மாய உலகம்
பசியோடு இருப்பவனை
விரட்டுவதும் ...
பெரும் பணக்காரனை
வரவேற்று ...
அவன் ஏறிட்டுப்
பார்க்காத போதும்...
பெரும் விருந்திட்டு
சாப்பிட அழைப்பதும் ...
வயலை அழித்து
மனையாக்கி ....
மனையின் மேலே
செடி, கொடிகள் வைத்து
அழகு பார்ப்பதும் ...
பாலின்றி...
ஏங்கும்... பல
பச்சிளங் குழந்தைகள்
இருக்க ....
பாலை...
தலைவர்களின் சிலைகளுக்கு விட்டு
விரயமாக்குவதும் ...
அம்மாவை
முதியோர் இல்லத்தில்
விட்டு விட்டு ...
பிறந்தநாள் வந்த போது
அனாதை இல்லத்திற்கு
சோறு போடுவதும் ...
தன்னுடைய
தொழிலாளி...
கடன்பட்டிருக்கிறான்
எனத் தெரிந்தும்...
கட்டாகப் பணத்தை
உண்டியலில்
இடுவதும் ...
உயிரைக் கொல்வது
பாவம் என
முழங்கி விட்டு ....
மாட்டுக்கறி
ஏற்றுமதி தொழில்
செய்து வருவதும் ....
மாயை நிறைந்த
உலகத்தில் ...
கண்முன் நடக்கும்...
அன்றாடச் செயலாம்.
மரு.ப. ஆதம் சேக் அலி
களக்காடு.