PASALI - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  PASALI
இடம்:  களக்காடு, நெல்லை மாவட்டம்
பிறந்த தேதி :  04-Mar-1967
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jun-2021
பார்த்தவர்கள்:  269
புள்ளி:  165

என்னைப் பற்றி...

மருத்துவர்.
தமிழ் ஆர்வலர்

என் படைப்புகள்
PASALI செய்திகள்
PASALI - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2024 1:49 pm

" *கூலி வேறு ,சோறு வேறு"*

சுடுசோறும் கூடவே
சுண்டைக்காய் கூட்டும்,
விடும்ரசமும் மாவடுவும்
விட்டுக் - கொடுத்தாள் ,
தொடுகறியும் நற்சுவையாய்த்
தோன்றட்டு மென்று ,
கடும்உழைப் பாளியைக் கண்டு .

( *நேரிசை வெண்பா)*

மரு.ப. ஆதம் சேக் அலி.
களக்காடு.

மேலும்

PASALI - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2024 1:45 pm

" *பெற்ற பேறு "*

சிற்றார்கள் ஓடிச்
சிறப்புற்ற நம்நாட்டில் ,
பெற்றபேர் சொல்லுதே
பேரின்பக் - குற்றாலம் ,
பெற்றாலும் ஐந்தருவி,
பேரருவி இவ்விரண்டும்
வற்றாமல் இங்கோ வளம் .


( *நேரிசை வெண்பா)*

மரு.ப. ஆதம் சேக் அலி
களக்காடு.

மேலும்

PASALI - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2024 1:41 pm

" *இணையற்றவன் படைத்த* *இணைகள் "*

இணைகளுடன் நாளும்
இறையென்று மில்லை !
துணைகளற்ற போதும்
தொகுக்கும் இணையை !
அணைத்தே படைத்திடும்
ஆக்குவதோ எல்லாம்
பிணைந்தே இருக்கும் பிறகு .

( *இன்னிசைக் கட்டளை வெண்பா)*


*மூலம்* : "பூமி முளைக்க வைப்பவற்றிலிருந்தும், (மனிதர்களாகிய) அவர்கள் தம்மிலிருந்தும், இன்னும் அவர்கள் அறியாத (ஊர்வன, பறப்பன) வற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் படைத்துள்ளானே அத்தகையவன் மகாத் தூய்மையானவன் " : அல்குர்ஆன் 36 : 36.

மரு.ப. ஆதம் சேக் அலி.

மேலும்

PASALI - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2024 6:43 am

" *மானிடமும் விலகு "*

மெல்லாடை கண்டமான்
மென்றிடப் புல்லென்று
சொல்லாமல் மெல்லுதே
சுற்றிய - அல்லியை !
மெல்லிடைக் காட்டிவிட்டால் ,
மேய்ந்தபின் சொல்லிடும்
வெல்லச் சுவையாய் விருந்து .

( *நேரிசை வெண்பா)*

மரு.ப. ஆதம் சேக் அலி
களக்காடு.

மேலும்

PASALI - PASALI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2021 11:13 am

வகுப்பாசிரியரை
நடுவில் வைத்து...

கட்டையர்களை
முன்னால் விட்டு...

நெட்டையர்களை
பின்னால் விட்டு...

அனைவரையும்
சிரிக்கச் சொல்லி...

வெள்ளை உள்ளங்களை
கருப்பு வெள்ளையில்
புகைப்படமாயும்...
எடுத்த...

பள்ளிப் புகைப்படமே
நினைவில் நின்ற
நீங்காத புகைப்படம்...

இதில் சிலபேர்
இன்று இல்லையே
என... நினைக்கும் போதும் ...

சிலர் ...எங்கிருக்கிறார்களோ?
என... எண்ணும் போதும்...

ஒரு சிலரோ ...
யாரும் நெருங்க முடியா
உயரத்தில் இருப்பதை
நினைக்கும் போதும்...

ஏதோ ... நினைவுகள்...
பள்ளியின்... மாணவர்கள்
சப்தத்தோடும் ...
பள்ளியின் மணி சப்தத்தோடும்...

கேட்டுக்கொண்டே
இருக்கிறது.

மேலும்

நன்றி ஐயா. 09-Jul-2021 11:36 am
பள்ளிக்கூடப் புகைப்படம் விவரிக்கும் தங்கள் கவிதை நினைவுகளையும் படம் பிடித்துக் காட்டுவது மிக அழகு... வாழ்த்துக்கள்... 09-Jul-2021 11:28 am
PASALI - PASALI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2021 7:35 am

பசியோடு இருப்பவனை
விரட்டுவதும் ...

பெரும் பணக்காரனை
வரவேற்று ...
அவன் ஏறிட்டுப்
பார்க்காத போதும்...
பெரும் விருந்திட்டு
சாப்பிட அழைப்பதும் ...

வயலை அழித்து
மனையாக்கி ....
மனையின் மேலே
செடி, கொடிகள் வைத்து
அழகு பார்ப்பதும் ...

பாலின்றி...
ஏங்கும்... பல
பச்சிளங் குழந்தைகள்
இருக்க ....
பாலை...
தலைவர்களின் சிலைகளுக்கு விட்டு
விரயமாக்குவதும் ...

அம்மாவை
முதியோர் இல்லத்தில்
விட்டு விட்டு ...
பிறந்தநாள் வந்த போது
அனாதை இல்லத்திற்கு
சோறு போடுவதும் ...

தன்னுடைய
தொழிலாளி...
கடன்பட்டிருக்கிறான்
எனத் தெரிந்தும்...
கட்டாகப் பணத்தை
உண்டியலில்
இடுவதும் ...

உயிரைக்

மேலும்

நன்றி 09-Jul-2021 6:01 am
ஆரம்ப வரியை படிக்கவே கண்கலங்க வைக்கும் வரி. பாராட்டுக்கள் 08-Jul-2021 11:07 pm
PASALI - PASALI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2021 7:42 am

கால் மேல்
கால் போட்டு
தூங்குகிறது குழந்தை
தொட்டிலுக்குள் ...

அவ்வப்போது
சிரிப்பும்...
சிணுங்கலுமாக
தொட்டிலுக்குள்ளிருந்து
சப்தம்...

எட்டிப் பார்த்தால் ...
சிறுநீர் கழித்திருந்தது ...

குழந்தை
ஏதாவது கனவு
கண்டிருக்கும்...

அதன் பயத்தில்
இப்படிச் செய்கிறது
என்கிறாள் பாட்டி...

குழந்தைகள் கனவில்
நரிகள் வருவதாய்
பாட்டி சொல்ல
கேட்டிருக்கிறேன் ...

அப்படி ஏதும்....
கனவுகள் காணுமா?
அறிந்தவர் இருந்தால்
கூறுங்களேன்?

மேலும்

உண்மைதான். மீண்டும் பிறக்க எவராலும் முடியாது. 30-Jun-2021 5:52 am
அதற்கு தாங்கள் குழந்தை ஆக பிறக்க வேண்டும் ஆயினும் அதனை அறிய அனுபவம் வாய்க்க வேண்டும் .ஆக இக்கரைக்கு அக்கரை பச்சை...திரும்ப வராத என ஏங்கும் பருவம் இது. 29-Jun-2021 6:32 pm
PASALI - PASALI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2021 6:05 pm

வீட்டிற்கு வெளியே ...

புது செருப்புக்
கடித்தது ...
பொறுத்துக் கொண்டேன்...

பக்கத்து வீட்டு
வளர்த்த நாய்
கடித்தது ...
பொறுத்துக்கொண்டேன்...

வாங்கிய வண்டியில்
சக்கரங்கள்
சரியாக பிடிக்காமல்
கடித்தது....
பொறுத்துக்கொண்டேன் ...

வீட்டிற்குள் நுழைந்ததும்...
ஏன் இவ்வளவு
தாமதமென்று ...
மனைவி கடி(ந்)த்தாள் ...
கோபம் வந்தது.

மேலும்

மிக்க நன்றி 27-Jun-2021 8:49 pm
அருமை 27-Jun-2021 5:58 pm
PASALI - PASALI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2021 9:30 am

" *மீண்டுவா... நண்பா !"*

(5 காய் மா புளிமா)

சென்றநாளில் தொற்றோடு
சீர்கெட்ட என்நண்பா !
...செயலதிலே சோம்பல் முறையா?

வென்றுவிட்டாய் ! தேறிவிட்டாய் !
வீழ்த்திவிட்டாய் ! என்றிருந்தோம்
... வேதனையில் வீழ்தல் அழகா?

கொன்றிடத்தான் வந்தஇந்தக்
கொரோனாவில் மீண்டுவந்தாய்!
... குழம்பிடத்தான் இன்று தகுமா?

சென்றிடுநீ தினமுந்தான்
செய்கின்ற தொழில்நோக்கி !
... சேர்ந்திடுமே மாற்றம் அதிலாம் !


( *எழுசீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்* )


மரு... ஆதம் சேக் அலி

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே