தப்பும் தண்டனையும்

தப்பும் தண்டனையும்
இரு நண்பர்கள் சோமுவும், தாமுவும் இரண்டு நாட்களுக்கு தங்கள் நண்பனின் எஸ்டேடுக்கு சென்று பொழுதைக்கழிப்பது என்று தீர்மானித்தார்கள். ஆனால் ஒரு புயல் ஒன்று அந்தப்பகுதியைத் தாக்குவதாக வானிலை அறிவிப்பு அன்றைய டிவி செய்திகளில் வெளியானது.
“அடடா, நாம் ஜாலியாக இருக்கப் புறப்படும் இந்த நேரத்திலா இப்படி ஒரு செய்தியா வரவேண்டும்?” என்றான் தாமு.
“வானிலை அறிக்கையில் கனமழை என்று அறிவிக்கும்போதுதான் என் அம்மா, வடாம் காயப்போடுவார்கள். எனவே இதை எல்லாம் நம்பக்கூடாது” என்றான் சோமு.
அதுவும் ஒரு விதத்தில் உண்மைதான். சில சமயம் வானொலி அறிக்கையை நம்பி குடை எடுத்துச்சென்றால், அன்று மழை வருவதில்லை. மழை வருவதற்கு சான்ஸே இல்லாத நேரத்தில் வெளியே கிளம்பி நல்ல மழையில் மாட்டிக்கொண்டதும் உண்டு. இது நம்மில் பலருக்கும் ஏற்படும் அன்றாட அனுபவங்களில் ஒன்று.
“நீ சொல்வது அந்தக் காலம். இன்று அவ்வாறு கிடையாது. ஏனென்றால் இன்று வானிலையைத் துல்லியமாக அறிவிக்கும் பல புதிய மாடர்ன் கருவிகள் வந்து விட்டன. அதனால் அவர்களின் கணிப்பு இன்று தவறுவதில்லை” என்றான் ராமு.
“எதாக இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தை விட்டால் மறுபடியும் நாம் இருவரும் ஒன்று சேருவது இபபோதைக்கு நடக்காது. எனவே நாம்திட்டமிட்டபடி மழை வந்தாலும், புயலே வந்தாலும் நாம் புறப்பட்டே ஆகவேண்டும்” என்றான் சோமு.
“நாம ஒண்ணும் ரஜினி இல்லே. முடிவு எடுத்தா எடுத்ததுதான். எனவே நாளைக்கு சாயந்திரம் சுமார் 5 மணிக்குப் பறப்படுகிறோம். வெயில் தாழ்ந்து இருக்கும். இரண்டு மணி நேர டிராவல் டயம்தான் என்பதனால் இருட்டுவதற்குள் நாம் பண்ணைக்குப் போய் சேந்து விடலாம்” என்றான் தாமு.

மறுநாள் மாலை 5 மணிக்கு இருவரும் சோமுவின் பழைய காரில் புறப்பட்டனர். புறப்படும் போதே கனமான மேக மூட்டம் இருந்தது. பலத்த காற்று வீசத்தொடங்கியது அந்த சாலை வழியாக எந்தப் பெரிய மனிதனும் இதுவரையில் போனது இல்லை ஆதலால் அந்த சாலை மிகவும் பழுது பட்டு இருந்தது. போதாததற்கு மழை வேறு ஆரம்பித்து விட்டது. கார் சுமார் 10 மைல் தூரம் சென்றவுடன், அதன் டயர் மேடைகளைக்கண்டவுடன் நம்அரசியல் வாதிகளின் வாய்போல் பஞ்சர்ஆகிவிட்டது. * அருகிலுள்ள கிராமத்தில் நிறுத்தி, பஞ்சர் ஒட்ட யாராவது இருக்கிறார்களா என்று தேடிக்கண்டு பிடித்து பஞ்சர் போட்டு வண்டியை மறுபடியும் கிளப்ப ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. இப்பொழுதே நன்றாக இருட்டிவிட்டது நம்அரசியல் வாதிகளின் மனது மாதிரி.
மழை அதிகரித்துக்கொண்டே போய், பேய்மழையாக மாறிவிட்டது. காரை மிகவும் கவனமாகவும்நிதானமாகவும் அந்த கும்மிருட்டில் ஓட்ட வேண்டியதாய்ப்போய்விட்டது. நம் ஊரில் புயல், மழை என்றால் எப்படி இருக்கும் என்பதை நாம் எல்லோரும் அறிந்ததே.
ஆளுங்கட்சிக்கு தலைவலி. எதிர் கட்சிகளுக்கு கொண்டாட்டம். . மக்கள் பாடு திண்டாட்டம்.
வழியில் மரங்கள் முறிந்து விழலாயின. சாலைகள் தண்ணீரில் மூழ்கின. போதாததற்கு அது வரையில் வரட்சியாக இருந்த இடத்தில் சிறு சிறு ஒடைகள் தோன்றலாயின. அங்கிருந்த ஒரு காட்டாறு வெள்ளத்தில் மூழ்கியது. .
இதற்கு மேலும் இந்த மழையிலும் இருட்டிலும் செல்வது புத்திசாலித்தனம்ஆகாது என்று அவர்கள் தீர்மானித்து, அன்று இரவை எங்கேயாவது ஒரு இடத்தில் தங்கிக் கழித்துவிட்டு விடிந்தபின் மழை ஓய்ந்திருந்தால் பண்ணைக்குச் செல்வதாக முடிவு செய்தார்கள். காரை மெதுவாக ஓட்டியபடியே இரண்டு பக்கமும் ஏதாவது வீடு தெரிகிறதா என்று பார்த்தார்கள்.
“அதோ, அங்கே வெளிச்சம்தெரிகிறதே” .
“என்ன ஆச்சரியம். இவ்வளவு மழை , புயலிலும் இன்னும் கரென்ட் இருக்கிறதா?
கொஞ்சம் மேகமூட்டம் ஏற்பட்டாலே கரென்ட் கட்டாகற நம்ம ஊரிலே இவ்வளவு மழை பெய்தும் கரெண்ட் கட்டாகாமல் இருக்கிறது என்றால் ஆச்சரியமான விஷயம் இல்லையா?”
“சரி, சரி. அந்தக்கட்டிடத்துக்கு அருகே காரை நிறுத்தி அங்கே இன்றிரவு தங்க இடம் கேட்போம்”.
காரை ஒரு ஒரமாக நிறுத்தினார்கள். வேகமாக காரிலிருந்து இறங்கி வீட்டின் போர்ட்டிகோவின் கீழ் சென்று கதவைத் தட்டினார்கள்.( ஏன் கதவைத தட்டினார்கள்? காலிங் பெல்லை பிரஸ் பண்ணவில்லை என்று கேட்கலாம். அந்த நிமிடத்தில் அவர்களுக்கு அந்த இடத்தில் காலிங். பெல் ஸவிட்ச் எங்கே இருக்கிறது என்ற தெரியாத காரணத்தால் கதவைத்தட்டினார்கள். இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?)

உள்ளே இருந்து ஒரு அழகான பெண் கதவை இலேசாகத, திறந்தபடி
” யார்?” என்று கேட்டாள்
இவர்கள் இருவரும் “ நாங்கள் சென்னையில் கம்பனி உத்யோகத்தில் இருப்பவர்கள். நாங்கள் மாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டோம். எதிர்பாராத விதமாக இந்தப்புயலில் மாட்டிக்கொண்டோம். பாதை பூராவும் வெள்ள மயம். மரங்கள் முறிந்து விழுந்து கொண்டு இருக்கின்றன. போதாததற்கு இங்குள்ள கட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிட்டது, நாங்கள் விசாரித்த பலரும்
“இப்போது இந்த புயலிலும் மழையிலும் இந்த ஆற்றைக்கடந்து போவது என்பது முடியாது. அதோ அங்கே ஒரு வீடு தெரிகிறதே அங்கு போய்க் கேட்டுப்பாருங்கள். அவர்கள் சரி யென்றால் இன்று இரவு அங்கு தங்கிவிட்டு வானிலை சீரானவுடன் கிளம்பலாம்” என்றர்கள். அதனால் நாங்கள் இருவரும் நீங்கள் அனுமதித்தால் இன்று இரவு தங்கி காலையில் பறப்பட்டு விடுவோம்” என்றனர்.
அதற்கு அந்தப் பெண் தயங்கியபடியே “ நான் இங்கு தனியாகத்தான் இருக்கிறேன். என் கணவர் இறந்து ஒரு மாதம் ஆயிற்று. என்றார்.
பின் நீங்கள் இங்கே ஏன் தனியாக இருக்கிறீர்கள ?
“என்னுடன் கூட யாரும்கிடையாது. நாங்கள் இருவரும் எங்கள் பெற்றோரும், சொந்தக்காரர்களும் கடுமையாக எதிர்க்க, அவர்களை மீறிக் கல்யாணம் செய்து கொண்டோம். என் கணவர் நன்றக சம்பாதித்து இந்த வீட்டைக்கட்டினார். என்னை என கணவர் போன பின்னும் யாரும் வந்து பார்ப்பதில்லை. எங்களுக்குக்குழந்தைகளும் கிடையாது. அதனால் எவ்வளவு வசதிகள் இருந்தும் இப்பொழுது நான் தனியாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. அதனால் உங்களை இங்கு தங்க அனுமதித்து அக்கம்பக்கத்தில் உள்ளோர்க்குத்தெரிந்தால் தவறாகப்பேசுவார்கள். அதனால் தான் யோசிக்கிறேன்” என்றாள்.
“அதுவுமினறி இங்கே ஒரே ஒரே ரூம்தான் இருக்கிறது. அதில் நான் படுத்துக்கொண்டு தூங்குவேன்்அப்படி இருக்க ….” என்றாள்
“நீங்கள் எங்களைப்பற்றி கொஞ்சம்கூட பயப்பட வேண்டம். எங்களால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது. நாங்கள் இருவரும் ஜென்டில்மென்” என்றான, சோமு.
“அப்படியானால் அந்த மாட்டுக் கொட்டிலில் படுத்துக்கொள்ளுங்கள். இப்போது அது காலியாகத்தான் இருக்கிறது. ஆனால் அங்கு கட்டில் கிடையாது. தரையில்தான் படுத்துக்கொள்ள வேண்டும்” என்றாள்.
“எங்களுக்கு அது ஒரு பிரச்சினை இல்லை. நாங்கள் கீழே படுத்துத்தூங்கி வளர்ந்தவர்கள்தான்” என்றான் சோமு.
சரி. இவற்றை எடுத்துக்கொண்டு போய் உபயோகப்படுத்தித் தூங்குங்கள் என்று அவ்களுக்கு இரண்டு பாய்களும் போர்வைகளும் கொடுத்து அனுப்பினார். அவர்களும் அவற்றைப்பெற்றுக்கொண்டு பக்கத்திலிருந்த கொட்டிலில் போய்ப்படுத்தார்கள். படுத்து நன்றாக தூங்கி விட்டார்கள்.
அவர்களில் சோமு கண்விழித்தபோது நன்கு விடிந்திருந்தது. மழை ,காற்று எல்லம் ஓய்ந்திருந்தது. அவன் தாமுவை எழுப்பி
“நாம் கிளம்பும் நேரம் வந்துவிட்டது. ஆனால் அந்தப் பெண்ணிடம் சொல்லாமல் எப்படிக்கிளம்புவது?” என்று கேட்டான்.
“நாம் இங்கிருந்து முதலில் கிளம்புவோம் ஊரார் பார்ப்பதற்கு முன்னால். அந்தப்பெண்ணைப்பத்தி யாரும் தவறாக எண்ணக்கூடாது இல்லையா?, இந்த இடத்தின் விலாசத்தை நான் குறித்து வைத்துக்கொண்டு இருக்கிறேன். நாம்இங்கிருந்து போன பின் அந்தப்பெண்ணுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதிவிடுவோம் என்றான்.
ஆனால் அந்தப்பெண்ணின் பெயர்?
“அவங்க பேர் மல்லிகா” தாமு சொன்னான்
“உனக்கு எப்படித்தெரியும்?” சோமு கேட்டான் .
அவர் நேற்று இரவு கதவைத்திறந்தபோது அவரின் பெயரையும், விலாசத்தையும் அங்கு “அவர் சுவற்றில் தொங்க விட்ட ஒரு காலண்டரில் பார்த்தேன்” தாமு.
“என்கண்ணில் படவில்லையே” சோமு
“நீ அவருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது, நான் அந்த வீட்டின் உட்புறமாக ஒரு நோட்டம் விட்டேன். அப்போது கிடைத்ததுதான் இந்தத்தகவல்” தாமு.

இருவரும் புறப்பட்டனர். சொன்னது போல் மறுநாள் நன்றி தெரிவித்து ஒரு கடித்த்தை சோமு போஸ்ட்செய்தான். அவர்கள் இருவரும் அவர்கள் சென்ற பண்ணையில் சந்தோஷமாகப் பொழுதைக்கழித்தனர்.

ஒன்பது மாதங்கள் கழிந்தன.
அப்போது சோமுவுக்கு அந்தப் பெண் மல்லிகாவிடமிருந்து அவர் வக்கீல் மூலமாக ஒரு கடிதம் வந்தது.
சோமுவுக்குப் பக்கென்றது. அக்கடிதத்தைத் திறந்து பார்க்கக்கூடிய துணிவு சோமுவுக்கு இல்லை.
“வக்கீலுடமிருந்து சரியாக ஒன்பது மாதத்துக்குப் பிறகு ஒரு கடிதம் வருகிறதே. ஏதோ இது ஒரு வில்லங்க சமசாரமாகத்தன் இருக்கும் இது ”என்று பயந்தான்.
அந்தப்பயத்தில் கடிதத்தைத் திறந்து பார்க்க அவன் மனசு நடுங்கியது. கொஞ்சம்தன்னைத்தைரியப்படுத்திக்கொண்டு
“தாமு நாம் ஒன்பது மாதங்களுக்கு முன் ஒரு புயல் மழையில் சிக்கி ஒரு நாள் இரவு ஒரு பெண் வீட்டுல் தங்கினோமே , நினைவிருக்கிறதா?” சோமு கேட்டான்
ஓ, நினைவு இருக்கிறதே. அதை ஏன் இப்போது நினைவு படுத்துகிறாய்?” தாமு
“அன்று நீ எனக்குத் தெரியாமல் அந்த வீட்டினுள் நள்ளிரவில் நுழைந்தாயா? சோமு
“ஆம்” என்றான் உதறல் எடுத்தபடி தாமு. “ அந்தப்பெண் நமக்காக கதவை த் திறந்துவிட்டு நாம் சென்ற பிறகு மூட மறந்துட்டா.” தாமு
“நீ அப்போது ஏதாவது தவறு செய்தாயா?” சோமு தயங்கியபடி பதில் சொன்னான்
“இல்லை. ஒருமழையினால் வீட்டிற்குள் நுழைந்த ஒரு பாம்பு அந்தப்பெண்படுத்திருந்த கட்டிலின் மீது ஊரும் போது, அவளை எழுப்பி அந்த கொடிய விஷப் பாம்பை அடித்து…”.. தயங்கினான் தாமு
“உனக்கு எப்படித்தெரியும், அந்த நேரத்தில் அங்கு பாம்பு வந்தது?”
“எதனாலோ அவ்வாறு தோன்றிற்று?” .
ஆனால் ஒரு நிமிஷம் அவனுக்குத்தோன்றிய தவறான எண்ணத்தை மறைக்கத் துணிந்து பொய்சொன்னான்..
“ஆச்சரியமாக இருக்கிறதே” சோமு
“அந்தப்பெண் எனக்கு நன்றி சொன்னாள். இருந்தாலும் அந்த வேளையில் அங்கு நான் வந்தது பற்றி அவளுக்கு சந்தேகம்தான். ” தாமு .
.“வேறு ஏதாவது பேசினாயா இல்லையா?.. “ சோமு
“பேசினேன். அவள் பெயர், விலாசம் கேட்டேன். அவள் கொடுத்தாள் ,” தாமு
“பிறகு?”
..அவள் கேட்டபோது நான், என் பெயருக்குப் பதிலாக உன் பெயரைக் கொடுத்தேன்“.
“ ஏன் அவ்வாறு செய்தாய்?” சோமு
“ஆம். ஏதோ ஒரு பயத்தினாலும், அப்போது ஏற்பட்ட பதட்டத்தினாலும் அவ்வாறு செய்தேன்” என்று ஒப்புக்கொண்டான் தாமு
“அதனால் உனக்கு அனுப்பவேண்டிய சம்மனை எனக்கு அனுப்பி இருக்கிறார் வக்கீல்” சோமு.
“ நீ அந்தப பெண்ணை காப்பாற்றி இருக்கிறாய் என்றால், வக்கீல் எதற்காக இந்த நோட்டீசை அனுப்ப வேண்டும்? வேறு ஏதோ நடந்து இருக்கிறது. தாமு அதைத்தன்னிடம் மறைக்கிறான் ” என்று நினைத்தபடி
.“அந்தக் கடிதத்தை இப்போது பிரித்துப் படிக்கப்போகிறேன்.அந்த நோட்டீஸ் எதற்குத்தனக்கு அந்த வக்கீல் அனுப்பி இருக்கிறார், தெரியவில்லையே ? ”என்று சொல்லி கடிதத்தைப் பிரித்துப்படித்தான் சோமு.
தன் கண்ணையே அவனால் நம்பவே முடியவில்லை.

அந்தப்பெண் தன் சொத்து பூராவும் அன்று நடு நிசியில் தன்னைக்கப்பாற்றிய சோமுவுக்கு என்று எழுதி வைத்திருந்தாள்.
ஒரு நிமிட கெட்ட எண்ணத்தால் தனக்குக்கிடைக்க வேண்டிய ஒரு அதிர்ஷ்டத்தை இழந்து விட்டதை நினைத்து வாயடைத்துப்போனான் தாமு.

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (13-Jan-22, 6:35 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 229

மேலே