பெண்ணே தெய்வம்
பெண்கள்
ஓர் புரியாத புதிர்தான்
அவர்கள் உள்ளத்தில்
ஆயிரம் ரகசியங்கள்
புதைந்துக் கிடக்கும்
பொய்யல்ல மெய்யே
பெண்கள் வெட்கத்தில்
"நாணம்" கொண்டு
தலை குனிவார்கள்
துன்பம் வரும்போது
"நாணலைப்" போல் வளைந்து
நிமிர்ந்து நிற்பார்கள்
வாழ்வின் பொறுமைக்கும்
பெருமைக்கும் பெண்களே...!!
பெண்களே நாட்டின் கண்கள்
பெண்கள் வானம்பாடிப் போல்
பறந்து செல்ல வாழ்த்துவோம்...!!
அழுத குழந்தைக்கு
அன்னை உமையாள்
ஞானப் பால் ஊட்டினாள்
அன்னை கலைவாணியோ
கையில் வீணையுடன்
தமிழ் பால் ஊட்டினாள்
அன்னை பராசக்தியோ
அநீதியென்றால்
அஞ்சாமல் கையில்
சூலாயுதமெடுத்து
போரிடு என்றாள்
பெண்ணே தெய்வமென்று
முன்னோர்கள் சொன்னது
முற்றிலும் உண்மையே..
பெண்களை போற்றி மகிழ்வோம்
பெண்கள் அனைவருக்கும்
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...!!
--கோவை சுபா