உன்னை கேள்
உன்னை கேள்!!!
ஓயாது நீ போடும் சண்டைகளால்
உறங்காது நான் தொலைக்கும்
இரவுகள் ஏராளம் ...
எதுவும் செய்யாதோர் எல்லாம்
உயர்வாய் தோன்றும் உனக்கு
எல்லாம் செய்த நான் மட்டும்
தவறாய் போனதும் எப்படியோ ???...
உண்மையாய் உன்னை கேள்
உன் உள்மனமேனும் உண்மை
சொல்லிடுமா தெரியவில்லை ...
ஆம் , உள்நோக்கி உன்னையே
நீ கேள் , உன் உள்மனம் சொல்லிடட்டும்
உண்மை எதுவென்று ...
இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் -மகோ