நகைச்சுவை துணுக்குகள்

என்அப்பாவும் அம்மாவும் ஏப்ரல் 14 தமிழ் வருஷப் பிறப்புக்கு வரதாக இருந்தாங்க. கொரோனா ஊரடங்காலே அவங்களாலே வரமுடியல்லே. இனி எப்போ வருவாங்கன்னு தெரியல்லே.
உனக்காவது பரவாயில்லே. இங்கே ரெண்டு மாசத்துக்கு முன்னாலேய வந்த என் மாமியாரும், மாமனாரும் தமிழ் வருஷப் பிறப்புக்கு முன்னாலேயே ஊருக்குப் போறதா இருந்தாங்க. ஆனா இந்த பாழாப்போன கொரோனா ஊரடங்காலே அவங்க ஊருக்கு அப்போ போக முடியல்லே. இன்னும் எத்தினி மாசம் இங்கே இருக்கப் போறாங்கன்னும் தெரியல்ல. எப்ப புறப்படுவாங்கன்னும் தெரியல்லே.
********
ஆமாம். உங்க கால் வீக்கம் இப்ப எப்படி இருக்கு?
முக்கால் வீக்கம் கொறஞ்சிட்டுது. இன்னும் கால் வீக்கம் பாக்கி இருக்குது.
******
பையன் 1: இந்த நாய் யாருதுன்னு தெரியலையே.
பையன்2: ஏய், அந்த நாய் என்னோடது. எனக்கு சொந்தம்.
பையன்1: என்ன? சித்தப்பாவா, பெரியப்பாவா?
********

எங்க அப்பா ஒரு NRI. ஆனா அவர் வெளிநாடே போனதில்லை.
அதெப்படி வெளிநாடு போகாமல் ஒருத்தர் NRI ( Non Resident Indian) ஆகமுடியும்?
ஓ! அதுவா? அவர் N. ராமச்சந்திர ஐயர்(N. Ramachandra Iyer). அதனாலே NRI. நான் ஒரு BC
என்னப்பா குழப்பறே. அப்பா பேர் N.R. ஐயர்னு சொல்றே. அப்புறம் நீ BC ன்னு உன்னை சொல்லிக்கிறே.
நான் Brahmin Community ஐச்சேர்ந்தவங்கறதாலே அப்படிச் சொன்னேன். நான் இப்ப 2010 லே இருந்து SC ஆயிட்டேன்.
எப்படி SC ஆவே? ரொம்பவும் குழப்பறே.
2010 லே எனக்கு 60 வயசு முடிஞ்சதாலே சீனியர் சிட்டிசன்( Senior Citizen) ஆயிட்டதாலே SC ஆயிட்டேன்.
*********

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (5-May-20, 7:27 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 89

மேலே