அப்பாவின் விரல்கள்
அப்பாவின் விரல்கள்
அப்பாவின் நிமிர்ந்த
விரல்கள் இறுக்க
பற்றி நடந்த
இவனுக்கு
உலகமே தனக்கு
கீழ் வந்துவிட்டது
போல எண்ணம்
எதிரே வந்த
இவன் வயதை
ஒத்தவர்களை
ஓரக்கண்ணால்
பார்த்து
"இவர் எங்கப்பாவாக்கும் "
சொல்லாமல் சொன்னது போல்
கடந்து போகிறான்

