பிரிவதற்கா பிறந்தாய்

பிறந்தாய் பிறந்தாய்;
இன்று பிரிந்தாய்;
பிறப்பையும் அறுத்து;
புறப்பட முனைந்தாய்;
படுத்தம் விட்டாய்.

புறப்படத்தான் பிறந்தாயா;
யாக்கையின் யாத்திரை முடிந்தவுடன்
படுத்திட்டாய், படுத்தும் விட்டாய்;
பாசம் தெரியாது படுத்திட்டாய்.

கொடுத்து விட்டாய்,
உன் உயிரையும் கொடுத்து விட்டாய்
மறுத்து விட்டாய்,
மறைந்த நாட்களை நிiனைவு படுத்த,
மறுத்தும் விட்டாய்.

உறவுகளும் மாறி உருண்டிட்டாய்,
உன் வாழ்க்கைத் தேரை ஓடவிட்டு,
உருண்டும் விட்டாய்,
மறந்து விட்டாய்,
உன்னை எடுக்கத் தேரும் வந்ததை மறந்தும் விட்டாய்,
மூச்சியையும் விட்டு மறந்து விட்டாய்;
முடிவையும் கண்டுவிட்டாய்.

உறங்கிவிட்டாய்,
உறவறுத்து உறங்கியும் விட்டாய்;
உண்மையறியாது,
உறங்குகின்றாய்,
மௌனமாய் உறங்குகின்றாய்.

உருண்ட உறவுக்கு,
உருவாகின்றது தேர் ஒன்று,
உன் வாழ்க்கைத் தேரை ஓட்டிய உனக்கு,
இன்று உருவாகிறதோ தேர்.

உழைத்த நாட்களில் ஓடிய நீ,
ஓய்வெடுக்கின்றாய்,
நிறந்தற மாக ஓய்வெடுக்கின்றாய்.

உணர்வருத்தாய்,
உயிரையும் அறுத்தாய்,
ஊர் மறந்தாய்,
பெயரையும் சேர்த்து மறந்தாய்,
சினம் கொண்ட நாட்கள்
போக,
பிணம் என்ற பட்டயத்தையும் பெற்றாய்.

ஆடிவிட்டாய் ஆடாத ஆட்டம் ஆடிவிட்டாய்.
அழுது வந்தாய்,
அழவிட்டு இறந்தாய்,
படுத்து வந்தாய்,
பிடித்து நடந்தாய்,
இப்போது
பிடிக்க போறாய்;
பிறர், பிடிக்க போகின்றாய்;
எட்டு கால்கள் தவழ குழந்தையில்
சென்ற நீ;
எட்டு கால்கள் எட்டு எடுக்க
ஏறிப்போனாய் தேர் ஏறி போகின்றாய்.

தலை தூக்க முடியாது;
தாயின் வைத்திலிருந்து வந்தாய்;
இப்போது நிறந்தரமாக தலை தூக்க முடியாது
படுத்திருக்காய்.

சினந்தாய், சிரிக்க வைத்தாய்,
உழைத்தாய், உடல் வருத்த உழைத்தாய்.
இன்று சிரிப்பற்று, சினமற்று,
உழைக்க மறந்து,
நாத்த மெடுத்த பிணமாய் செல்கின்றாய்

ஓடிய நீ
இன்று ஒடுங்கி விட்டாய்,
பசி மறந்தாய், வறுமைப் பசியையும்
மறந்தாய்.
இன்று நீண்ட பசியுடன் செல்கின்றாய்.

தலை குனிந்தாய்,
வாழ்வில் வாழ்திட,
பிறரிடம் தலை குனிந்தாய்.

உதவிட வந்தனர்
உன் தலையை நிமிர்த்த இன்று
உதவிட வந்தனர்,
எத்தனை நீண்ட பயணத்தை முடிக்க,
எட்டிப் பார்தது முற்றுப் பயணம்.

தேடிய நாட்களில் வராத உறவு,
தேடித் தேடி வந்தது இன்று,
கூடியிருப்பது உறவைக் கூறி.

கூடிய கூட்டம்
கூட்டிச் செல்ல வந்த கூட்டம்.

ஓட்டாத உறவு இன்று,
ஓடிவந்தது பிரிவை மறந்து,
ஓப்பாறி வைக்கின்றது உறவை மறந்து.

வெட்டிய உறவின்று,
தொட்டிட வந்தது இங்கு.

வரும்போது வராத தேரு,
வீட்டின் வெளியில் விடைகொடுக்க நிற்பது ஏது.

வாயை கட்ட மறந்த இவனுக்கு,
வாய்கட்டு எதற்கு,
பட்டாடை கட்டி பூ மாலையும் கட்டி,
கோளம் இட்ட குடும்பத்தில்,
ஓலம் இட்டு,
விடை கொடுத்தனர்.

நெத்தியில் பொட்டும் வைத்து,
அதன் நடுவே காசையும் வைத்து,
வாய் நிறைய வெற்றிலைக்கட்டு
வாய்யசைக்காது,
சந்தனமும் சவ்வாதும் இட்டு,
தேரோடு புறப்பட்டு விட்டாய், ஊரோடு செல்வத்திற்கு .

கல்யாண வீட்டுக்கு போகும்
மாப்பிளை போல,
கட்டையிங்கு போகுதம்மா.


உறவறுத்த உடல்,
ஊர்வலமாய் செல்கின்றது,
உதிர்ந்த பூக்கள் தொடர்ந்தது,
உதித்த பூ ஊமையாய் தேரில் கிடக்குது .

தீமூட்டியும் விட்டனர்,
சிதையும் சிதைந்தது,
சாம்பளாய் போனாய்,
சிலர் மண்ணாய் போனார்கள்;
வந்தவர்கள்,
ஊர்கோடியில் இறுந்த இடுகாட்டில்
விட்டுட்டு வந்தனர்,
இப்புவிக்கு நீ வரும்போது
தேடிவந்தனர்,
இன்று
உன்னை ஊருக்கு வெளியில்
விட்டு ஓடி விட்டனர் உறவை மறந்து.

இதுதான் பிறப்பின் நியதி,
நிற்பவர்கள் யாரும் இல்லை,
நிலைப்பவர் யாரும் இல்லை
கூடி வருபவர்கள்,
கூட வருவது இல்லை,
யாக்கை தொடர்வதும் இல்லை.

வந்தது ஒரு நாள்,
போவதும் ஒரு நாள்,
வாழ்வது சில நாள்,
இதிலென்ன வீராப்பும் வீம்பும்.

விரிந்து தான் வந்தாய்,
விரைத்துத் தான் சென்றாய்,
விரும்பிச் செல்ல வில்லையடா.

முடிவும் ஒருநாள்,
மறந்து விடு,
பகைமையை முற்றும் மறந்து விடு.
இறக்க பிறந்த நாம்,
இருக்க வரவில்லை.

உறக்கம் எதற்க்கு,
உறங்க நாட்கள் உள்ளன,
உழைத்திடு,
உயிரை எடுத்து வந்தாய்,
உயியையும் கொடுத்துச் செல்வாய்,
உனக்கெதற்கு இருமாப்பு.

உறவு தரித்து வந்தாய்,
உறவறுத்து செல்வாய்,
கண்ணமர்ந்த நாட்கள் சில,
கண்ட காட்சி பல,
கட்டவிழ்த்த ஓட்டம்,
கண்டிப்பாய் நிற்கும் கூட்டம்.
உன்னை கட்டி அணைக்க அல்ல,
உன் கட்டையை எரிக்க.

நிற்காத வாழ்க்கைக்கென்ன,
தினமும் போட்டி,
இருப்பதை பகரிந்து உண்ணு.

இருப்பதும் போதும்,
நிலைப்பது எதுவும் இல்லை,
நீ நினைத்தாழும்,
தங்க முடியாது.
இதை நினைத்தால் நீ உயர்வாய்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (29-Jun-21, 10:14 am)
பார்வை : 184

மேலே