பாருப்பாரு நல்லாப்பாரு - 1

பாருப்பாரு நல்லாப்பாரு,
பாசி ஊசி மணி விப்பவரின் ,
பையனும் பொண்ணும் IAS அதிகாரி
ஆகியப்பெருமையை, பாரதத்தில் பாரு.
பட்டித் தொட்டியில் இருக்கும் பாமரமக்களிடம்
விழிப்புணர்ச்சியைப் பாரு;
படித்து விட்டு பட்டதாரியாகி
பயன்படும் இந்த நாட்டைப்பாரு.

பாடுபட்டு வாங்கியத் சுதந்திரம் தந்த
படிப்பினைப்பாரு;
பாருப்பாரு நல்லாப்பாரு,
தெரு ஓரத்தில் வண்டித் தள்ளுபவன் மகனும், மகளும்
தேர்வு எழுதி
உயர் பதவி வகிப்பதைப்பாரு.

தெரியாத ஒதுங்குப் புறத்தில் இருந்த குடும்பத்திலிருந்தும்
விடி விளக்காய் வந்த இளைஞர்கள்,
கூட்டத்தப்பாரு.

தாய் நாட்டின்
பெருமையைப்பாரு,
தட்டிக் கேட்கும் அவன் மேன்மையைப்பாரு.

படிதாண்டி வந்து,
பாரதத்தையே ஆட்சி செய்யும்,
புரட்சிப் பெண்களின் முன்னேற்றத்தப் பாரு.

பசி பசி என்றே பசியில் துடித்து செத்த காலம் போக,
பசியை போக்க, பசுமைப் புரட்சியை எடுத்த
பாரத நாட்டைப்பாரு.
பல்வளங்கள் நிறைந்து கிடப்பதைப்பாரு;
கடலையும் மலைகளையும் அரண்களாய்க் கொண்டு உள்ள ,
இந்திய நாட்டப்பாரு.

பாருக்கே மூளையாக விளங்கும்;
எங்கள் பாரத
தலைமுறைகளைப் பாரு.

பூஜியத்தின் மதிப்பைக்
கண்டு பிடித்த புத்தியபாரு;
பூவையர்களின் அழகைப்பாரு;
பூத்திருக்கும்,
இயற்க்கையின் அழகைப்பாரு.

மனித குலத்திற்கே
மருத்துவக் கல்வி தந்ததைப்பாரு;

மனித உடலை அறுவைசிகிச்சை செய்யும்
சுசுரூந்தா சிகிச்சையை ;
முதலில் தந்த நாடு என்ற பெருமையப்பாரு.

ஜனநாயகத்தின் பெருமைப்பாரு;
ஜனங்களின் எளிமையப்பாரு.

ஏழைகள் நிறைந்து இருந்தாலும்,
எழுச்சி மிகு பாரதத்தைப்பாரு.

உழைப்பாளி வர்க்கத்தப்பாரு;
உரம் போட்ட வீரத்தப்பாரு.

எடுத்தெற்கெல்லாம் தலைய ஆட்டும்,
அண்டை நாட்டுக் கூட்டம்,
வைத்தெரிந்து போய் கிடப்பதைப் பாரு.

எல்லாம் தெரிந்த எங்கள் இளைஞனப்பாரு.
எதிர்த்து நின்று போரடி,
எடுத்ததை எல்லாம் ஜெயம் ஆக்கும்,
சாதூரியத்தப்பாரு.

எள்ளும் கொல்லுமாய் வெடித்தாலும்,
அவன் கோபத்தப்பாரு.
எதையுமே சாதிக்க முடியும்,
என்ற மனத் தைரியத்தப்பாரு.

எடுத்தோம் கவிழ்த்தினோம் என்றே இல்லாது,
ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும்,
மனப்பக்குவத்தப் பாரு.

பாரு பாரு பட்டிணம் தான் போயிப்பாறு,
பட பட வென்றே துடித்து ஓடும்,
துடிப்பைப் பாரு.

பள்ளிக்கூடம், பாடசாலைகள்,
திறந்து கிடப்பதப்பாரு,
பழமை பஞ்சாங்கம் எல்லாம்,
பஞ்சாய் பறந்து கிடப்பதப்பாரு.,

பாலாய்ப்போன சாதிப்பிரிவு
சரிந்து போனதப்பாரு,
சந்ததியர்களின் சாதூரியத்தைப்பாரு,
சரித்திரம் படைக்கத்துடிக்கும்,
அவன் வேட்கையைப்பாரு.

சந்திரனையும் தொட்ட,
சாமர்தியத்தப்பாரு,
மங்கள்யானின் செவ்வாய் பயணத்தப்பாரு.

விஞ்ஞான விளையாட்டப்பாரு,
விதவித மான படைப்பைப்பாரு.
விடுதலைக்குப் பின்பு படைத்த சாதனைப்பாரு.

சாதிப்பிரிவே வேண்டாம் என்று,
சத்தியப்பிரமானம் செய்யும்,
மனித நேயத்தப்பாரு.

பாரு பாரு நல்லாப் பாரு,
பட்டொளிவிட்டேப் பறக்கும்,
எங்கள் பாரதத்தாய்க் கொடியப்பாரு.

பகுத்தறிவுக் கூட்டத்தப்பாரு,
பகல் இரவும் உழைத்திடும் இளைஞனப்பாரு.

ஒற்றுமையும், ஒருமைப் பாட்டையும் பாரு.
ஓயாமல் உழைக்கும் கரங்களைப்பாரு.

ஒதுங்கி பதுங்கிவந்து,
உவத்திரம் கொடுக்கும்,
ஆதங்கவாதியையும்,,
அந்நிய தீய சக்தியையும்
அடக்கும் எங்கள் வீரர்களின் திறமையைப்பாரு.

பாரு பாரு நல்லாப்பாரு,
பாரத தேசத்தை வந்துப்பாரு,
பறந்து கிடக்கும் எங்கள் பாரதப் பூமியைப்பாரு.

பஞ்சசீலக்
கொள்கையப்பாரு,
பிரபஞ்சத்தைக் கணிக்கும் திறமையைப்பாரு,

சக்தி மார்க்கத்தப்பாரு,
சமரச சுத்த சன்மார்க்கம் கொள்கை பிறந்த பூமியப்பாரு,
பத்திமார்க்கத்தப்பாரு,
சுற்றி சுற்றிவரும்,
சுகமான இமயமலைக் காற்றைப்பாரு.
பொய்யாப் புலவர் வள்ளுவன் வாய்மொழி பாரு,

சுரக்கும் ஆறுகளின் ஓட்டத்தப்பாரு,
சுவையான மொழியைப்பாரு,
சொல்லித்தரும் பண்பாட்டைப்பாரு,
சொர்க்க பூமியப்பாரு,
சொந்த பந்தத்தப்பாரு,
சோறு படைக்கும் விவசாயத்தப்பாரு.

புத்தியை தீட்டி,
புதுமைப்படைக்கும் யுக்தியைப்பாரு.
பாரதத்தைக் காத்து பகைவர்களை விரட்டும் எங்கள் வீரர்கள் பாங்கினைப் பாரு

தாய்மையின் தன்மைப்பாரு,
தலை தூக்கிடும் பெண்ணைப்பாரு,
பெண்ணியத்தின் பெருமைபாரு.

அடுப்பூதிய பெண்கள்,
ஆகாயத்தில் பறப்பதைப்பாரு,
அறிவாற்றலுடன் கிடக்கும்,
ஆழுமையைப்பாரு.

ஆணும் பெண்ணும் சரிநினர் சமமே என்று
அடித்துப்பேசும் இளைஞர்களின்,
வீரப்பேச்சப்பாரு.

தாய்மையும் தூய்மையும்
அவர்கள் கண்கள்.
தைரியமாக போராடும்,
வீரசாகத்தைப் பாரு.
தூய்மை இந்தியாவைப்படைக்க துடிக்கும் அவர்கள்
வேட்கையைப்பாரு.

ஓயாது உழைக்கும், அவர்கள் உள்ள வலிமையைப்பாரு.

தாயாக, தாரமாக, ,தன்னலம் இல்லா தலைவியாக,
தெய்வமாக, தலைத்து நிற்க்கும்,
எங்கள் பெண்களைப்பாரு.

மண்ணுலகத் தேவதைப்பாரு,
மனம் மகிழ்ந்தே வாழ்வை நடத்தும்
நேர்த்தியைப்பாரு.

50 ரூபாய் இருந்தாலும்,
அடுப்பு பத்தவைக்கும்.
புத்தியப்பாரு.

அடக்கி ஆளநினைப்பவனை.
தடுத்தே எதிர்க்கும் வீரத்தப்பாரு.

மனித குலத்தின் மாணிக்கங்களைப் பாரு
விஞ்ஞான வியப்பப்பாரு.

தாராளமயக் கொள்கையைப்பாரு.
தர்க்கம் பன்னும் திறமையப்பாரு.
தர்மத்தின் சிறப்பப்பாரு.
தள்ளிப்போகாத மனிதனைப்பாரு.,
துள்ளி விழும் மீன்களைப்பாரு,
துடித்து நிற்கும்,
எங்கள் ஆடவனின்,
மீசையைப்பாரு.

பாரததேசம் நமது
பத்திரமாய் காற்பது நமது கடமை என்பதை
மறக்காமல் இருக்கப்பாரு
 எங்கள் பாரத நாட்டிற்கு ஈடு இணை ஏது,

இந்தியும் பஞ்சாபியும் குஜராத்தியும் அஸ்ஸாமி வங்காலம் ஒரியா மராத்தியும் தமிழ் தெலுங்கு துலு மலையாளம் கன்னடம் என்று பல மொழிகள் பேசும் பாரத மக்களைப்பாரு,
எங்களுக்குள் இல்லை எந்த வேறுபாடும் என்பதைப்பாரு.
பாரு, பாரு,
பாருக்கு எல்லாம் திலகம் எங்கள் நாடு,
பவணிவரும் எங்கள் இளைஞனப்பாரு

அருமை பாரத்தைப்பாரு
அன்னை பாரதத்தைப்பாரு

தன்னம்பிக்கையை வளர்த்த விவேகானந்தர் பிறந்த பூமியப்பாரு
அண்ணல் காந்தி தந்த
அகிம்சைக் கொள்கையைப்பாரு
அன்பே சிவன் என்ற தத்துவக் கொள்ளையப்பாரு

முப்புறம் கடல் சூழ
உச்சந்தலையில் பூத்த பனியாய் கிடக்கும் இமயத்தப்பாரு
இமயமாக ஒசந்த கிடக்கும் எங்கள் பழம் பெருமையைப்பாரு

முப்புறத்தையும் எரித்த திரிசடையான்
திக்விஜயம் செய்த எங்கள் பாரதத்தைப்பாரு

திக்கெங்கும் புகழைப் பறக்கவிட்டதும்
எங்கள் பாரத்தில்
திங்களும் ஞாயிறும்
தெருவெங்கும் திரிந்தே விளையாடுது பாரு

முக்கடலும் முத்தமிடம்
எங்கள் பாரத்தைப்பாரு

குமரியின் கோடி முனையைப்பாரு,
மலரும் புதிய பாரதத்தப்பாரு

மணக்கும் எமது பாதரத்தின் புகழ் பாரில் கொடிகட்டிப் பறப்பதைப்பாரு,
எம் மக்களின் மகிழ்ச்சியப்பாரு,
இனியும் ஒரு விதி படைப்போம்,
இந்தியன் நாம் என்றே சமைப்போம்
என்றே ஒவ்வொரு இந்தியனின் இதயத்தில் ஒலிக்கும் ஓசையைப்பாரு
இந்தியனாக இருந்து
இந்திப் பொருள்களையே வாங்கு பாங்கைப்பாரு,
இருக்கும் சாதிகளுக்குள் விவாதம் செய்யாது,
இருக்கும் வியாதிகளை விரட்டிட மருந்து கண்டுபிடிக்கும் போட்டியைப்பாரு
பாரம்பரிய சித்த மருத்துவத்தப்பாரு


இந்திய நதிகளை
எல்லாம் இணைப்போம்
இந்திய மண்ணே என் மானம் என்பதை நினைப்போம் என்ற விவேகத்தப்பாரு

ஏவுகனைகள் விட்ட திறமையைப்பாரு ஏந்திடாத கரங்கள்
என்றும்; உயர்ந்திட
ஏறு
கலப்பையைப்பிடித்த
விவசாயியையும்
விளைந்து கிடக்கும் விவசாயத்தைப்பாரு

சிந்தும் இயற்கையைக் கண்டு ரசிக்கப்பாரு
சிகரமாய் இருக்கும்
கலாச்சாராத்தைப்பாரு

பழமையும் புதுமையும்
குழைந்து கிடப்பதைப்பாரு

தடுமாறும் ஏழைகளுக்கு கரம் கொடுத்தே உயர்த்திடும் போக்கப் பாரு.

பதுக்கள் பொது சொத்தை அபகரிப்பவனுக்கும்
பகுத்தறிவோடு பாடம் கற்பிக்கும் திறமையப்பாரு

பசியால் வாடினாலும்;
பாவம் செய்பவனைப்
பாகுபாடு பார்க்காது தண்டனை கொடுக்கும் வீவேகத்தைப்பாரு

பழி தீர்க்க வருபவனை
பாசக்கரம் நீட்டியே அழைப்பதையும்
பகைவனை அன்பால் அணைப்பதையும் பாரு

அட
பாருக்கு பறைசாற்றுவோம்
பாரதம் தான் பாரில் சிறந்த தேசம் என்றே பறைசாற்றுவோம்
பறந்து வந்தே இங்கே வந்து பாரு
தொடரும்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (15-Jun-21, 10:35 pm)
பார்வை : 242

மேலே