வயக்காட்டு உழத்தி

வயக்காட்டு உழத்தி ;
வாய் பேசாதா ஊமச்சி;
வாடாத உழவச்சி;
உழவே அவளுக்கு உயிராச்சி;
உண்மையான தமிழச்சி;
உழைப்பு இன்றி எதுவும் தெரியாத உழத்தி;
நடவு நடுவாள் உழத்தி;
நல்ல நாட்டுப் பாடலும் பாடுவாள் இந்த உழத்தி;
வெட்டருவாள் வீச்சிலும்,
வீர நங்கை எங்கள் உழத்தி;
களையெடுப்பாள் உழத்தி ;
கண்ணாய் பயிரைக்காக்கும் எங்கள் உழத்தி ;
பால் கொடுக்கும் பசுவை ,
மேய்ப்பால் எங்கள் உழவத்தி ,
பையனப் பையன வந்தே,
பைந்தமிழில் பாடி; பைங்கிளிக்கும் பாடம் சொல்லித் தருவாள் எங்கள் உழத்தி;
கட்டழகு கொண்ட உழத்தி;
கட்டழகை சேற்றுக்குள் மறைப்பாள் இந்த உழத்தி;
ஏர் பிடிப்பாள் இந்த உழத்தி;
நேர் கொண்ட பார்வையுடையாள் இந்த உழவச்சி;
நேர்மையாய் உழைப்பாள் இந்த உழவச்சி;
நெஞ்சிலே பாசத்தை சுமப்பாள் எங்கள் உழத்தி ;
கைவளையல் ஆடி சங்கீதம் எழுப்ப,
நெடு நெடு என்று வளர்ந்த பயிரும்
தலை அசைக்க,
தழுவிய காற்றை குடித்தே
தந்திடுவாள்,சுவைமிகு அறுவடைப்பாட்டையும்;
அழுவும் குழந்தையை
மரநிழல் ஏனையில் இட்டே ,
தாலாட்டுப்பாடியபடி எடுத்த வேலையை முடிப்பாள் இந்த உழத்தி;
முகம் சுழிக்காத உழத்தி,
முந்தானை விரிப்பாள் ஒருவனுக்கே எங்கள் உழத்தி;
ஓலைக் கொட்டானில் மண் பாத்திரத்தில் உணவை சுமந்தே வருவாள்;
தன் இல்லானுக்கு உணவு படைக்க,
வேகமாய் வந்திடுவாள் எங்கள் உழத்தி;
வேண்டிய பண்டத்தை
பட பட வென்றே செய்திடுவாள் எங்கள் உழத்தி;
முகவைப்பாட்டை முத்தமிழ் கூட்டி, முந்தானையை வரித்துக்கட்டியே,
வாய்க்கால் வரப்பிலும் வயக்காட்டிலும் பாடுவாள்
இந்த உழத்தி.
மழைவேண்டி என்சோட்டுப் பெண்களை அழைத்தே;
மழைச்சோறு உன்பாள் எங்கள் உழத்தி.
பெய்யாத மழையும் என் உழத்தி குரலைக்கேட்டு கொட்டும்;
மானங்காக்க பிறந்த எங்கள் உழத்தி;
குலவ ஒலி எழுப்பியே நாற்று நடுவாள் அறுவடையும் செய்வாள் எங்கள் உழத்தி;
தன் தலைவனுடன் தலை நிமிற்ந்து நடந்து வருவாள் எங்கள் உழத்தி;
வீட்டிக்கு வந்து வீட்டு, வேலையையும் சடு குடு என்றே முடிப்பாள் எங்கள் உழத்தி;
சளிக்காத மனதுடன்
உழைத்து களைத்து வந்த
உழவனுக்கு, அட்டிகையாய் அவளையே தருவாள் எங்கள் உழத்தி.
எட்டிப் பார்த்த நிலவும் இருளைக் கட்டிப்பிடிக்க ,
கருப்பட்டியாய் கரைவாள்
இந்த கருவாச்சி;
வெடுக்கென்றே எழுவாள் விடியலை முந்தி;
இரத்தினப் புன்னைகையோடு, முத்துக் குளியை முடித்தே,
ஆதவன் முகம் காட்ட; முழுமதியாள் முழுதாய் சானம் தெளித்து கோலம் போடுவாள் இந்த தமிழச்சி;
கிராமத்து பைங்கிளி அவள்,
பட்டிக்காட்டுப் பெண்தான்
அவள்,
பாசம் நிறைந்தள்,
பாருக்கே சோரு போடும் பூமாதேவியவள்;
கிராமத்துக் குயில் அவள்,
மஞ்சள் முகத்தாள் மஞ்சம் விரிப்பாள் மாமனுக்கு
மங்கையற்கரசி மாதரசி எங்கள் உழத்தி
அவிழ்ந்து விழுந்த கூந்தலை
அள்ளி முடிவாள் எங்கள் உழத்தி
பாவை விளக்கென்பேன்,
பைந்தமிழிலே அவளென்பேன்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (8-Jul-21, 9:08 am)
பார்வை : 52

மேலே