின் வசந்தம் தெரியாது போகும்
என இதயம் இரு கரம் கூப்பி சொல்லும்
இன்ப அறிவிப்பு ...
இவன்
மகேஸ்வரன்.கோ (மகோ)
கோவை -35
+9198438 12650