பெண் எனும் பெரும் சக்தி
பெண் எனும் பெரும் சக்தி ....
உயிர் தந்து உலகிற்கு
உன்னை தரும் போது தாய்...
உன்னதமான அன்பு தந்து
உடன் வளரும் போது சகோதரி...
உள்ளம் அறிந்து அரவணைத்து
உடன் வரும் போது தோழி ...
உள்ளம் கவர்ந்து உலகமே
உனதாய் ஆகும் போது காதலி ...
உன்னில் பாதி நானேயென்று
உன்னை அவளாய் பார்க்கும்போது
மனைவி ...
உன் கைபிடித்து நீ காணா
உலகை உனக்கு காட்டி
உனக்கு தாயாய் மாறும்போது
மகள் ...
ஆகவே
உலகில் உன்னதம் எதுவென
கேட்பின் உரக்க சொல்லுங்கள்
பெண்ணாய் பிறப்பது என்றே ...
உலகின் ஆகப்பெரும் அதிசயம்
எதுவென கேட்பின் மறுப்பேதும்
இன்றி மனமுவந்து செல்லுங்கள்
மங்கையரே என்று ...
மழலை முதல் மரணம் வரை
மாற்றங்கள் எதுவந்தபோதும்
மனம்கோணாது மகிழ்வை மட்டுமே
நம்முள் விதைக்கும் மங்கையரை
போற்றுவோம் மனம்குவித்து ...
இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் -மகோ
கோவை-35
+919843812650