நாம் வெகுவாக முன்னேறிவிட்டோம்

நாம் அனைவரும் பாசத்தால் பிணைக்கப்பட்ட மரக்கிளைகள்
பந்தத்தால் சிறைக்கைதி போல் கட்டுண்ட அற்ப மானிடர்கள்
அன்பு எனும் கண்ணாடியை உடைத்து நம்மை காண்பவர்கள்
நச்சு கலந்த நட்பெனும் பாலில் நெய்யை போல் இருப்பவர்கள்
நேசமெனும் கைப்பிடியில்லாத தடியைப் பற்றிச்செல்பவர்கள்
ஆசை சமுத்திரத்தில் பேராசை டைடானிக்கில் மூழ்குபவர்கள்
மோகப் புதைமணலில் புதைந்து, மீண்டு(ம்) புதைகின்றவர்கள்
காமப்பசிக்கு ஆளாகித் தன்மானம் மறந்து உழல்கின்றவர்கள்
பொருளுக்காக மனசாட்சியை ஒடுக்கிவைக்க துணிந்தவர்கள்
புகழுக்கு ஏங்கி இழுக்கை தேடிக்கொள்ளும் மனமுடையவர்கள்
அன்பை வெளியே போதித்து மனித ரத்தத்தை உறிஞ்சுபவர்கள்

இரக்கம் என்று பறைசாற்றிவிட்டு ஏழையைக் களவாடுபவர்கள்
கருணையை கடவுளுடன் ஒப்பிட்டு, அக்கருணை மறப்பவர்கள்
லஞ்சம் என்ற வார்த்தையை அன்றாடம் செயல்படுத்துபவர்கள்
ஊழல் பெரும்பாபம் என்று வெட்கமின்றி பொய்யுரைப்பவர்கள்
ஆன்மிக விஞ்ஞானத்தை சுத்தப் பொய் என ஓரம் கட்டுபவர்கள்

இத்தகு செயல்களில் பலர் பல்வேறு விதங்களில் ஈடுபட்டுள்ளனர்
நேர்மை வாய்மையை வாய் மூடி கறுப்புப்பணம் சேர்க்கின்றனர்
ஆடை இல்லாதபோதும் இலைகளை போர்த்தி மானம் காத்தோம்
உடைகோடி நெய்தும் இன்று தன்மானத்தைத் தாரை வார்த்தோம்
உலகம் நிச்சயம் வெகுவாக முன்னேறிவிட்டது,எந்த வளர்ச்சியில்?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Sep-23, 2:59 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 23

சிறந்த கவிதைகள்

மேலே