மீண்டுவா நண்பா

" *மீண்டுவா... நண்பா !"*

(5 காய் மா புளிமா)

சென்றநாளில் தொற்றோடு
சீர்கெட்ட என்நண்பா !
...செயலதிலே சோம்பல் முறையா?

வென்றுவிட்டாய் ! தேறிவிட்டாய் !
வீழ்த்திவிட்டாய் ! என்றிருந்தோம்
... வேதனையில் வீழ்தல் அழகா?

கொன்றிடத்தான் வந்தஇந்தக்
கொரோனாவில் மீண்டுவந்தாய்!
... குழம்பிடத்தான் இன்று தகுமா?

சென்றிடுநீ தினமுந்தான்
செய்கின்ற தொழில்நோக்கி !
... சேர்ந்திடுமே மாற்றம் அதிலாம் !


( *எழுசீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்* )


மரு... ஆதம் சேக் அலி

எழுதியவர் : PASALI (16-Jun-21, 9:30 am)
பார்வை : 71

மேலே