கரோனா வரானா

கரோனா வரானா
கரோனா வரானா
அவனை வீட்டில் விடாம நீ சமாளி
*******
லாக் டவுன் டவுனுலதான் போட்டிருக்கு
வீட்டுக்குள்ளே ஒதுங்கிக்கிட்டா பயன் இருக்கு
லாக் டவுன் டவுனுலதான் போட்டிருக்கு
வீட்டுக்குள்ளே ஒதுங்கிட்டா பயன் இருக்கு

சமாளி முடியும் சமாளி

கரோனா வரானா
அவனை வீட்டில் விடாம நீ சமாளி
**********
உலகத்தையே உலுக்கி வச்ச கரோனா
மறுபடியும் பயமுறுத்த வரானா
உலகத்தையே உலுக்கி வச்ச கரோனா
மறுபடியும் பயமுறுத்த வரானா
தலைகாட்டாம உள்ளேயே இருந்தோன்னா
இந்த வில்லனை நாம் ஜெயிச்சிடலாம் சரிதானா!

பரிசுத்தமா கைகளையும் கழுவிடுங்க
ஆளப் பார்த்தா நைஸாக நழுவிடுங்க
சமாளி அரக்கனை சமாளி

கரோனா வரானா
அவனை வீட்டில் விடாம நீ சமாளி
***********
கிழவர் கூட கரோனாவை விரட்டுகிறார்
நாம சின்னவங்க ஓட ஓட விரட்டணும்
பிராணாயாமம் தினமும் செய்யணும்
நுரையீரல்களின் சக்தியை நாம் பெருக்கணும்

உடம்பில் எதிர்ப்பு சக்தியை தான் கூட்டிக்கோங்க
வதந்திகளை கேட்டா காதை பூட்டிக்கோங்க

சமாளி துணிவுடன் சமாளி

கரோனா வரானா
அவனை வீட்டில் விடாம நீ சமாளி
*********

வீட்டுக்குள்ளே சும்மாதான் இருக்காதே
தூங்கி எழுந்தா சுவாரசியம் இருக்காதே
வீட்டுக்குள்ளே சும்மாதான் இருக்காதே
தூங்கி எழுந்தா சுவாரசியம் இருக்காதே
உனக்கு பிடித்த காரியங்கள் செய்திடு
நீ வீட்டுக்கும் உபயோகமா இருந்திடு

கருணையில்லா கரோனாவை கொல்லணும் நாம்
கருணையோடு மற்றவர்க்கு உதவணும் நாம்

தடுப்பூசி இரண்டு முறை போடுங்க


கரோனா வரானா
அவனை வீட்டில் விடாம நீ சமாளி

எழுதியவர் : ramasubramanian (15-Jun-21, 10:28 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 224

மேலே