உன்னோடு நான்

உன்னோடு நான் இருந்த
பொழுதுகள் எல்லாம்
பொக்கிஷமாய் என் நினைவுகளில்...

அதிகம் பேசாது அமைதியாய்
இருந்துயிருந்தாலும் அளவில்லா
ஆனந்தம் கொண்டோம் ...

அன்பை பகிர்ந்து பாசம்
விதைத்திட்ட பல மணி
பொழுதுகளும் சில நொடிகளாய்
சீக்கிரம் தொலைந்தன...

இன்னும் பல மணிகள் இருந்திருப்பேன்
இத்தனை சீக்கிரம் என்னை விட்டு
போவாய் என தெரிந்திருந்தால்...

நீ இல்லாத இதயத்தின் வலி தன்னில்
வழிந்து செல்லும் கண்ணீரால்
கரைகிறது என் மீதம் உள்ள
காலம் எல்லாம் ...

இவன்
மகேஸ்வரன் .கோ ( மகோ )
+91 -9843812650
கோவை-35

எழுதியவர் : மகேஸ்வரன் .கோ ( மகோ ) (25-Jun-21, 4:32 pm)
Tanglish : unnodu naan
பார்வை : 473

மேலே