காணாமல் போன காதலி

காணாமல் போன காதலி ...

கண்ணுக்குள்ள இருந்தவளை
காணாம தொலைச்சேனே!!!
கைப்பிடிச்சு திருஞ்சவள
கை கூப்பி தேடுறனே !
நெஞ்செல்லாம் நிறைஞ்சவள
விட்டுபுட்டு புலம்பி அலையிறேனே !
தேடி சலிச்சுப்புட்டேன்
திசையேதும் தெரியலையே ...

நின்னா அவ நினைப்பு
நிக்காம சுத்துதுங்க ..
நடந்தா அவ நினைப்பு
நிழலா என்னை தொடருதுங்க ...
படுத்தா அவ நினைப்பு
கனவா வந்து ஓடுதுங்க ...
கரையேதும் தெரியாம
கண் கலங்கி நிக்கிறேங்க ...

காலம் கடத்துறேன்னு
கழட்டி விட்டு போனாளோ ?
காசு பணம் தேடி
கடல் கடந்து போனாளோ ?
கல்யாணம் கட்டிக்கிட்டு
கணவனோடு போனாளோ ?
எதுவும் புரியலையே !
என்னாச்சு தெரியலையே...

தெரிஞ்சவங்க சொல்லுங்களே
தினம்தோறும் சகுறேன்னு !
தின்னா இறங்கவில்லை
திரை மூடி தூங்கவில்லை
தினமும் அவ நெனப்பு
தீயா எரிக்குதுன்னு ...

மனசெல்லாம் நெறைஞ்சவள
மறக்கத்தான் முடியலையே !
மண்ணுக்குள்ள போற வரை
மனசுக்குள்ள நிப்பாளே !
மரணமும் வந்து அவளை
மறக்கத்தான் செய்திடுமோ ...

சேர்ந்து சாவமுன்னு
சத்தியம் தான் செஞ்சாளே !
சத்தியமும் செத்துத்தான்
போயிடுச்சோ ?
போனவளும் வருவாளோ
போகும் உசுர பிடிப்பாளோ...

பிடிக்காம போயிருந்தா
பிழை ஏதும் இல்லையடி? .
பிள்ளைக்கு பேரு வச்சு
பிறவிப்பயன் தந்திடுடி !...

பிள்ளையா இருந்துன்ன
பிரியமா பார்த்திடுவேன்
பின்னும் ஓர் பிறவிக்கொண்டு
பிரியாம சேர்ந்திடுவேன் ...


இவன்
மகேஸ்வரன் .கோ ( மகோ )
91-98438 12650
கோவை

எழுதியவர் : மகேஸ்வரன் .கோ ( மகோ ) (19-Jan-22, 1:08 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 269

மேலே