மெய்யாலுமே
மெய்யாலுமே ...
உன்னைப் பற்றி
கவிதை எழுத
நினைத்த போது...
மெய் எழுத்துக்களில்
"பொய்" மட்டும் வருவதில்லை...
மெய்யாலுமே ...
உன்னை
நேரில் பார்க்கும் போது...
உயிர் எழுத்து
வருவதில்லை....
என் உயிரே
நீ என்பதால்....
மெய்யாலுமே ....
நாம் இரண்டரக்
கலந்த போது....
உயிர், மெய்
வந்ததில்லை...
ஏனெனில் ...
அதில் என்...
"உயர் மை"
உன்னுள்
விழுந்ததாலே.