கண்ணன் திருஅவதாரம் -------1
கோகுலத்தில் வந்து பிறந்தான் கண்ணன்
எதுகுல திலகனாய் நந்த குமாரனாய்
யசோதை அன்பு மகனாய் இளவரசாய்
மண்ணில் வந்த வரித்த இவன்
எண்ணத்திற் கப்பார் பட்டவன் மாலவன்
பெரும்மாயன் திருமாலே என்று நந்தன்
அறியான் அன்னை யசோதையும் அறியாள்
கோகுலத்து கோபியர் கோப்பர் யாருமே
ஆனாலும் அவர்கள் மனதில் இவனோ
தனி இடம் பிடித்து பித்தம்
பிடிக்க வைத்தான் அவனில்லா வாழ்வு
வாழ்வே இல்லை என்று குழந்தை
அவன் கால் வைத்த இடமெல்லாம்
தேடி தேடி கதியதுவே என்று
திரிந்தனர் ஞானியரைப் போல் இவரெல்லாம்
பால் மணம் மாறா சிறுபிள்ளைக் கண்ணன்
தன்னை மாய்க்க வந்த வஞ்ச
பூதகியை அவள் தந்த நஞ்சு
தோய்ந்த முலைப்பால் முழுவதும் உறிஞ்சி
அவள் உயிரையும் உறிஞ்சினான் கண்ணன்
(இன்னும் வரும்)