ராஜ பாதை

மனிதா
உன் எண்ணத்திற்கு ஏற்ப
நீ நடந்து செல்லும்
வாழ்க்கை பாதையை
நீயே வகுத்துக்கொள்

நீ நடந்து செல்லும் பாதையில்
கல்லும் முள்ளும் இருக்கும்
மாற்றுக் கருத்துக்களும்
விமர்சனங்களும்
தடைக் கல்லாக வந்திடும்

கவலையின்றி
பாதை மாறாமல் பயணம் செய்
வெற்றி பாதையை
நீ தொட்டு மகிழும் போது
நீ நடந்த பாதைதான்
"ராஜ பாதை" யென்று
இந்த சமூகம் உனக்கு
வெற்றி மாலை சூடி
சொந்தம் கொள்ளும்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Mar-23, 8:30 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 183

மேலே