அன்பே அன்பே

அன்பே! அன்பே!

அன்பு
கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருந்தும்
கண்ணிமைக்கும் நேரத்தில் வருகிறதே
அன்பான நினைவு
அது பெரிது...

என் அன்பு யாரையும் ஏமாற்றியதல்லை

எனதன்பை பெற்றவர்களால்
நான்
ஏமாற்றப் படுகிறேன்...

அன்பு நிறைந்த உள்ளம் தான்
அடிக்கடி சண்டைகள் போடும்
அது விலகிட அல்ல
விலகிவிடக்கூடாது என்பதற்காகத்தான்...

எவ்வளவுதான் காயப்படுத்தினாலும் ஒருவரை
வெறுக்கவோ மறக்கவோ முடியவில்லையென்றால்
அதுதானே உண்மை அன்புக்கு அடையாளம்...

நம்மைப் புரிந்து கொள்ளாத அன்பு பிரிந்துவிடும்

நம்மைப் புரிந்து கொண்ட அன்புக்கோ பிரிவேயில்லை

இத்தனை அன்புகாட்ட நம்மிடம்
என்ன இருக்கிறது
என்று யோசிக்க வைத்த ஒருவரை வாழ்வில்
சந்தித்திருந்தால்
நீங்கள்
நிஜமான அதிர்ஷ்டசாலி...

அன்பை மட்டுமே கடனாகத் தந்தால்
அதிக வட்டியுடன் அது திரும்பிக்கிடைக்கும்...

புரிதல் மட்டுமே
உண்மை அன்பை
என்றுமே உணர்த்தும்...

❤🧡💛

எழுதியவர் : மன்னை சுரேஷ் (28-Sep-23, 9:11 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : annpae annpae
பார்வை : 387

மேலே