நம் பொறுப்பு, நம் பாதுகாப்பு

அறுபது வயது வரை ஆடி, ஓடி செய்தோம், ஏதோ, நம்மால் முடிந்த பொருள் குவிப்பு!

இப்போதைய தேவையோ நமக்கும், நம்மால் பிறருக்கும் நல்ல உற்சாகம், ஊக்குவிப்பு!

தற்போது நல்ல நிலையில் இருக்கிறோம் என்றால், அதுவே காலத்தின் அன்பளிப்பு!

வாழ்வில் பல கடுமையான இன்னல்களை கடந்தோம்! கொஞ்சமா நஞ்சமா அந்த கொந்தளிப்பு!

இறைவன் கூட நம்மை கைவிட்டுவிட்டான் என்று கூட நினைத்து, கதறி, எவ்வளவு தத்தளிப்பு!

அப்பேர்பட்ட சூழ்நிலையில் கூட, நல்ல வாழ்க்கைத் துணை அமைந்தது, நிச்சயமாக பரிசளிப்பு!

எவர் விசாரித்தாலும் 'நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்பதே ஒரு மாபெரும் பட்டமளிப்பு!

வயிறு நிறைய உண்டு சில ஏழைகள் குளிர்ந்தனர் கருணையில் நாம் தந்த சிறு பணமுடிப்பு!

இறைவனை நேரில் கண்டது போலிருக்கும், இரண்டாம் தடுப்பூசி போட்டவுன் வரும் ஆர்பரிப்பு!

இவ்வளவு கால வாழ்வில் நாம் கண்ட பெரிய உண்மை என்ன? வாழ்க்கையே ஒரு கண் துடைப்பு!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Jun-21, 10:08 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 40

மேலே