இணையற்றவன்
" *இணையற்றவன் படைத்த* *இணைகள் "*
இணைகளுடன் நாளும்
இறையென்று மில்லை !
துணைகளற்ற போதும்
தொகுக்கும் இணையை !
அணைத்தே படைத்திடும்
ஆக்குவதோ எல்லாம்
பிணைந்தே இருக்கும் பிறகு .
( *இன்னிசைக் கட்டளை வெண்பா)*
*மூலம்* : "பூமி முளைக்க வைப்பவற்றிலிருந்தும், (மனிதர்களாகிய) அவர்கள் தம்மிலிருந்தும், இன்னும் அவர்கள் அறியாத (ஊர்வன, பறப்பன) வற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் படைத்துள்ளானே அத்தகையவன் மகாத் தூய்மையானவன் " : அல்குர்ஆன் 36 : 36.
மரு.ப. ஆதம் சேக் அலி.