மகேஸ்வரன் கோ மகோ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மகேஸ்வரன் கோ மகோ |
இடம் | : COIMBATORE |
பிறந்த தேதி | : 10-Apr-1976 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Apr-2021 |
பார்த்தவர்கள் | : 655 |
புள்ளி | : 79 |
என் பெயர் மகேஸ்வரன்.கோ(மகோ), கோவையை சேர்ந்த பொறியாளர். கவிதைகள் எழுதுவது என் பதின் பருவத்தில் தொடங்கியது, கல்லூரி காலத்துக்கு பிறகு கால ஓட்டத்தில் விட்டு போனது, மீண்டும் இப்போது முயல்கிறேன்... முயற்சிக்கு உங்கள் ஆதரவு என்றும் என் தேவை..
பெண் எனும் பெரும் சக்தி ....
உயிர் தந்து உலகிற்கு
உன்னை தரும் போது தாய்...
உன்னதமான அன்பு தந்து
உடன் வளரும் போது சகோதரி...
உள்ளம் அறிந்து அரவணைத்து
உடன் வரும் போது தோழி ...
உள்ளம் கவர்ந்து உலகமே
உனதாய் ஆகும் போது காதலி ...
உன்னில் பாதி நானேயென்று
உன்னை அவளாய் பார்க்கும்போது
மனைவி ...
உன் கைபிடித்து நீ காணா
உலகை உனக்கு காட்டி
உனக்கு தாயாய் மாறும்போது
மகள் ...
ஆகவே
உலகில் உன்னதம் எதுவென
கேட்பின் உரக்க சொல்லுங்கள்
பெண்ணாய் பிறப்பது என்றே ...
உலகின் ஆகப்பெரும் அதிசயம்
எதுவென கேட்பின் மறுப்பேதும்
இன்றி மனமுவந்து செல்லுங்கள்
மங்கையரே என்று ...
இன்று எனும் இடுபொருள்
நேற்று என்பது
நாளைய கண்ணோட்டத்தில்
இன்று ...
நாளை என்பதும்
நேற்றைய கண்ணோட்டத்தில்
இன்றே ...
இன்று என்பதை
இயன்றவரை இன்பமாய்
வாழ்ந்திடு ...
ஏனென்றால் .,
விழிகள் நிறைக்காத
நேற்றைக்கும் ,
வலிகள் இல்லாத
நாளைக்கும் ,
இன்று என்பதே
நாம் இடும்
இடுபொருள் …
இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் -மகோ
+91-98438-12650
கோவை-35
உன்னை கேள்!!!
ஓயாது நீ போடும் சண்டைகளால்
உறங்காது நான் தொலைக்கும்
இரவுகள் ஏராளம் ...
எதுவும் செய்யாதோர் எல்லாம்
உயர்வாய் தோன்றும் உனக்கு
எல்லாம் செய்த நான் மட்டும்
தவறாய் போனதும் எப்படியோ ???...
உண்மையாய் உன்னை கேள்
உன் உள்மனமேனும் உண்மை
சொல்லிடுமா தெரியவில்லை ...
ஆம் , உள்நோக்கி உன்னையே
நீ கேள் , உன் உள்மனம் சொல்லிடட்டும்
உண்மை எதுவென்று ...
இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் -மகோ
காணாமல் போன காதலி ...
கண்ணுக்குள்ள இருந்தவளை
காணாம தொலைச்சேனே!!!
கைப்பிடிச்சு திருஞ்சவள
கை கூப்பி தேடுறனே !
நெஞ்செல்லாம் நிறைஞ்சவள
விட்டுபுட்டு புலம்பி அலையிறேனே !
தேடி சலிச்சுப்புட்டேன்
திசையேதும் தெரியலையே ...
நின்னா அவ நினைப்பு
நிக்காம சுத்துதுங்க ..
நடந்தா அவ நினைப்பு
நிழலா என்னை தொடருதுங்க ...
படுத்தா அவ நினைப்பு
கனவா வந்து ஓடுதுங்க ...
கரையேதும் தெரியாம
கண் கலங்கி நிக்கிறேங்க ...
காலம் கடத்துறேன்னு
கழட்டி விட்டு போனாளோ ?
காசு பணம் தேடி
கடல் கடந்து போனாளோ ?
கல்யாணம் கட்டிக்கிட்டு
கணவனோடு போனாளோ ?
எதுவும் புரியலையே !
என்னாச்சு தெரியலையே...
தெரிஞ்சவங்க சொல்லுங்களே
தினம்தோறும் சகுறேன்னு
காணாமல் போன காதலி ...
கண்ணுக்குள்ள இருந்தவளை
காணாம தொலைச்சேனே!!!
கைப்பிடிச்சு திருஞ்சவள
கை கூப்பி தேடுறனே !
நெஞ்செல்லாம் நிறைஞ்சவள
விட்டுபுட்டு புலம்பி அலையிறேனே !
தேடி சலிச்சுப்புட்டேன்
திசையேதும் தெரியலையே ...
நின்னா அவ நினைப்பு
நிக்காம சுத்துதுங்க ..
நடந்தா அவ நினைப்பு
நிழலா என்னை தொடருதுங்க ...
படுத்தா அவ நினைப்பு
கனவா வந்து ஓடுதுங்க ...
கரையேதும் தெரியாம
கண் கலங்கி நிக்கிறேங்க ...
காலம் கடத்துறேன்னு
கழட்டி விட்டு போனாளோ ?
காசு பணம் தேடி
கடல் கடந்து போனாளோ ?
கல்யாணம் கட்டிக்கிட்டு
கணவனோடு போனாளோ ?
எதுவும் புரியலையே !
என்னாச்சு தெரியலையே...
தெரிஞ்சவங்க சொல்லுங்களே
தினம்தோறும் சகுறேன்னு
கேள்விகளால் நிறைந்தது தான்
இந்த உலகம் ...
உலகமே இப்படியிருக்க
நம் வாழ்க்கை மட்டும்
என்ன விதிவிலக்கா ???...
நம்மை சுற்றி ஆயிரம்
கேள்விகள் ...
நமக்குள்ளும் ஆயிரம்
கேள்விகள் ...
அந்த ஆயிரத்தில் பதில் சொல்ல
வேண்டிய கேள்வியையும் ,
பதில் வேண்டிய கேள்வியையும்
கண்டறிந்து களிப்புடன் கடந்து
செல்வதே வாழ்வின் புத்திசாலித்தனம் ...
ஆனால் அத்தனை கேள்விக்கும்
பதில் சொல்லியும் , பதில் தேடியும்
தொலைந்து துயரமாய் முடிவதே
வாழ்வின் மாபெரும் பரிதாபம் ...
"ஆயிரத்தில் ஒன்றை எடுத்தால்
மற்றவை எல்லாம் பூஜ்ஜியமே "
புரிந்தவர்க்கு புரியட்டும் என வாழ்க்கை
நமக்கு தந்த விடுகதை இது ...
அனுமதி இல்லாமல்
அதிகாரமாய் உள்நுழைந்து
ஆக்கிரமித்துக்கொள்கிறது
உன் நினைவுகள் எல்லாம் ...
விலக்கிட முடியாமல் விட்டு விடுகிறேன்
உள்நுழையும் நினைவுகள்
எல்லாம் என் உயிர் கொள்ளும்
என்று அறிந்தாலும் ...
விலகிச்சென்று பல காலம்
ஆனபோதும் ஆக்கிரமிக்கும்
உன் நினைவுகளை நிராகரிக்க
முடியமால் நித்திரை தொலைத்து
நித்தம் தொலையுது காலம்...
இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் (மகோ)
+91 - 98438 -12650
கோவை-35
இரவை கடத்தி இழுத்து
செல்கின்றன என்னவளின்
நினைவுகள் எல்லாம் ...
இன்பமாய் இருந்த நாட்களின்
நினைவுகள் எல்லாம் இருளாய்
மாறிப்போன வாழ்க்கையில்
வலியை நிறைத்து நகர்த்தி
செல்கின்றன இரவில் மட்டும்
வழியும் விழிகளுடன்...
இவன்
மகேஸ்வரன்.கோ ( மகோ )
+91 -98438 -12650
கோவை-35
பொதுநலத்தில் ஒரு சுயநலம் .
சுயநலவாதிகளாய் சுருங்கிப்போன எம் மக்களை இந்த கொரோனா எனும் பெரும் தொற்று மாற்றும் என்று கொண்டிருந்த எண்ணம் எல்லாம் ஏமாற்றம் தான் . சூறாவளியாய் சுழன்று அடிக்கும் இப்பெரும் தொற்று இன்னும் சுயநலமிகளாய் மாற்றியது தான் கொடுமையின் உச்சம் .
பல நல்ல தியாக உள்ளங்களும் இந்த உலகில் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை தான் . அவர்களால் தான் மிச்சம் மீதி இருக்கும் எம்மக்களின் உயிர்கள் காப்பாற்ற படுகின்றன . அவர்கள் எல்லாம் ஆகச்சிறந்த கடவுளுக்கு சமமானவர்கள் , அவர்கள் பாதம் தொழ எம்மக்கள் என்றும் கடமைப்பட்டவர்களே . இந்த கட்டுரை அவர்கள் பற்றி அல்ல . அரக்கர்களாய் மாறி மக்களின் மனங்
உன்னோடு நான் இருந்த
பொழுதுகள் எல்லாம்
பொக்கிஷமாய் என் நினைவுகளில்...
அதிகம் பேசாது அமைதியாய்
இருந்துயிருந்தாலும் அளவில்லா
ஆனந்தம் கொண்டோம் ...
அன்பை பகிர்ந்து பாசம்
விதைத்திட்ட பல மணி
பொழுதுகளும் சில நொடிகளாய்
சீக்கிரம் தொலைந்தன...
இன்னும் பல மணிகள் இருந்திருப்பேன்
இத்தனை சீக்கிரம் என்னை விட்டு
போவாய் என தெரிந்திருந்தால்...
நீ இல்லாத இதயத்தின் வலி தன்னில்
வழிந்து செல்லும் கண்ணீரால்
கரைகிறது என் மீதம் உள்ள
காலம் எல்லாம் ...
இவன்
மகேஸ்வரன் .கோ ( மகோ )
+91 -9843812650
கோவை-35