குழந்தையின் கனவு

கால் மேல்
கால் போட்டு
தூங்குகிறது குழந்தை
தொட்டிலுக்குள் ...

அவ்வப்போது
சிரிப்பும்...
சிணுங்கலுமாக
தொட்டிலுக்குள்ளிருந்து
சப்தம்...

எட்டிப் பார்த்தால் ...
சிறுநீர் கழித்திருந்தது ...

குழந்தை
ஏதாவது கனவு
கண்டிருக்கும்...

அதன் பயத்தில்
இப்படிச் செய்கிறது
என்கிறாள் பாட்டி...

குழந்தைகள் கனவில்
நரிகள் வருவதாய்
பாட்டி சொல்ல
கேட்டிருக்கிறேன் ...

அப்படி ஏதும்....
கனவுகள் காணுமா?
அறிந்தவர் இருந்தால்
கூறுங்களேன்?

எழுதியவர் : PASALI (29-Jun-21, 7:42 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 103

மேலே