ரா குருசுவாமி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரா குருசுவாமி |
இடம் | : பிறந்த ஊர்: அரியலூர் |
பிறந்த தேதி | : 06-Nov-1934 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-May-2020 |
பார்த்தவர்கள் | : 581 |
புள்ளி | : 198 |
நான் அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன்.
கீழே விழும் பலன்
பல்லி விழும் பலன் கேட்டிருப்பீர்கள். கீழே விழும் பலனைப்பற்றிக கேட்டு இருக்கமாட்டீர்கள். எனக்குத் தெரிந்து கீழே விழாத முதியவர்கள் சரித்திரத்தை நான் இன்று வரையில் கேள்விப்பட்டதே இல்லை.கீழே விழுந்து கை,கால் முறித்துக்கொள்ளாதவர்கள் எவரும் இல்லை. அப்படி ஒரு வீட்டில் நடைபெறவில்லை என்னில் அந்த வீட்டில் அனைவரும் முதியோராவதற்கு முன்பே விடை பெற்றுச்சென்று இருக்க வேண்டும். வயதிற்கும் வழுக்கி விழுவதற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு காலங்காலமாக இருந்து வருகிறது. ஏன்? நானே இதுவரையில் 14 அல்லது 15 முறை விழுந்து இருக்கிறேன். 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் கீழே விழுந்தால் அதுதான் அவர்களின் கடைசி வி
வந்தது கொரோனா
இது நடந்தது 2020ம் ஆண்டு
எனக்கு ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மார்ச் மாதம் 2ம்தேதி( 2020) டாக்டர் காமாட்சி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் நடந்தது. அப்போது என்கூட இருந்து என்மகனும், தம்பி யும் கவனித்து வந்தனர், ஆபரேஷன் செய்த டாக்டர் நான் இன்னும் ஒரு மாதத்திற்கு நீண்ட பயணம் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்று கட்டளை இட்டிருந்தார். நாங்கள் ஏற்கனவே புக் செய்து இருந்த மார்ச் 23 ம்தேதி அமெரிக்கா புறப்படுவதற்கான டிக்கட்டை டாக்டரின் அட்வைஸ்படி கேன்சல் செய்து மறுபடியும் எப்போது புக் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்த போது யாரும் எதிர் பாராத வகையில் நம்நாட்டில் கொரோனா
தப்பும் தண்டனையும்
இரு நண்பர்கள் சோமுவும், தாமுவும் இரண்டு நாட்களுக்கு தங்கள் நண்பனின் எஸ்டேடுக்கு சென்று பொழுதைக்கழிப்பது என்று தீர்மானித்தார்கள். ஆனால் ஒரு புயல் ஒன்று அந்தப்பகுதியைத் தாக்குவதாக வானிலை அறிவிப்பு அன்றைய டிவி செய்திகளில் வெளியானது.
“அடடா, நாம் ஜாலியாக இருக்கப் புறப்படும் இந்த நேரத்திலா இப்படி ஒரு செய்தியா வரவேண்டும்?” என்றான் தாமு.
“வானிலை அறிக்கையில் கனமழை என்று அறிவிக்கும்போதுதான் என் அம்மா, வடாம் காயப்போடுவார்கள். எனவே இதை எல்லாம் நம்பக்கூடாது” என்றான் சோமு.
அதுவும் ஒரு விதத்தில் உண்மைதான். சில சமயம் வானொலி அறிக்கையை நம்பி குடை எடுத்துச்சென்றால், அன்று மழை வருவதில்ல
தூக்கமோ தூக்கம்
தூக்கம்
அழுமூஞ்சி, விடியா மூஞ்சி, தூங்குமூஞ்சி போன்ற அடைமொழிகளை நாம் வீட்டுக்கு வீடு கேட்டிருப்போம். ஒவ்வொரு வீட்டிலும் இந்த மூன்றில் ஏதாவது ஒரு மூஞ்சி கட்டாயம் இருக்கும். அழுமூஞ்சி தெரியும், தூங்கு மூஞ்சி தெரியும். அதென்ன விடியா மூஞ்சி. அதென்ன தூங்கு மூஞ்சியின் எக்ஸ்டென்ஷனா? தூக்கம்
அது சரி. தூக்கத்துலே எங்கேயோ போயிட்டேனே. நமக்கு எல்லாம் தெரிஞ்ச சமாசாரம்தான். அந்தக்காலத்திலேயே காலட்சேபத்துக்கு போனவங்க தூங்கி வழியறதைக் கதை கதையா சொல்லுவாங்க. ஒருத்தர் கதாகாலட்சேபம் முடிஞ்ச உடனே சீதைக்கு ராமன் சித்தப்பாவான்னு கேட்டதாகவும், கதாகாலட்சேபம் ரெண்டு ஆள் கனம் இருந்ததாகவும் ந
பஜ்ஜி மகாத்மியம்!!
நான் மாலை ஏதாவது ஹோட்டலுக்குப்போனால் முதலில் பஜ்ஐஜியைத்தான் கேட்பேன். லைட் ஸ்நாக்குகளில் முதல் இடம் பஜ்ஜிக்குத்தான்.
பஜ்ஜி சாப்பிட ஹோட்டலுக்குப்போவது வேஸ்ட். அதற்காகவே கையேந்தி பவன்கள் மைலாப்பூரிலும் வேறு இடங்களிலும் உள்ளன.
பொன்னம்பல வாத்தியார் தெருவில் ஒரு ஜன்னல் பஜ்ஜிக் கடை ரொம்ப ஃபேமஸ். நான் கபாலீசுவரர் கோவிலுக்குப்போகும்போதெல்லாம் அந்த பஜ்ஜிக்கடைக்குப் போகாமல் இருந்ததில்லை. அதேபோல் அந்த பஜ்ஜிக்கடைசாக்கில் கோவிலைக்குப் போவதுமுண்டு. ( இப்போது அந்தக்கடை அங்கு இருக்கிறதா, தெரியவில்லை)
பக்கத்து கட்டிங்கில் ஒரு மாமி கடை திண்ணைக்கடையாக இருந்தது. அதில் பஜ்ஜி , போண்டோ
என் அனுபவ உண்மைக் கதை
இந்த உலகத்துலே ஒருவன் நொண்டியாக இருக்கலாம்.
குருடனாக இருக்கலாம்.
ஊமையாக இருக்கலாம்.
ஆனால் செவிடனாக மட்டும் இருக்கவே கூடாது.
கண்தெரியாதவர்களை ஐயோ பாவம் என்கிறது இவ்வுலகம்.
கால், கை இழந்தவர்களுயும், ஊமைகளையும் கூட அனுதாபத்துடன் பார்க்கிறது இந்த உலகம்.
ஆனால் செவிடர்களை வெறும் ஜோக்கர்களாகத்தான் பார்க்கிறது .
இதை என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
மற்ற குறைபாடு உடையவர்களை அனுதாபத்துடன்பார்த்து அனுசரித்துப்போகும் அதே உலகம் ஏன் செவிடர்களுக்கு ஐயோ பாவம் சொல்வதில்லை. அதற்குப்பதில் செவிட்டுப்பொணம் என்ற பட்டத்தைக் கொடுக்கிறார்களே அது ஏன்?
ஒரு ஆள் திரும்பத
என் அனுபவ உண்மைக் கதை
இந்த உலகத்துலே ஒருவன் நொண்டியாக இருக்கலாம்.
குருடனாக இருக்கலாம்.
ஊமையாக இருக்கலாம்.
ஆனால் செவிடனாக மட்டும் இருக்கவே கூடாது.
கண்தெரியாதவர்களை ஐயோ பாவம் என்கிறது இவ்வுலகம்.
கால், கை இழந்தவர்களுயும், ஊமைகளையும் கூட அனுதாபத்துடன் பார்க்கிறது இந்த உலகம்.
ஆனால் செவிடர்களை வெறும் ஜோக்கர்களாகத்தான் பார்க்கிறது .
இதை என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
மற்ற குறைபாடு உடையவர்களை அனுதாபத்துடன்பார்த்து அனுசரித்துப்போகும் அதே உலகம் ஏன் செவிடர்களுக்கு ஐயோ பாவம் சொல்வதில்லை. அதற்குப்பதில் செவிட்டுப்பொணம் என்ற பட்டத்தைக் கொடுக்கிறார்களே அது ஏன்?
ஒரு ஆள் திரும்பத
இந்த ஓவியம் ௧௯௫௪-௫௬ல வரையப்பட்டது
வரைந்தவர்: ரா.குருசுவாமி்
கண்பாணதாசனின் “பாட்டும் நானே, பாவமும் நானே” யை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது
I am the music in you
I am the spirit in music too
I am the one making you sing
And make you a melody king
The music and its lyrics are mine
There is nothing which is thine
I am the music in any moving thing
That aids you when you sing
I am the king of the art of dance
Made rich by eye movement and glance
I am the movement in everything
Realise this one before you sing
When I stop my song and become silent
The whole world would come to a dead halt
When I move, the entire world moves with me
Re
என்அப்பாவும் அம்மாவும் ஏப்ரல் 14 தமிழ் வருஷப் பிறப்புக்கு வரதாக இருந்தாங்க. கொரோனா ஊரடங்காலே அவங்களாலே வரமுடியல்லே. இனி எப்போ வருவாங்கன்னு தெரியல்லே.
உனக்காவது பரவாயில்லே. இங்கே ரெண்டு மாசத்துக்கு முன்னாலேய வந்த என் மாமியாரும், மாமனாரும் தமிழ் வருஷப் பிறப்புக்கு முன்னாலேயே ஊருக்குப் போறதா இருந்தாங்க. ஆனா இந்த பாழாப்போன கொரோனா ஊரடங்காலே அவங்க ஊருக்கு அப்போ போக முடியல்லே. இன்னும் எத்தினி மாசம் இங்கே இருக்கப் போறாங்கன்னும் தெரியல்ல. எப்ப புறப்படுவாங்கன்னும் தெரியல்லே.
********
ஆமாம். உங்க கால் வீக்கம் இப்ப எப்படி இருக்கு?
முக்கால் வீக்கம் கொறஞ்சிட்டுது. இன்னும் கால் வீக்கம் பாக்கி