மன்னை சுரேஷ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மன்னை சுரேஷ் |
இடம் | : காட்டுமன்னார்குடி |
பிறந்த தேதி | : 28-Jun-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2020 |
பார்த்தவர்கள் | : 832 |
புள்ளி | : 217 |
"செத்துப் போ"
என யாரையும் சபிக்காதீர்கள்
வேண்டுமானால்
"வாழ்ந்து போ"
என சபியுங்கள்...
புரிந்து கொள்ளுங்கள்
இங்கு
சாவதை விட
வாழ்வதுதான்
பெருஞ்சாபம்...
பூகம்பம் தாக்கிட்ட புஜ் கூட மீண்டுடுச்சு;
கடல் தாயி கருவறுத்த ஊரு எல்லாம் செழிச்சிருச்சு;
புயல் காற்று வீசிட்ட ஒரிசாவும் தேறிடுச்சு;
பெரும்பாதி வெடிதாக்கிய ஜப்பானும் வளந்துடுச்சு;
எல்லாமே ரீமாடல் ஆகிவிடும் காலத்துல,
சாத்தானே காதல் மட்டும் விதிவிலக்கா?
கண்ணியவள் தாக்குதலில் கரையேற-
ஒரு கட்டுமரம் ஆண்களுக்கு
இங்க இருக்கா?
காதலை அறிந்த வயதில்
நான் கால் சட்டை போட்டிருந்தேன்;
கண்ணில் கண்ட பெண்களையெல்லாம்
மானசீகமாய் காதலித்த போது
நான் முழுக்கால் சட்டைக்கு மாறியிருந்தேன்;
காதல் இதுவேதான் என்றறிந்த போது
அரும்பு மீசைக்கு சொந்தக்காரனாகியிருந்தேன்;
முதல் காதல் வயபட்டபோது
பைத்தியக்காரனாய் திரிந்து நின்றேன்;
காதல் கைகூடியபோது அழகன் நானேயென
கண்ணாடி முன்னே நின்றிருந்தேன்;
காதலை அனுபவித்த தினங்களில்
முழுதாய் காதலை மட்டுமே அனுபவித்திருந்தேன்;
மூன்று காதலர் தினங்களை எனக்கு நானே
சொந்தமாக்கியிருந்தேன்;
காதலின் ஆழம் இவ்வளவுதான் என மிகச்சரியாய்
மில்லி மீட்டர் வரை அறிந்திருந்தேன்;
காதலின் ஆழம் கணித்
தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம்...
தலைவர் ஆகலாம்...
தளபதி ஆகலாம்...
சூப்பர் ஸ்டார் ஆகலாம்...
ஆனால்
தமிழ்நாட்டில் இனி யாராலும் கேப்டன் ஆக முடியாது...
தளபதிகளுக்கெல்லாம் செந்தூரபாண்டி இவர்...
ஆதவன்களுக்கெல்லாம் பெரியண்ணா இவர்...
பணம் இருப்பவரிடம் குணம் இருப்பதில்லை...
குணம் இருப்பவரிடம் பணம் இருப்பதில்லை என்று சொல்வார்கள்...
ஆனால்,
பணம்,
குணம்,
இரக்கம்,
அன்பு,
வீரம்,
விவேகம்,
மனிதநேயம்,
வள்ளல் குணம்,
நேர்மை,
உழைப்பு,
உண்மை,
பகுத்தறிவு,
ஆன்மீகம்
என அனைத்தும் ஒருவர் இடத்தில் இருந்தது என்றால் அது நம் கேப்டனிடம் மட்டுமே....
அன்பே! அன்பே!
அன்பு
கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருந்தும்
கண்ணிமைக்கும் நேரத்தில் வருகிறதே
அன்பான நினைவு
அது பெரிது...
என் அன்பு யாரையும் ஏமாற்றியதல்லை
எனதன்பை பெற்றவர்களால்
நான்
ஏமாற்றப் படுகிறேன்...
அன்பு நிறைந்த உள்ளம் தான்
அடிக்கடி சண்டைகள் போடும்
அது விலகிட அல்ல
விலகிவிடக்கூடாது என்பதற்காகத்தான்...
எவ்வளவுதான் காயப்படுத்தினாலும் ஒருவரை
வெறுக்கவோ மறக்கவோ முடியவில்லையென்றால்
அதுதானே உண்மை அன்புக்கு அடையாளம்...
நம்மைப் புரிந்து கொள்ளாத அன்பு பிரிந்துவிடும்
நம்மைப் புரிந்து கொண்ட அன்புக்கோ பிரிவேயில்லை
இத்தனை அன்புகாட்ட நம்மிடம்
என்ன இருக்கிறது
என்ற
தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகிவிட்ட முகமது நிஷாத் தன் உயர்விற்கு அல்லும் பகலும் பாடுபட்ட நெருக்கமானவர்களைத் தனியே சந்தித்தார்.
”உங்களுக்கெல்லாம் நான் எப்படி கைமாறு செய்யப்போறேனோ !” நெகிழ்ந்தார்.
”பெரிய வார்த்தையெல்லாம் வேணாம். அதெல்லாம் அப்புறம். மொதல்ல நாம ஒரு முக்கியமான காரியம் செய்யனும்.” கராராய்ச் சொன்னான் காசிநாதன்.
”என்ன சொல்லு ?” ஏறிட்டார் முகமது நிஷாத்;
”என் தெரு ஆனந்து பயல் தான் அரசாங்க உத்தியோகஸ்த்தன் என்கிறதை மறந்து நமக்கு எதிராய் வேலை செய்து ஓட்டையெல்லாம் பிரிச்சான். அவனை மொதல்ல தண்ணி இல்லா காட்டுக்குத் தூக்கனும்.”
”அப்புறம் ?”
முகமது நிஷாத் அடுத்தவனைப
சென்னையில் ஒரு நாள்
கதைக்களம் - வடபழனி
நீங்கள் பெரு நகரங்களில் வேலை செய்த காலங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியது உண்டா?
அப்படி என்றால் இந்த கதை உங்களுக்கு ஓரளவு பொருந்தும்...
"டீ" எனப்படும் தேநீரின் மகத்துவமும், முக்கியத்துவமும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஏனெனில் பெரும்பாலான சென்னை வாசிகளின் காலை உணவு ஒரு டீயிலே முடிந்து போகும்.
எனது சென்னை வாழ்க்கையின் காலை உணவு பெரும்பாலான தருணங்களில் டீ தான்...
அட யாருடா இவன் எப்பவும் டீயை பத்தியே பேசிகிட்டு இருக்கான் என சிலர் நினைக்கலாம்...
கொஞ்சம் பொறுங்க...
நான் இங்கு சென்னையில் எனது சுகமான சோகமான அனுபவங்களை பற்றியோ அல்லது
வெகுதூரமில்லை;
அடுத்த விடியலில் நிச்சயம் நானில்லை;
சுவற்றாணி வேறொறுவனை சுமக்கத்தயாராகி விட்டான்;
எப்படியும் என் ஆயுள் சில மணி நேரங்கள்தான்;
தினம் தினம் கிழித்தெறிந்த கைகள்
இனி கீழே எறிந்துவிடலாம்;
அதிர்ஷ்டமிருந்தால் ஏழைக்குழந்தையின் பரிட்சை அட்டையாய் மீன்டும் உலவலாம்;
இல்லை மகளிர் காகிதக்கூழ் தயாரிப்பில் சிறு கொட்டகைப்பெட்டியாய் உறுமாறலாம்;
இல்லை குப்பை அள்ளும் முரமாய் சில காலம் நீட்டிக்கலாம்;
எப்படியோ என் ஆயுள் வெகுதூரமில்லை;
அடுத்த விடியலில் நிச்சயம் நானில்லை;
மனையடி சாஸ்திரமோ மணமுகூர்த்தமோ
சுவற்றாணியில் தொங்கிய என்னை கொண்டே குறித்தனர்;
அரசு விடுமுறையோ அமாவாசை பௌர்ணமியோ
என்
என் அனுபவ உண்மைக் கதை
இந்த உலகத்துலே ஒருவன் நொண்டியாக இருக்கலாம்.
குருடனாக இருக்கலாம்.
ஊமையாக இருக்கலாம்.
ஆனால் செவிடனாக மட்டும் இருக்கவே கூடாது.
கண்தெரியாதவர்களை ஐயோ பாவம் என்கிறது இவ்வுலகம்.
கால், கை இழந்தவர்களுயும், ஊமைகளையும் கூட அனுதாபத்துடன் பார்க்கிறது இந்த உலகம்.
ஆனால் செவிடர்களை வெறும் ஜோக்கர்களாகத்தான் பார்க்கிறது .
இதை என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
மற்ற குறைபாடு உடையவர்களை அனுதாபத்துடன்பார்த்து அனுசரித்துப்போகும் அதே உலகம் ஏன் செவிடர்களுக்கு ஐயோ பாவம் சொல்வதில்லை. அதற்குப்பதில் செவிட்டுப்பொணம் என்ற பட்டத்தைக் கொடுக்கிறார்களே அது ஏன்?
ஒரு ஆள் திரும்பத
நம்ம மந்திரி என்ன இப்ப எல்லாக் கோவிலுக்கும் அடிக்கடி போறார்?
அவர் ஊழல் வழக்குலே மாட்டிக்கிட்டு இருந்தாலும் மாட்டிக்கிட்டு இருப்பார்.
அப்படிங்கறே?
இதை நாம இப்ப எல்லாம் சாதாரணமா சொல்ற ஜோக்.
ஆனா எனக்கு சின்ன வயசுலே ஏற்பட்ட அனுபவத்தைப் பார்த்த பொழுது அது உண்மைதான்னு தோணுது.
நான் ஆறாவதோ, ஏழாவதோ படிச்சிக்கிட்டிருந்த போது நடந்தது. எங்கள் குடும்பங்களில் ஒருவர் வீட்டுக் குழந்தை இன்னொருவர் வீட்டிற்குள் சுதந்திரமாக நுழைந்து, கிச்சனுக்குள்ளே போய் அங்கு எங்களுக்கு ஏதாவது பிடித்த சாப்பிடும் ஐடம் கிடைத்தால் யாரையும் கேட்காமல் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும் அளவுக்கு நம் நாட்டு அரசியல் தரா
நேத்தி ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்ததுங்க. நேத்து காலைல என் செல்போனை குளிப்பாட்டறப்போ அது காது வழியா கொஞ்சம் அதிகமா தண்ணி போய் , ரொம்ப நனஞ்சு போய் ஜன்னி கண்டுவிட்டது. உடனே போனை தூக்கிண்டு ஓடோடிப் போனேன். எங்கே? ஹோட்டலுக்கா போவான், செல் போன் கடைக்குதான் போனேன். போனை பரிசோதித்தத கடைக்காரர் சொன்னார் "அதை கொஞ்சம் நல்லா உலுக்கி, கொஞ்சம் தட்டி, கொஞ்சம் கையால் சூடு பண்ணி, ஒரே ஒரு தடவை கீழே போட்டு விட்டு, பின்பு கொஞ்ச நேரம் காய வைக்கணும், எல்லாம் சரியா ஆயிடும். கொஞ்சம் wait பண்ணுங்க".
ஒரு தனி அறையில் நான் மட்டும் கைப்பேசி இல்லாம, கையும் ஓடல( செல் போன் கையில் இருந்தாத்தானே கை ஓடும்), காலும் ஓடல ஏன்னா,
நேற்று நான் உண்ணாநோன்பு விரதம் , ஆன்மீக சிந்தனைகள் தான் எனக்கு ஆகாரம்.
காலையில் எழுந்தவுடன் சூடாக காபி, இதற்கும் உண்ணா விரதத்திற்கும் சம்பந்தம் இல்லை
காலையில் குளித்து சிறிது நேரம் தியானம் செய்த பின்னர் ஒரு கிளாஸ் சூடாக ஹார்லிக்ஸ்.
ஹார்லிக்ஸ்ல ஊட்ட சத்துக்கள் இருக்கிறது அனால் அது ஒரு உணவாகுமா? இல்லவே இல்லை.
மதியம் 12 மணிக்கு நான்கு வாழை பழங்கள், கொஞ்சமா ஒரு கிளாஸ் சூடான பால், இவ்வளவே.
இடையில் சொட்டு தண்ணீர் கூட இல்லை, அரிசி சாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை
மதியம் 2 மணிக்கு சூடாக ஒரு கிளாஸ் காபி, வெறும் காபி தான், பிஸ்கட் கூட இல்லை
மீண்டும் மலை 5 மணிக்கு கொஞ்சமா ஹார்லிக்ஸ் (ஒரே ஒரு கிள