தூக்கமோ தூக்கம்
தூக்கமோ தூக்கம்
தூக்கம்
அழுமூஞ்சி, விடியா மூஞ்சி, தூங்குமூஞ்சி போன்ற அடைமொழிகளை நாம் வீட்டுக்கு வீடு கேட்டிருப்போம். ஒவ்வொரு வீட்டிலும் இந்த மூன்றில் ஏதாவது ஒரு மூஞ்சி கட்டாயம் இருக்கும். அழுமூஞ்சி தெரியும், தூங்கு மூஞ்சி தெரியும். அதென்ன விடியா மூஞ்சி. அதென்ன தூங்கு மூஞ்சியின் எக்ஸ்டென்ஷனா? தூக்கம்
அது சரி. தூக்கத்துலே எங்கேயோ போயிட்டேனே. நமக்கு எல்லாம் தெரிஞ்ச சமாசாரம்தான். அந்தக்காலத்திலேயே காலட்சேபத்துக்கு போனவங்க தூங்கி வழியறதைக் கதை கதையா சொல்லுவாங்க. ஒருத்தர் கதாகாலட்சேபம் முடிஞ்ச உடனே சீதைக்கு ராமன் சித்தப்பாவான்னு கேட்டதாகவும், கதாகாலட்சேபம் ரெண்டு ஆள் கனம் இருந்ததாகவும் நம்ம வீட்டு தாத்தா பாட்டிகளே சொன்னதைக்கேட்டது இல்லையா? எனவே கதா காலட்சேபத்துக்கும் தூக்கத்துக்கும் அப்படி ஒரு நெருக்கமான பந்தமோ, சொந்தமோ, த்வந்தமோ இருக்குன்னு தெரியல்லியா? கதா காலட்சேபம் கேக்கப்போகிற பத்துலே எட்டுப்பேர் எனக்கு தூக்கமே வரமாட்டேன்னு சொல்றவங்கதான் கதாகாலட்சேபங்கள்லே குறட்டைவிட்டுத் தூங்கறவங்க இவங்க தான். இப்படித் தூங்கறவங்க, அப்பப்போ திடீர், திடீர்னு முழிச்சிக்கிட்டு எங்கே இருக்கோம்னு தெரிஞ்சிக்கவே கொஞ்ச நேரம் ஆகும். நாம மகாபாரதம் கதையைத்தானே கேக்க வந்தோம், பாகவதர் ராமாயணக்கதையை சொல்லிண்டு இருக்காரேன்னு சந்தேகம் பல நேரம் வந்துடும். ஏன்னா, இவருக்குத்திடீர் முழிப்பு வந்த நேரம் பாகவதர் பீமனை அனுமார் சோதனை பண்ற கதையை சொல்லிண்டு இருப்பார். அதனாலே இவருக்கு ஒரே குழப்பம்.
அவ்வளவு தூரம்போவானேன். நாமெல்லோரும் ஸ்கூலோ , காலேஜோ போய்க்கொண்டிருந்தபோது எத்தனை பேர் கிளாசுலே தூங்கி இருப்போம். பாடம்தான் நம்மை தூங்க வைக்கும்கிறதுங்கிறது இல்லே, சில பேரோட மேடைப்பேச்சும், லெக்சருமே நமக்குப்பரமானந்தமா தூக்கத்தை வரவழைக்கும். ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் கிட்டே நான் எனக்கு தூக்கம் வராததைச் சொன்னபோது , அவன் சொன்னான் நீங்க மாத்திரம் எங்க புரொபசர் லெக்சரைக்கேட்டீங்கன்னா,உங்களுக்கு தூக்கம் என்ன, மயக்கமே வந்துடும்னு.
பஜனைத் தூக்கம,
நான் பார்த்து இருக்கேன். பஜனையில் ஒரு மரியாதைக்காகக் கலந்து கொள்பவர்களும் உண்டு. அந்த சுண்டல் அல்லது ஒரு பிரசாதத்துக்காக மட்டும் கலந்து கொள்பவர்களும் உண்டு . இவர்களுக்கு அதில் ஆத்மார்த்த ஈடுபாடு இல்லை என்று சொல்ல முடியாமல் அப்படிச் சொன்னால் தன்னைத் தவறாகப் புரிந்து கொணடு விடுவார்களோ என்ற ஜென்டில்மான்லினெஸ் காரணமாக பஜனை, பூஜை, போன்ற விசேஷங்களில் கலந்து கொள்வதுண்டு. இவர்களை அவர்கள் அறியாதவாறு கவனித்தால் அவர்கள் படும்பாடு உங்களுக்குப்புரியும். ஸ்கூல் மாணவர்களுக்காவது கையை வைத்துக் கொண்டு தூங்க வசதியாக டெஸ்க் இருக்கிறது. இவர்களில் பலர் தரையில் உட்கார்ந்து கொள்வதே சிரமம். அப்படி உட்கார்ந்து கொண்டு தன்னைச்சுற்றிலும் இருப்பவரகளுக்குத்தெரியாமல் தூங்குவது என்பது ஒரு வகையான சித்திர ( குப்த) வதை.
கதாகாலட்சேப தூக்கம்
அது சரி. தூக்கத்துலே எங்கேயோ போயிட்டேனே. நமக்கு எல்லாம் தெரிஞ்ச சமாசாரம்தான். அந்தக்காலத்திலேயே காலட்சேபத்துக்கு போனவங்க தூங்கி வழியறதைக் கதை கதையா சொல்லுவாங்க. ஒருத்தர் கதாகாலட்சேபம் முடிஞ்ச உடனே சீதைக்கு ராமன் சித்தப்பாவான்னு கேட்டதாகவும், கதாகாலட்சேபம் ரெண்டு ஆள் கனம் இருந்ததாகவும் நம்ம வீட்டு தாத்தா பாட்டிகளே சொன்னதைக்கேட்டது இல்லையா? எனவே கதா காலட்சேபத்துக்கும் தூக்கத்துக்கும் அப்படி ஒரு நெருக்கமான பந்தமோ, சொந்தமோ, த்வந்தமோ இருக்குன்னு தெரியல்லியா? கதா காலட்சேபம் கேக்கப்போகிற பத்துலே எட்டுப்பேர் எனக்கு தூக்கமே வரமாட்டேன்னு சொல்றவங்கதான் கதாகாலட்சேபங்கள்லே குறட்டைவிட்டுத் தூங்கறவங்க இவங்க தான். இப்படித் தூங்கறவங்க, அப்பப்போ திடீர், திடீர்னு முழிச்சிக்கிட்டு எங்கே இருக்கோம்னு தெரிஞ்சிக்கவே கொஞ்ச நேரம் ஆகும். நாம மகாபாரதம் கதையைத்தானே கேக்க வந்தோம், பாகவதர் ராமாயணக்கதையை சொல்லிண்டு இருக்காரேன்னு சந்தேகம் பல நேரம் வந்துடும். ஏன்னா, இவருக்குத்திடீர் முழிப்பு வந்த நேரம் பாகவதர் பீமனை அனுமார் சோதனை பண்ற கதையை சொல்லிண்டு இருப்பார். அதனாலே இவருக்கு ஒரே குழப்பம்.
அவ்வளவு தூரம்போவானேன். நாமெல்லோரும் ஸ்கூலோ , காலேஜோ போய்க்கொண்டிருந்தபோது எத்தனை பேர் கிளாசுலே தூங்கி இருப்போம். பாடம்தான் நம்மை தூங்க வைக்கும்கிறதுங்கிறது இல்லே, சில பேரோட மேடைப்பேச்சும், லெக்சருமே நமக்குப்பரமானந்தமா தூக்கத்தை வரவழைக்கும். ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் கிட்டே நான் எனக்கு தூக்கம் வராததைச் சொன்னபோது , அவன் சொன்னான் நீங்க மாத்திரம் எங்க புரொபசர் லெக்சரைக்கேட்டீங்கன்னா,உங்களுக்கு தூக்கம் என்ன, மயக்கமே வந்துடும்னு.
பஜனைத் தூக்கம,
நான் பார்த்து இருக்கேன். பஜனையில் ஒரு மரியாதைக்காகக் கலந்து கொள்பவர்களும் உண்டு. அந்த சுண்டல் அல்லது ஒரு பிரசாதத்துக்காக மட்டும் கலந்து கொள்பவர்களும் உண்டு . இவர்களுக்கு அதில் ஆத்மார்த்த ஈடுபாடு இல்லை என்று சொல்ல முடியாமல் அப்படிச் சொன்னால் தன்னைத் தவறாகப் புரிந்து கொணடு விடுவார்களோ என்ற ஜென்டில்மான்லினெஸ் காரணமாக பஜனை, பூஜை, போன்ற விசேஷங்களில் கலந்து கொள்வதுண்டு. இவர்களை அவர்கள் அறியாதவாறு கவனித்தால் அவர்கள் படும்பாடு உங்களுக்குப்புரியும். ஸ்கூல் மாணவர்களுக்காவது கையை வைத்துக் கொண்டு தூங்க வசதியாக டெஸ்க் இருக்கிறது. இவர்களில் பலர் தரையில் உட்கார்ந்து கொள்வதே சிரமம். அப்படி உட்கார்ந்து கொண்டு தன்னைச்சுற்றிலும் இருப்பவரகளுக்குத்தெரியாமல் தூங்குவது என்பது ஒரு வகையான சித்திர ( குப்த) வதை.
ஸ்கூல்ப்ரொபசர் பற்றி
எனக்கு ஒரு டௌட். LKG, UKG படிக்கிற குழந்தைங்க கிளாஸிலே தூங்கினா வாத்தியார்கள் எப்படி சமாளிக்கிறாங்க? எனக்குத் தெரிஞ்ச ஒரு சின்னப்பொண்ணை வாத்தியார் கிளாஸுலே தூங்காதேன்னு சொன்னதுக்கு, நீங்க இவ்வளவு பலமா பேசறதாலே என்னாலே தூங்க முடியல்லன்னு சொல்லி வாத்தியாரோட சௌண்டை குறைக்கச்சொன்னதாம். ஆக LKG யிலிருந்து MA , MSc கிளாஸ் வரையிலும் இந்த கிளாஸுலே தூங்கற விஷயம் யாரும் சொல்லித்தராமலே பரவி இருக்கு. நான் ஸ்கூல்லே படிக்கும்போது ஒரு வாத்தியார் ஒரு பையனைக்கூப்பிட்டு புத்தகத்துலே அன்னிக்கு நடத்த வேண்டிய பாடத்தைப் படிக்கச் சொல்வார். பையன் படிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலேயே வாத்தியார் ஆனந்தமா தூங்க ஆரம்பிச்சிடுவார். வாத்தியார் தூங்கறாரேன்னு பையங்க கசமுசன்னு சத்தம்போட்டா வாத்தியாருக்குக்கோபம் வந்துடும் அவர் தூக்கம் டிஸ்டர்ப் ஆவதை நெனச்சி்.
ஒர அம்மா தன் மகனை “டேய்ஸ்கூலுக்கு நேரம் ஆறதே”ன்னு எழுப்பினாராம். ஆனா அந்த அம்மாவோட பிள்ளை “என்னைத் தொந்தரவு பண்ணாதே அம்மா. இன்னிக்கு நான் ஸ்கூலுக்குப்போகல்லைன்னு” சொன்னதுக்கு. “எழுந்திருடா. ஸ்கூல் ஹெட்மாஸ்டரான நீயே இப்படிப் பண்ணினா மத்தவங்களை நீ எப்படிடா கண்டிப்பே?” அப்படின்னாராம்.
ஒரு கிளாசிலே வாத்தியார் “யார் ஒருத்தர் ஒரு வேலையை ஆரம்பிககிறாரோ அவர்தான் தான் ஆரம்பிச்ச வேலையை நடுவுலே விட்டு விடாம செஞ்சி முடிக்கணும்”னு ஒரு நியாயத்தை சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கும்போது ஒரு பையன் தூங்கிக்கிட்டு இருந்தான். அதைப்பார்த் ஆசிரியருக்கு கோபம் வந்தது. தூங்கிக்கிட்டு இருந்த பையனுக்கு அடுத்த சீட்டுலே உக்காந்திருந்த பையனைக்கூப்பிட்டு தூங்கிக்கிட்டு இருந்த பையனை எழுப்பச்சொன்னாராம். அதுக்கு அந்தப்பையன் “இப்பதான்சார் நீங்க டீச் பண்ணினீங்க். ஒரு வேலையை யார் ஆரம்பிக்கிறாங்களோ அவங்க தான் அதை முடிக்கணைம்னு. நீங்க தான் அவன் தூக்கத்தை ஆரம்பிக்க காரணம். அதனாலே நீங்களேதான் அவனை எழுப்பணும்,. அதுதான் நியாயம்” னு சொன்னானாம். இப்படி ஸ்கூல் தூக்கத்தைப்பத்தி பல கதைகள் உண்டு.
நான் ஆசிரியராக இருக்கிறதாலே சமயத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் லெக்சர் எடுக்க வேண்டி இருக்கும். அப்பொழுது ஓரிருவர் அரை குறையாக கண்சுழன்று மிகவும் கஷ்டப்பட்டு வரவிருந்த அல்லது வந்து கொண்டு இருக்கும் தூக்கத்தை கட்டுப் படுத்த முடியாமல் தவியாய் தவிப்பார்கள். ஒருவர் பேசும்போது இன்னொருவர் தூங்கினால் , யாருக்குத்தான் கோபம் வராது?. இந்த நிலையைத்தவிர்ப்பதற்காக நான் அவ்வப்பொழுது பாட சம்பந்தமான ஜோக்குகளை அடிப்பது வழக்கம். அப்போது முழித்துக் கொண்டு இருப்பவர்கள் பலமாக சிரிக்க , நித்ராதேவியின் பிடியில் இருப்பவர்கள் இந்த யோக நித்திரை திடீரென்று கலைந்த பதட்டத்தில் ஒரு குலுங்கி குலுங்கி எழுவார்கள். அது நான் அடிக்கும் ஜோக்கைவிட சிறப்பாக, சிரிப்பாக இருக்கும்.
ஒரு சமயம் என்னை ஒரு பதினைந்து நாள் ரெப்ரஷர் கோர்ஸுக்கு ( Refresher course) அனுப்பினார்கள். . அப்போது பல எக்ஸ்பர்ட்ஸ் சிறப்பு லெக்சர் எடுத்தார்கள். அதுவும் மதியம் சாப்பிட்டவுடன் லெக்சர் கேட்பது போன்ற ஒரு சித்திர வதை எதுவும் கிடையாது. எனக்கு அடக்கமுடியாத தூக்கம் வந்தது.. ஆனாலும் தூங்க முடியாமல் நான் கண்களைக் கொட்டக் கொட்ட விழித்திருப்பதற்காக நான பட்ட பாட்டை நினைத்தால் எனக்கே பரிதாபமாக இருந்தது. அப்போதுதான் என்ஸ்டூடண்ட்ஸ்மீது எனக்குப் பரிதாப உணர்ச்சியும் அனுதாபமும் ஏற்பட்டது. அதனால்தான் பெரும்பாலான காலேஜ்களிலும் , ஸ்கூல்களிலும் மத்தியானம் , லேபரடரி பிராக்டிகல்ஸ் , பி.டி ஆக்டிவிடி, டிரில,, கேம்ஸ் என்று வைத்து லெக்சர்களை குறைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் ஹிஸ்டரி ஸ்டூடண்டுக்கு எப்படியோ?
அவனும் இவனும் கிபி இத்தனை யாவது வருஷத்துலே இன்ன காரணத்துக்காக அல்லது காரணம் இல்லாமலே சண்டை போட்டாங்கங்கிற ஊர்வம்பை மத்தியான நேரத்தில் கேட்டு தூங்காதவன் எவனாவது இருக்க முடியுமோ?. இந்த நாட்டு அரசனுக்கும் அந்த நாட்டு அரசனுக்கும் இடையிலே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது எப்படிங்கறதை இந்த ஸ்டூடண்ட் அரைத்தூக்கத்துலே உடன் படுக்கை ஏற்பட்டதுன்னு கேட்டு தன்னோட தூக்கத்தை தொடர ஆரம்பிச்சுடுவான். 1215 வருடம் மாக்னாகார்டாவின் விளைவு என்ன, மிண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்னா என்ன, ஜாலியன்வாலாபாத்படுகொலையை செஞ்ச பாவி யார்? டல்ஹௌஸியின் டாக்டரின் ஆப் லாஸ்னா என்ன?மதர்இன் லாஸ், டாட்டர் இன் லாஸ் கேள்விப் பட்டு இருக்கோம். இதென்ன புது மாதிரியான சொந்தங்கள் என்று அரைகுறை தூக்கத்திலே எழுந்த மாணவனுக்கு சந்தேகம் வருமா வராதா?
அவர்களுக்கு பிராக்டிகல்ஸ் எப்படி நடத்துவார்கள்? யாராவது இருவருக்கு ராஜா வேஷம் போட்டு அட்டைக்கத்தியைக் கொடுத்து சண்டை போடச்சொல்லுவார்களா தெரியவில்லை. அல்லது ஹிஸ்டரி சம்பந்தமான படத்தைப்போட்டு தூங்க வைப்பார்களா தெரியவில்லை.
இப்படி ப்பட்ட விஷயங்களை எந்த நேரத்தில் பேசினாலும் எப்பேர்ப்பட்ட இன்சோம்னியா பேஷண்டுக்கும் தூக்கம் என்ன, மயக்கமே வரும். நல்ல வேளையா சயன்ஸ மாணவர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை.
மேலும் ஒரு லெக்சர் எவ்வளவு இன்டரஸ்டிங்காக இருந்தாலும், ஒருவருடைய குரலை தொடர்ந்து ஒரு மணி் நேரத்துக்கு மேல் விடாமல் கேட்டுக்கொண்டு இருப்பது போன்ற பனிஷ்மெண்ட் உலகத்துலே வேறு எதுவும் கிடையாது. போதாததற்கு 60 வருடங்களுக்கு முன் படித்தவர்களைவிட இந்தக்காலத்து சயனஸ் மாணவர்களோ, சரித்திர மாணவர்களோ அதிகமாகப்படித்துத் தொலைக்க வேண்டி இருக்கிறது. அதை நினைக்கும்போது எனக்கு மாணவர்கள் மீது இன்னும் பரிதாபம் அதிகமாக ஏற்படுகிறது.
ஒரு சமயம் ஒரு புரொபசரும் அவர் மாணவரும் ஒரு விபத்தில் இறந்து போனார்கள். இருவரும்
சித்திர குப்தன் முன் நிறுத்தப்பட்டனர். . மாணவனைப்பார்த்து “ நீ சொர்க்கத்திற்குப் போ “ என்றான் சி. குப்தன். புரொபசரைப்பார்த்து “உனக்கு நரகம்தான்” என்றான். “இதென்ன அனியாயம? நான் சொல்லிக்கொடுக்கும் ஒரு புனிதமான காரியத்தை செய்து வந்து இருக்கிறேன். எனக்கு நரகம் என்கிறாய். என் வகுப்பில் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டு இருந்தவனுக்கு சொர்க்கமா?” என்று கேட்க, சித்திரகுப்தன் “மாணவன் உங்க லெக்சரைக்கேட்டு ஏற்கனவே நரகத்தை அனுபவித்து விட்டான். அவன் தூக்கத்தைக்கெடுக்கும் விதமாக நீங்கள் உங்கள் பயங்கரத் தொண்டையை பயன்படுத்திப் பேசி பலருடைய தூக்கத்தைக்கெடுத்த பாவத்தையும் செய்து இருக்கிறீர்அஆ. அதனால் அவனுக்கு விடுதலை அளிக்கும் வகையில் சொர்க்கம். நீங்களோ லெக்சர் என்ற பெயரில் பையன்களை படாத பாடு படுத்தி சந்தோஷப் பட்டீர்கள். இதனால் உங்களுக்கு நரகம்” என்றார்.
ஏற்கனவே சித்திரகுப்தன் ஒரு மத போதகர் விஷயத்தில் இவ்வாறு ஒரு தலைப் பட்சமாக நடந்து கொண்டவர்தானே. தெரியாதா? ஒரு டாக்ஸியில் மதபோதகர் போய்க்கொண,டு இருந்தார். வண்டி விபத்துக்குள்ளானது. டாக்ஸி டிரைவரும் மதபோதகரும் இறந்து விட்டனர். அப்போதும் சித்திர குப்தன் டிரைவரை சொர்க்கத்திற்கு அனுப்பிவிட்டு , மதபோதகரை வெயிட்டிங் லிஸ்டில் வைத்து இருந்தார்.
கேட்டதற்கு “மத போதகர் கடவுளைப்பற்றி எவ்வளவு பேசினாலும் அதை தூங்காமல் கேட்டு பயன் அடைந்தவர்கள் கொஞ்சம்பேர்தான் . ஆனால் இந்த டாக்ஸி டிரைவர் கார் ஓட்டும்போது ஒவ்வொரு முறையும் அதில் பயணித்தவர்களில் கடவுளை வேண்டாதவர்கள் யாருமில்லை. அவர்கள் வேண்டாத கடவுள்களும் இல்லை. . எனவே டிரைவருக்கு சொர்க்கத்தில் இடம். மதபோதகரால் யாராவது பயனடைந்ததாகத்தெரிந்தால் அவரை சொர்க்கத்துக்கு அனுப்புவேன். அது வரையில் அவர் வெயிட்டிங் லிஸ்டில்தான் இருப்பார். அந்த பார்முலாவின்படி இப்ப மாணவன் சொர்க்கத்திற்கும் ஆசிரியர் நரகத்திற்கும்” என்றார் சித்திரகுப்தன்.
“என்னை வெயிட்டிங் லிஸ்டில் வைக்காமல் .நரகத்துக்குத் தள்ளுவானேன்” என்று ஆசிரியர் கேட்க
“மாணவனை தூங்க விடாமல் நோக அடித்தது போக எத்தனை பேரை பரீட்சை என்ற பெயரில் பெயில் ஆக்கி இருக்கிறீர்கள்? அதுதான் உங்களுக்கு நரகம்” என்றார். பூலோகத்திலும் நம்மை மதிப்பார் யாரும் இல்லை. இங்கேயும் இப்படியா என்று பொருமிப்போனார் ஆசிரியர்.
**********************2
கிளாசில் தூக்கம்
வேண்டாத நேரத்தில் தூக்கம் வருவதைப்போன்ற ஒரு சோகம் வேறு எதுவும் இல்லை. ஒரு மாணவன் பரீட்சை ஹாலில் போய் கேள்வித்தாளை கையில் வாங்கி கேள்விகளை பார்த்த மாத்திரத்தில் அவன் தூங்கிப் போக எக்ஸாமினர் அவனை தட்டி எழுப்பி “Time up. பரீட்சை நேரம் முடிந்து விட்டது. பேப்பரைக்கொடு” என்றார். பையன் திடுக்கிட்டு எழுந்து “அதற்குள்ளா டயம் ஓவர்?” என்று பதறிப்போய்கேட்க, “ மூன்று மணி நேரம் முழுவதும் இவ்வாறு பரீட்சை ஹாலில் தூங்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஒரே மாணவன் நீ தான்” என்றாராம். எதையோ எழுதி பெயில் ஆவதைவிட கின்னஸ்சாதனை செய்ததில் அவன் மகிழ்ந்து போனான். ஆசிரியரோ, “இந்த மாதிரி பரீட்சை ஹாலில் நுழைபவர்கள் எப்போதும் பயங்கர டென்ஷனில் இருப்பார்கள். உன்னால் எப்படி இவ்வளவு அமைதியாய் தூங்க முடிந்தது?” எனறு கேட்க, பையன் சொன்னான் “எங்க அப்பா பரீட்சை ஹால்லே போய் திரு திருன்னு முழுச்சிக்கிட்டு இருக்காதேன்னு க்ளூ கொடுத்து இருந்தார். அதனால் அவ்வாறு முழித்தேன் என்ற கெட்ட பெயர் வராதவாறு தூங்குவது என்று முடிவு செய்தேன். சரிதானே” என்று ஆசிரியரிடமே சொன்னானாம்.
ஒரு மாணவன் வகுப்பு ஆரம்பித்தவுடன் அது எந்த நேரமாக இருந்தாலும்சரி வஞ்சனை இல்லாமல் தூங்க ஆரம்பிச்சுடுவான். அவன் தூங்கறது அதிசயமும் இல்லை, பிரச்சினையும் இல்லை. அவனோட அப்பாவை அழைச்சு
“உங்க பையன் இப்படி கிளாசுலே தூங்கறான். அப்படி இருந்தா படிப்பு எப்படி வரும்? னு கேட்டதுக்கு .
“அவன் ஏதோ தப்புத்தண்டா வேலை செஞ்சிட்டானோன்னு பயந்துட்டேன். தூங்கறது ஒரு தப்பா? வளருற வயசுலே இதெல்லாம் சகஜம்தான்”. என்றார் பையனின் அப்பா.
“ஆனா அவன் வகுப்பிலே குறட்டை விடறான் அதுதான் பிரச்சினை. அவன் விடற குறட்டையாலே மத்த மாணவங்க படிப்பு கெட்டுப்போகுது”ன்னு சொன்னதுக்கு
“நீங்க அவனை குறட்டை விட்டு தூங்கற அளவுக்குப் சொல்லித்தரது உங்க தப்புதான். முதல்லே யாருக்கும் தூக்கம்வராதபடி பாடம் சொல்லிக் கொடுக்க நீங்க கத்துக்குங்க. உங்க மேலேதான் தப்பு” ன னுட்டார்.
அப்புறம் வாத்தியார் பேசமுடியுமா? , அதுவும் இல்லாம வந்தவர் அந்த ஊரிலே ஒரு பெரிய கட்சியோட தலைவர். சட்ட சபையிலே தூங்கறவர். அவரை எதுத்துப் பேசினா எங்கேயாவது தண்ணி இல்லாக்காட்டுக்கு மாத்திட்டா என்ன பண்றதுன்னு அந்த ஆசிரியர் கப்புன்னு அடங்கிட்டார்.அவருக்கு அன்றைய ராத்திரி தூக்கம் பணால்.
TV தூக்கம்
இதைத்தவிர TV மெகா சீரியல்கள்பலருக்கும்நல்ல தூக்கத்தைக்கொடுத்து பெரும் சேவை செய்கின்றன. என்னைப்போன்ற மாடரேட் இன்சோம்னியா இருப்பவர்களுக்கு டி.வி, போன்ற ஒரு வரப்பிரசாதம் வேறு கிடையாது. நான் TV முன்னால் உட்கார்ந்துகொண்டு ஒரு சீரியலைப் பார்க்க ஆரம்பிப்பேன்,ஒரு 15 நிமிடம் ஆகி இருக்கும் . அவ்வளவுதான் தூங்கி விடுவேன். திடீரென்று விழித்துக்கொண்டு TV பார்க்கும்போது அடுத்த சீரியல் போய்க் கொண்டு இருக்கிறதா என்ற ஆச்சரியத்தில் கொஞ்ச நேரம் திகைத்துப் போவேன்.அடுத்த அடுத்த சீரியலில் அதே நடிகையோ, நடிகரோ வந்தால் படு குழப்பம். இதற்கிடையில் அவருக்குப்பதில் இவர் என்று சொல்லி தலையையே கிறுகிறுக்கவைத்து ஒரு வழி பண்ணிவிடும் நம்ம TV. சரி. மணி பத்தாகிவிட்டது. TVயை அணைத்துவிட்டு படுக்கை அறைக்கு சென்று படுத்தால் தூக்கம் முற்றிலுமாகக் கலைந்து விடும், மறுபடியும் இரண்டு மணி நேரமாவது ஆகும் திரும்பவம் தூக்கம் வர.
இன்று என் காது என்னை டிவி கேட்காதவாறு தடுத்துவிட்டதால் இப்பொழுதெல்லாம் நான் தூக்கம் வர இரவு 9 மணிக்குமேல், ஸ்பைடர் , ஃப்ரீ செல், எக்ஸ்பர்ட் சுடோகு ஆகிய விளையாட்டின் துணையை நாடுகிறேன். இவற்றை விளையாடும்போது வரும்தூக்கத்துக்குமுன் தூக்க மாத்திரைகள் வெறும் சோணங்கிகள். சில அதிர்ஷ்டசாலிகள் கதை அல்லது எந்த மாதிரியான புத்தகத்தை கையில் எடுத்தாலும் அவர்கள் சொக்கி விழுவதைப்பார்த்தால் இன்சோம்னியாவே பயப்படும்.
பார்லிமெண்ட் தூக்கம்
ஒரு தரம் 1952ம் வருஷம். ஸ்டூடண்ட்ஸ் நாங்க எல்லாம் டூர்லே டெல்லி போன போது அப்போ இருந்த தமிழ்நாட்டு M.P. கிட்டே பெர்மிஷன் வாங்கி டெல்லியில் பார்லிமெண்ட் செஷன்ஸ் நடக்கும்போது அதை விசிட்டர்ஸ் காலரியில் உட்கார்ந்தபடி அடெண்ட் பண்ணினோம். மொழிவாரி மாகாணப்பிரிவினைப்பற்றிய விவாதம் நடந்து கொண்டு இருந்த காலம். அப்போ நான் ஹீரோ வொர்ஷிப் செய்து வந்த நேரு, நான் வரது தெரியாமல் பேசிக்கிட்டு இருந்தார் . இன்னிய மாதிரி எந்தக்கூச்சலும்குழப்பமும் இல்லை அன்றைக்கு பார்லிமெண்ட், ரொம்பவும் அமைதியா நடந்து கொண்டு இருந்தது. (என்ன , நம்ப முடியலையா? அப்படி. ஒரு காலம் இருந்தது என்பதே நேரிலே பார்த்தவன் என்ற முறையிலே நான் கூறுகிறேன் ) . ரொம்பவும் சீரியசா நேரு மொழிவாரி மாகாணம் பிரிப்பது குறித்து பேசிக்கிட்டு இருக்கார். அப்போ அது ரொம்பவும் ஹாட் நியூஸ். அப்போ அவையிலே நிறைய பேர் தூங்கிக்கிட்டு இருந்ததை நான் என் தூங்காத என் ரெண்டு கண்ணாலே பாத்தேன். அவர் பேச்சு முடிஞ்சதும் விழிச்சிக்கிட்டு இருந்த MPக்கள் சில பேர் கைதட்ட, தூங்கிக்கொண்டு இருந்த பல MPக்களும் திடுக்கிட்டு கண்முழிச்சி அவர்கள்முன்னால் இருந்த மேஜையைத் தட்ட ஆரம்பிச்சாங்க. அப்பொழுதுதான் தெரிந்தது, தூக்கங்கிறது அனைத்துக்கட்சியினருக்கும் எல்லா மக்களுக்கும்சொந்தமானது, தவிர்க்க முடியாதது என்று. பெயர்சொல்ல விரும்பல்லே. ஒரு முன்னாள் பிரதமர் பார்லிமெண்ட் செஷன்ஸ் நடந்து கொண்டு இருந்த போது தூங்கினது. அதைப்படம்பிடித்துக் காட்டின பல ஊடகங்கள். இது அப்போது விசேஷ செய்தியாக இருந்தது. அதனாலேதானோ என்னவோ இப்போது தூக்கம் வராமல் இருக்க பலரும் பார்லிமெண்டில் ஆரம்பத்திலிருந்து கடைசி வரையில் கடும் ரகளையில் ஈடுபடுகிறார்களோ என்னவோ தெரியவில்லை. இப்ப நம்ம MP க்களுக்கு பார்லிமெண்டில் தூக்கம் வருவதற்கு சான்ஸே இல்லை என்று நினைக்கும்போது எனக்கு ஏற்பட்ட வருத்தத்தில் வரும் என் கொஞ்ச நஞ்ச தூக்கமும் போய் விட்டது.
சினிமா தூக்கம்
சினிமாவுக்குக் காசு கொடுத்து டிக்கட் வாங்கி சினிமா தியேட்டரில் சௌகரியமான சீட்டில் அமர்ந்து கொண்டு சமயத்தில், மூட்டைப்பூச்சி கடிக்கும் ஈடு கொடுத்துக்கொண்டு, அற்புதமாகத்தூங்குபவர்களைப்பார்த்து இருக்கிறேன். அவர்கள் ஒரே படத்தை ஐந்தாறு தடவைக்கு மேல் பார்ப்பதன் மர்மம் எனக்கு அப்போதுதான் புரிந்தது.
இதே போல் இங்கிலீஷ் சினிமாவைப்பார்க்கவேண்டும் என்ற ஆவலில் கதையை முதலிலேயே தெரிந்து கொண்டு போனாலும், அந்த ஆக்சென்டும் , மொழியும் புரியாமல் இரண்டு மணி நேரம் பார்ப்பதும் சித்திர குப்தன் நம்மை கொதிக்கும் கொப்பரையில் போடுவதும் ஒன்றுதான். கண் மூடாமல் இருப்பதற்கு அவர்கள் படும்பாடு இருக்கிறதே, அதற்கு ஈடு இணையான தண்டனை இவ்வுலகில் கிடையாது. ஈரேழு உலகங்களிலும் கிடையாது. இதேபோல் பாட்டுக்கச்சேரிகளிலும் நடப்பது உண்டு. இதெல்லாம் இவர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவத்துக்காக அனுபவிப்பவர்கள்.
அசெம்பிளியிலோ, பார்லிமெண்டிலோ, மந்திரிகளோ, மத்தவங்களோ தூங்கறது எந்த விதமான அதிசயமும் இல்லை. ஆனா அதைக் கொண்டாடுகிற விதத்தில் ஒரு மந்திரி
மரம் நடு விழா கொண்டாட்டத்தில் ஒருமரம் நட்டாராம். என்ன மரம் நட்டார்னு ஊகிச்சி இருப்பீங்களே. கரெக்ட்.அவர்நட்ட மரம் தூங்கு மூஞ்சி மரம். அந்த மரத்தை நட்டு அதுக்கு தண்ணி ஊத்தறதுக்குள்ளே அவர் தூங்க ஆரமபிச்சாராம்.
இப்படி தூங்கறவங்களைப்பத்தி கதை கதையா சொன்னா உங்களுக்கு எல்லாம் நல்லாத்தூக்கம் வரும்.
கச்சேரித்தூக்கம்
நான் ஒரு கச்சேரிக்குப்போயிருந்தேன். கச்சேரி களை கட்டும்நேரத்தில் எனக்கு முன்பாக உட்கார்ந்து இருந்தவர்கள் அத்யந்த நண்பர்கள் போல இருக்கிறது. அவர்களுடைய கச்சேரியைத்தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்குப்பக்கத்தில் ஒருவர் அவர்களை ஒரு மாதிரியாகப்பார்த்தார். பிறகு கச்சேரியில் லயித்துப் போனார். ஒரு இருபது நிமிடங்கள் ஆகியிருக்கும். பாடகரின் ஸ்வர ஆலாபனையில் எல்லோரும் மயங்கி இருந்தார்கள்.இத்தனைக்கும் அவர்நீலாம்பரியில் பாடவில்லை. இருந்தாலும் என்முன்னால் உட்கார்ந்து இருந்த அந்த மூன்றாம் மனிதர் நித்திரையில் ஆழ்ந்தார். ஸ்வர ராகங்களுக்கும், தாளங்களுக்குப்பொருந்தாத எதுக்கும் கட்டுப்படாத வகையில் அவர் குறட்டை விட ஆரம்பித்தார். உடனே அதுவரையில் தனிக்கச்சேரி செய்து வந்த முன் வரிசை இருவரும். குறட்டை விட்டவரை தட்டி எழுப்பி, குறட்டை விடுவதாக இருந்தால் வெளியே போய்தூங்கும். எங்களால் எங்கள் கச்சேரியை செய்ய முடியவில்லை என்பதற்குப்பதில் எங்களால் கச்சேரி கேட்க முடியவில்லை என்று ரொம்பவும் ஹார்ஷாகச்சொன்னவுடன் குறட்டைவிட்டவரின்முகத்தில் சுருதி குறைந்துவிட்டது.
பஸ் தூக்கம்
பிரயாணத்துன்போது வரும் தூக்கத்திற்கு ஈடாக மயக்கத்தை சொல்லலாம். பஸ்ஸில் ஏறி மைலாப்பூரில் இருந்து வட பழனி போகும் அரைமணி நேரத்தில் அதென்னவோ தெரியவில்லை உட்கார சீட் கிடைத்த என்சந்தோஷத்தைக் குலைக்கும் வகையில் என் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் தன் குடும்ப பாரத்தை என்மீது முழுவதும் சுமத்தாமல் தன்தலை பாரத்தை மாத்திரம் என்தோளில் சுமத்திவிடுவார். எந்த பஸ்ஸிலும், எந்த ரூட்டிலும எனக்குப பக்கத்து ஆள் மாத்திரம் கண் துயின்று இதுவரையில் தலை பாரத்தை என்தோளில் போடுபவர்களாகவே இருந்து இருக்கிறார்கள்.
இதேபோல் தொலை தூர இரவு நேர பஸ் பிரயாணத்தில் வரும் தூக்கமோ அதி அற்புதமானது. அதற்கு ஈடு இணையான தூக்கமே கிடையாது. ஒரு தரம் நான் சென்னையில் இருந்து மதுரை செல்ல இரவு பஸ்ஸில் சீட் புக் பண்ணி இருந்தேன். ஆனால் நான் திருச்சியில் இறங்கி அவர்கள் ஏற்பாடு செய்யும் மற்றொரு பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டி இருந்தது. திருச்சிக்கு வண்டி இரவு இரண்டு மணிக்கு போய் சேர்ந்தது.
நான் அங்கிருந்த ஒவ்வொரு பஸ்ஸாக ஏறி இறங்கி கடைசியில் அந்த வண்டி கண டக டர் அரைகுறை தூக்கத்தில் இருந்த எனனை கையைப் பிடித்து இழுத்து அங்கே தயாராக இருந்த ஒரு பஸ்ஸில் ஏற்றி விட்டார்.. அவர் அவ்வாறு செய்யாமல் இருந்து இருந்தால் நான் எந்தப் பட்டினம் போயிருப்பேனோ எனக்கே தெரியாது.
ஆனால் அந்த பஸ் ஏதோ சில காரணங்களுக்காக மதுரை போகாது. வழியில் எங்களை இறக்கிவிட்டுவிடும். வேறு ஒரு பஸ் எங்களை பிக் அப் செய்து மதுரை கொண்டு சேர்க்கும். என்றார்கள். என்ன செய்வது. தலையை உரலில் கொடுத்தாகிவிட்டது. நடக்கிறபடி நடக்கட்டும்னு அரைத்தூக்கத்திலோ அரையே அரைக்கால் தூக்கத்திலோ சமாதானம. செய்து கொண்டு அந்த பஸ்ஸில் அமர்ந்தேன். பட்டப்பகல் என்று சொல்வது போல் அது நட்ட நடு ராத்திரி. தூக்கம் கண்களை சுழற்றி அடிக்கிறது. வண்டி போய்க் கொண்டே இருந்தது. மணி சுமார்நாலு இருக்கும். எல்லோரும் கீழே இறங்குங்கன்னு கண்டக்டர் சொன்னது தான் தாமதம். பலரும் தொப தொப வென்று பெட்டி படுக்கைகளுடன் கீழே இறங்க ஆரம்பித்தார்கள் . அதில் ஒருவர் “சார், எழுந்திருங்க. வண்டி மாறணும்” என்று குரல் கொடுத்தபடி என்னை எழுப்பிவிட்டு இறங்கினார். பஸ் நின்ற இடமோ ஒரு அத்வானம். கும்மிருட்டு. தூக்க வேகத்தில் கீழே இறங்கி அந்த இருட்டில் அங்கிருந்த ரோட்டு ஓரச்சரிவு என் அரைத்தூக்கத்தில் தெரியாமையால் கிடு கிடுவென்று அந்த சரிவில் விழுந்து உருண்டு அதன் அடிவாரத்திற்கே ரோட்டிலிருந்து சுமார் எட்டு அடி கீழே சென்று விட்டேன். “யார் ஐயா, பஸ்ஸை ரோட்டில் இந்த இருட்டில் இவ்வளவு ஓரமாக நிறுத்தியது” என்று சிலர் கத்தி எனக்குக்கைகொடுத்து என்னை கரையேற்றினார்கள். என்முழுத்தூக்கமும் பறந்து போய்விட்டது என்று சொல்லவும் வேண்டுமா? பிறகு சிராய்ப்புகளுடன், வந்த வேறு ஒரு பஸ்ஸில்( பஸ்ஸுக்கு சிராய்ப்பு இல்லை. எனக்குத்தான்) ஏறி மதுரை போய்ச்சேர்ந்தேன். அன்றில் இருந்து இரவு பஸ் பயணத்தைத் தவிர்க்க ஆரம்பித்தேன்.
ஆனால் இப்போது இரவு நேர லக்சரி பஸ்ஸில் தூங்கும் வசதி இருப்பதாகவும், தூங்குபவர்களை, பாட்டு போட்டுத் தூங்க விடாமல் செய்யும் வசதியும் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
ஆனால் காரில்போகும்போது மாத்திரம் என்னை டிரைவருக்குப் பக்கத்து சீட்டில் உட்காரச்சொல்லமாட்டார்கள். எனக்கு வரும் தூக்கத்தைக் கண்டு டிரைவர் சீட்டில் இருப்பவர் தூங்காமல் இருக்க மிகவும் மனத்தெம்பு, மனோதைரியம் வேண்டும். பிறகு கொஞ்ச நாளைக்கு பஸ் பயணம் என்றால் எங்கெங்கே நிற்கும், டாய்லட் வசதி உண்டா என்று கேட்டுத்தான் பஸ் ஏறுவது என்று வைத்துக்கொண்டேன். சாப்பாடு கிடைக்காவிட்டாலும் சமாளித்து விடலாம், டாய்லட் வசதி இல்லை என்றால் சித்திரவதைதான். பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். மேலும் வயதானவர்களுக்கும் பெண்களுக்கும் நீண்ட தூர பயணத்திற்கு பஸ் அவ்வளவு உகந்ததல்ல.
ரயில் தூக்கம்
இந்தக்காலத்து மனுஷங்க கொடுத்து வச்சவங்க. அந்தக்காலத்துலே டிரெயின்லே ரிசர்வேஷன் கிடையாது. எங்க ஊர் ஸ்டேஷன்லே சென்னைக்குப்போகும் ரயில் எல்லாம் அர்த்த ராத்திரியிலே தான் வரும். ஸ்டேஷன்லே வண்டி வருதான்னு பிளாட்பாரத்துலே ஒரு ஓரமா நின்னு தண்டவாளத்தையே பாத்துக்கிட்டு இருப்போம். ஒரு அஞ்சு பத்து நிமிஷம் கூட இருக்காது, ஏதோ ரொம்ப நேரமா காத்திருக்கிற மாதிரி நமக்குத்தோணும். வெகு தொலைவிலே ரயில் இஞ்சின் வெளிச்சம் தென்பட்ட உடன், வெகு நாட்கள் தவம் இருந்து ஆண்டவனே நேராத்தோணினா என்ன சந்தோஷம் வருமோ அப்படிப்பட்ட சந்தோஷம் அங்கே காத்திருக்கிற அனைவருக்குமே. உட்காந்திருப்பவன், தூங்கிக்கிட்டு இருப்பவன், தூங்காம பேய்முழி முழிச்சிக்கிட்டு இருந்தவன் இப்படி எல்லாரும் எழுந்து வண்டி வந்துடுத்து, வண்டி வந்துடுத்துன்னு உற்சாகக் குரல் கொடுத்தவறு வாத்தியார் கிளாசுக்குள்ளே வந்தவுடனே அந்தக் காலத்து எங்களை மாதிரி ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் எப்படி மரியாதையா எழுந்து நிப்போமே அப்படி நின்னு மரியாதை காட்டுவாங்க. எங்க ஊரிலே வண்டி ரெண்டு நிமிஷம்தான் நிக்கும். சீட் ரிசர்வேஷன் இல்லாததாலே அவங்கவங்க எந்த கம்பார்ட்மெண்ட் பக்கத்துலே இருக்கோ, அதுலே உள்ளே புகுந்துக்குவாங்க. இதுக்கு, வண்டிக்குள்ளே இருக்கிறவங்க தங்களாலே முடிஞ்ச அளவு அரைத்தூக்கத்திலே கூட கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பாங்க. ஒரு சின்ன யுத்தமே நடக்கும். அந்த ரெண்டு நிமிஷத்துலே. அப்புறம் வெற்றிகரமா உள்ளே நுழைஞ்சவங்க. இருக்கிறவங்க கிட்டே கெஞ்சிக் கூத்தாடி சீட் கிடைச்சதுன்னா, சீட்வாங்கி, இல்லே திட்டு கிடைச்சதுன்னா திட்டு வாங்கி அதுக்குள்ளே வண்டி புறப்பட்ட உடனே அவர்கள் சிலர் தங்களோட தலைவிதியை நொந்து கொண்டும், சிலர் முணுமுணுத்துக்கொண்டும் ஒருவர் மேலே ஒருவர் விழுந்து தூங்க ஆரம்பிப்பாங்க. இவ்வளவு ரகளையிலேயும், பெர்த்தைப்புடிச்சி மேலே தூங்கிக்கிட்டு இருக்கிறவங்க, அரைக்கண்ணைத் திறந்து பாத்து, முழுக்கண்ணையும் திறந்தால் எங்கே அவங்களோட பர்த்துக்கு ஆபத்து வந்துடுமோன்னு பயந்தபடி தங்களோட தூக்கத்து தொடருவாங்க. என்னோட முதல் சென்னைப்பயணம் இப்படித்தான் இருந்தது. நான் என் கசினோட வண்டியிலே கஷ்டப்பட்டு ஏறி, பிறகு தூங்கமுடியாம கஷ்டப்பட்டோம். இத்தனைக்கும் வண்டி சென்னைப்போய்ச்சேர்ந்த கொஞ்ச நேரத்துலேயை எனக்கு இஞ்சினீரிங் செலக்ஷன் இண்டர்வ்யூ.
இப்ப எல்லாம் அந்த அவஸ்தை இல்லை முன்னமேயே புக் பண்ணிட்டா எந்த கம்பார்ட்மெண்ட்னு தெரிஞ்சி போயிடும்.. அந்த கம்பார்ட்மெண்ட் எங்கே உத்தேசமா நிக்குஙகறதையும் ஸ்டேஷன்லேயே கேட்டு தெரிஞ்சிக்கலாம். எவ்வளவு இருந்தாலும் அந்த ரெண்டு நிமிஷ டென்ஷனிலிருந்தி யாரும் தப்ப முடியாது. ஒரு சிலர் பெர்த் கிடைத்தா படுத்ததுதான். அவங்க போய் சேர வேண்டிய ஊர் வர வரையிலும் தூக்கமோ தூக்கம். ஆனா நான் பெர்த் புக் பண்ணி படுத்தாலும் அதென்னவே தெரியல்லை ஒவ்வொரு ஸ்டேஷனையும் எதுன்னு தெரிஞ்சிக்காம போனால் நமக்கு மோட்சம் கிடைக்காதோங்கற எண்ணத்துலே அது என்ன ஸ்டேஷன்னு கேட்டு ஒரு ஆத்ம திருப்தியோட சமயத்துலே அந்த அரைத்தூக்கத்துலே கீழே இறங்கி ஒரு உலா விட்டு வண்டி புறப்பட ஆரம்பிச்சவுடன் சில இளசுகள் மாதிர் வேகமா ஓடி கம்பார்ட்மெண்டிலே தொத்திக்கிட்ட பிறகுதான் அது நம்ம கம்பார்ட்மெண்ட் இல்லை வேறே கம்பார்ட்மெண்ட்டுன்னு தெரியும். நல்ல வேளையா இப்ப அநேகமாக எல்லா வண்டிகளிலேயும் வெஸ்டிப்யூல் இணைப்பு இருக்கிறதாலே உள்ளேயே நடந்து நாலு பேர் சாபத்தையும் வாங்கிக்கிட்டு அந்த மங்கின வெளிச்சத்துலே சரி நம்ம சீட்டு, படுக்கலாம்னு படுத்தா, யார்டா அது , கண்ணு தெரியல்லே. ஆள் படுத்திருக்கிறதுன்னு ஒரு பகாசுரக்குரல் கேட்டு திடுக்கிட்டுப்போய் அந்தக் குரலுக்கு ஒரு எகஸ்யூஸ் மி சொல்லி மறுபடியும் நம்ம சீட்டைக்கண்டு பிடிச்சி போறதுக்குள்ளே நம்மோட கொஞ்ச நஞ்ச தூக்கமும் போயே போயிடும்
சில சமயம் சினிமா ஷோவுக்கு மாட்டினி கொஞ்சம் லேட்டா போய் ஏடாகூடமா யார்மடியிலேயாவது உக்காந்து திட்டு வாங்கிப்போமே அந்த மறந்து போன திட்டை, இப்ப *இங்கே முகத்தெரியாத யாரோ ஒருத்தரோ ஒருத்தியோ திட்டுவதை வாங்கிக்கொண்டு ஒரு வழியாக தமநம்ம சீட்டை கண்டு பிடிச்க்கறதே ஒரு பெரிய சாகசம்.
சில சமயம் நான் சென்னையில் இருந்து மதுரைக்குப் பொகும்போது சீட் ரிசர்வேஷன் எல்லாம் சௌகரியமாக செய்து கொண்டு போனாலும் ரிசர்வேஷன் இல்லாத போது வரும் தூக்கம் அப்போது வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது,. ஏனென்றால் அந்த வண்டி நான் பிறந்த ஊரான அரியலூரில் இரண்டு நிமிடம் நின்று போகும். அதற்காக கொட்டக்கொட்ட விழித்துக்கொண்டு எங்க ஊர் வரும்போது தூங்கிப் போய இருக்கிறேன். இன்னொரு சமயம் எங்க ஊரை விட்டு வண்டி புறப்படும்போது எழுந்து எதையோ பெரிதாக இழந்தது போன்ற துக்கத்தோடு எங்க ஊர் இருட்டை அனுபவித்தேன்.
எவ்வளவுதான் சொல்லுங்கள் அந்த வண்டி ஒடும்போது அந்த கட கட என்ற ஓயாத தாளம் ஏக தாளமா, அடதாளமா என்று தெரியாமல் வண்டியில் இருந்து இறங்கிய பின்னும் அது என் செவிகளில் முழங்கும். ரயில் தூக்கம் நம் வீட்டு பஞ்சணைத்தூக்கத்துக்கு இணையாகாது. ஒரு சமயம் ஏசி கோச்சில் புக்செய்து திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வருவதற்குள் சரியான போர்வை இல்லாத தால் நான்பட்ட பாடு அந்தத்திருவனந்தபுரம் பத்மநாபனுக்கே வெளிச்சம். இதில் சில சமயம் எதிர்பாராத சமயத்தில் நம்மைத்தூக்கிப் போடும் சத்தங்களும் அசைவுகளும் வரும். அதற்கெல்லாம்நம் பாடி
ஷாக் அப்சார்பர்( shock absorber) மாதிரி தயாராக இருக்கவேண்டும். கொடுத்து வைத்த சிலர் ஓடும் ரயிலில் அதன் சத்தத்தையும் மிஞ்சி குறட்டை விடுவதைப்பார்த்தால், சரி, கேட்டால் அவர்கள் கும்பகர்ணனுக்கு ஏதோ நெருங்கிய சொந்தமோ என்று தோன்றும்.
ஒரு சமயம் எங்க ஊர்க்காரர் சென்னையிலே இருந்து அரியலூருக்கு டிக்கட் ரிசர்வ பண்ணிட்டு, பக்கத்து சீட்காரர் கிட்டே” ஐயா, அரியலூர் வந்தா எழுப்புங்க”
ன்னு சொல்லிட்டு மகாவிஷ்ணு திருப்பாற்கடல்லே பள்ளி கொண்ட மாதிரி அவர் பெர்த்துலே ஹாப்பியா துயில் கொண்டுட்டார். திடீர்னு அவர் கண் விழிச்சி பார்த்தப்போ வண்டி அரியலூர் ஸ்டேஷன்லே ரெண்டு நிமிஷம் நின்னு புறப்பட்டுட்டுது. அவருக்கா மகாகோபம். அங்கே தூங்கிக்கிட்டு இருந்த அடுத்த சீட் நபரை எழுப்பி “ என்னங்க. உங்க கிட்டே என்னை அரியலூர் வரும்போது எழுப்பச்சொன்னேனே. எழுப்பாம விட்டுட்டீங்க. இப்ப வண்டிஅரியலூரை தாண்டிடுத்தே. இப்படிப் பண்ணிபிட்டீங்களே” ன்னு கேட்டதுக்கு “நான் என்ன சார் பண்ணுவேன். உங்க ஊருக்கு சரியா அர்த்த ராத்திரியிலே வண்டி வருது. நான் நல்லாத்தூங்கிட்டேன். இப்ப ஏன் என்தூக்கத்தைக்கெடுத்தீங்கன்” னு அவரையே கோபிச்சுக்கிட்டாராம். “சரி இனிமேல் என்ன பண்ண முடியும்? வண்டி டால்மியாபுரத்துலே நின்ன உடனே அடுத்த எதிர் வண்டி ஏறி அரியலூர்லே தூங்காம இறங்கிடணும்னு பிளான் போட்டாராம். ஆனா எல்லாரும்பீமன் மாதிரி நினைச்சப்போ தூங்கவும், நெனச்சப்போ எந்திரிக்கவும் வரம் வாங்கிக்கிட்டு வரமுடியுமா?. அவர் கண்சுழட்ட மறுபடியும் தூங்க ஆரம்பிக்க இப்பவும் அரியலூர்தாண்டின உடனே அவருக்கு முழிப்பு வர. “ அடேடே அரியலூரா”ன்னு சொல்லி , அரியலூர், அரியலூர்னு வண்டியிலே இருந்து கத்தினாலும் இவர் கத்தலை லட்சியம் பண்ணாம வண்டி தட தடன்னு போய்க்கிட்டே இருந்ததாம். கடைசியிலே அவர் அடுத்த ஸ்டாப்பான விருத்தாசலத்தில் இறங்கி அரியலூர்லே நிக்கற எதிர் வண்டிக்காக காத்திருந்து எப்படியோ அரியலூர் வந்து சேர்ந்தார்ங்கிற நியூஸ் எனக்குத்தெரிய வந்தது. எதுக்குச்சொல்ல வரேன்னா, ரயில் தூக்கத்தின்மகிமையே மகிமை. எப்ப முழிப்பு வரணுமோ அப்ப வராது. எப்ப தூக்கம் வரக்கூடாதோ அப்ப அது கட்டாயம் வரும். ரயில் தூக்கத்தோட லட்சணமே அதுதான்.
அதேபோல்தான்ஃப்ளைட்டிலும். 12 மணி நேரத்துக்குமேல் உட்கார்ந்து அந்த எகானமி கிளாஸ் சீட்டில் தலைக்கு ஒரு குட்டி தலயணையையும், கழுத்துக்கு ஒரு நெக் ரெஸ்டும் போட்டுக்கொண்டு பக்கத்து மனுஷர் அல்லது மனுஷி தோள்களில் சாயாமலும் , கீழே வழுக்கி விழாமலும் பயணம் செய்வது என்பது ஆய கலைகளில் சேராத 65 வது கலை. விமானப் பயணம் செய்து கழுத்து வலி வராதவர்கள், ஒன்றே வைரம் பாய்ந்த கழுத்து உடையவராக இருக்க வேண்டும்.. அல்லது அதற்கான வரம்வாங்கிக் கொண்டு வந்தவர்களாக இருக்கவேண்டும். ஆனால் அந்த ஒரு சீட்டுக்குள் காலை இப்படி அப்படி மடக்கி கழுத்து லூசாக அட்ஜஸ்ட் செய்துகொண்டு பத்துப் பன்னிரெண்டு மணி நேரம் அவ்வப்பொழுது எழுப்பப்பட்டு எதைச் சாப்பிடுகிறோம், எதற்காக சாப்பிடுகிறோம், அது லஞ்சா, பிரேக் பாஸ்டா, டின்னரா, ஸ்நாக்ஸா என்று தெரியாமல் கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் கெடுத்துக்கொண்டு வயிற்றையும் கெடுத்துக்கொண்டு பயணிப்போர்களுக்கு பெரிய பரிசா ஏதாவதை ஏர்வேஸ் தரலாம், வெறும் பிரஷ் டூத்பேஸ்ட்மாத்திரம் தருவது தவிர. இந்த மாதிரி தங்களைடைய உடம்பை சுருக்கோ, சுருக்கின்னு சுருக்கி பணமும் கட்டி சிரம்ப்படுபவர்களைப்பார்த்து “கேட்டில் கிளாஸ் பீபிள்”. ( cattle class people) என்று கேலி செய்த அந்த திருவனந்தபுர எம்பி தரூரை என்ன செய்யலாம் சொல்லுங்கள். இவை எல்லாம் தனிக்கலைகள்.
பிளேன் தூக்கம்
இதெல்லாம் பரவாயில்லை. இந்த பிளேன்லே சிங்கப்பூர் வழியா அமெரிக்காவுக்குப்போகும்போது வர தூக்க அனுபவத்தை யாரோடேயும் பகிர்ந்துக்கவே முடியாது. இதுக்கு சிங்கப்பபூர் போற பிளைட் நடு ராத்திரி ரெண்டு மணிக்கு சென்னையிலிருந்து கிளம பும். மூட்டை முடுச்சுகளை பாக் பண்ணிக்கிட்டு வீட்டை விட்டு ஒரு டாக்ஸியைப்பிடிச்சு பதினோரு மணிக்கே கிளம்பணும். ஏர் போர்ட்டை பிளேன் டிபார்சர் டயமுக்கு குறைந்தது இரண்டு மணி நேரமாவது முன்னதாகவே அடையணும்.. அந்த ராத்திரி தூக்கம்போச்சு. ஏர் போர்ட்டுலே லக்கேஜை எல்லாம் அரைத்தூக்கத்துலே செக் செய்து விட்டு நம்ம கேட் திறக்கறதுக்காக கொட்டு கொட்டுன்னு முழுச்சிக்கிட்டு இருந்து விமானத்துலே நம்ம சீட்டைக்கண்டுபிடிச்சி நம ம ஹேண்டு லக்கேஜை பத்திரமா லக்கேஜ் கேரியர்லே நம்ம தலையிலோ இல்லை வேறே யார்தலையிலோ விழாதபடி பாத்து லோட் பண்ணி நம்ம எகானமி கிளாஸ் சீட்டுலே உக்காந்து தூக்கம் நம்மை கீழே தள்ளாதபடி நாம அப்பப்போ பாடியை பாலன்ஸ் செஞ்சுக்கிட்டு. நம்ம தலை பக்கத்து சீட் ஆள்மேலே சாயாமலும், கழுத்து சுளுக்கிக்காமலும் ட்ராவல் பண்றது ஒரு ஆர்ட்.
அதுவும் குறிப்பாக இந்தியாவில் இருந்து அமெரிக்கா வுக்கு போகும்போது, பெரும்பாலும் ஒரே இருட்டாவே இருக்கறதாலே நமக்கு நம்மையும் அறியாமல் தூக்கம் கண்ணைச்சுழட்டும். அதுமாத்திரம் இல்லை. இந்தத் தூக்கத்தைக் கெடுக்கறதுக்குன்னே சாப்பாடுன்னு சொல்லி கண்ட கண்ட நேரத்துலே எழுப்பி தொந்திரவு பண்ணுவாங்க. இந்தத்தொந்திரவுக்குப்பயந்து நீங்க தூங்கிக்கிட்டே இருந்தால் உங்க பசிக்கு ஏர்லைன்ஸ் பொறுப்பாகாது. நீங்க சாப்பிடறது பிரேக்பாஸ்டா, பிரேக் ஸ்லோவா, லஞ்சா, ப்ரஞ்சா, எது டின்னர், எது ஸ்நாக்ஸ், இந்த மாதிரி கன்ஃப்யூஷனுக்கு இடையிலே விவரம் தெரியாம நீங்க சாப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க. இதனாலே உங்க தூக்கம் அவ்வளவுதான். உக்காந்து பனிரண்டு மணி நேரமோ, பதிமூணு மணி நேரமோ தூங்கறது ஒரு பெரிய் சாதனை. பயணம் முடிஞ்சாலும் அந்தப்பாழாப் போன ஜெட் லேக் உங்களை அதுக்கப்புறம் உங்க தெம்பைப்பொறுத்து மூணு நாளோ நாலு தாளோ தொடரும். கரெக்டா நேரத்துக்குத் தூங்கி நேரத்துக்கு எழுந்து பழகிப்போனவங்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக முடியும். இந்த மாதிரி பிளைட்லே அடிக்கடி டிராவல் பண்றவங்களுக்குத்தான் தூக்கத்தின் அருமை தெரியும். நம்ம ஊரிலே இருந்து ஃப்ளைட்லே போறவங்களுக்கு அந்த டாய்லெட் ஒரு பெரிய சாலஞ்ச். அதை நெனச்சாலே முக்காவாசிப் பேருக்கு வர கொஞ்ச நஞ்ச தூக்கமும் கெட்டுப்போயிடும்.
விடியற்காலைத்தூக்கம்
எந்த வயசானாலும், ஆம்பிளையா இருந்தாலும் பொம்பிளையா இருந்தாலும் பெரும்பாலானோர்க்கு. இருக்கிற காமன் பிரச்சினை விடியற்காலையிலே எழுந்திருக்கறதுதான். அந்த விடியற்காலை நேர தூக்கத்திலே இருக்கிற ஆனந்தம் வேறே எதிலயுமே கிடையாது. அதுவும் மார்கழி மாசமா இருந்துட்டா கேக்கவே வேணாம்.. அந்தப்போர்வையை இழுத்து உடம்புலே போத்திட்டு தூங்கறதுக்கு சமானம் எதுவுமே இந்த உலகத்துலே கிடையாது். பல பேர் அலாரம் கடிகாரத்துலே டைமை செட் பண்ணி வெச்சி தூங்கும்போது அலாரம் மணடையிலே அடிக்கிறமாதிரி அடிக்கும் போது வர எரிச்சல் கொஞ்சமா, நஞ்சமா? அந்த அலாரம் கண்டு பிடிச்சவன் மண்டையிலே ஓங்கி ஒரு போடு போட்டாப் பரவாயில்லேன்னு தோணும். நல்ல வேளையா அவன் யாருன்னு நமக்குத் தெரியாததாலே அவன் பொழச்சான்.அலாரம் கடிகாரத்தோட தலையை முழுக்கோபத்தோட தட்டி அதோட குரல் வளையை நசுக்கி அதுக்கப்புறம் ஓரு அஞ்சு நிமிஷமோ, பத்து நிமிஷமோ நாம தூங்கற தூக்கத்துக்கு ஈடு இணை எனக்குத்தெரிஞ்சி எதுவும் இல்லை. நாம் டக்குனு எழுந்து மணி பார்க்கும்போது இன்னும் ஒரு மணி நேரம் நாம் தூங்கலாம்னு தெரிஞ்சா அதைவிட நமக்கு சந்தோஷம் அளிக்கக்கூடிய வரம்வேறு எதுவும்கிடையாது. எனக்குத் தெரிஞ்ச சிலபேர் இன்னும் மூணு நாள் கழிச்சி விடியற்காலை மூன்றரை மணிக்கி எழுந்திருக்கணும் நெனச்சு, அதுக்காக தேவை இல்லாம கவலைப்பட்டு மூணு நாளுக்கு முன்னால் இருந்தே தூக்கத் மிஸ் பண்ணி, அவங்களுக்குப் பக்கத்திலே உள்ளவங்க தூக்கத்தையும, கெடுத்துடுவாங்க, இந்த விஷயம் வயசு , மதம், ஜாதி, நாடு இதுக்கெல்லாம் அப்பாற்பட்டது.
பல இரவுகள் எனக்குத் தூக்கம் வருவதே இல்லை. இரவு பத்து மணி சுமாருக்கு கண்ணை சுழட்டும். சரி இவ்வளவு தூக்கத்திலே எந்த வேலையையும் செய்ய முடியாது. மரியாதையா தூங்க போயிடுவோம்னு படுக்கையை ரெடி பண்ணி தூங்க ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிஷமே பணத்தை வாங்கினேன், பையிலே போட்டேன். காசு போன இடம் தெரியலேங்கிற கதையா, தூக்கம் போன இடம் தெரியாம கண் பளிச்சின்னு பெரிசாகி அப்புறம் ரெண்டு மணி நேரமாவது கொறஞ்சது மன்றாடினாத்தான் அப்பவும் தூக்கம் வரட்டுமான்னு கேக்கும். நான் இந்தக் கட்டுரையை தூக்கம் வரதுக்குள்ளே எழுதிடணும்னு நெனச்சேன். எனக்கா, உங்களுக்கான்னு கேக்காதீங்க. ஆனா அதுக்குள்ளே எனக்கு தூக்கம் வந்துட்டதாலே நீங்க பொழச்சீங்க நான் தூங்கப்போயிட்டேன். ஆனா நீங்க இந்தக கட்டுரையை படிக்கும்போதே தூங்கிடாதீங்க. படிச்சு முடிச்சிட்டு தூங்குங்க. என்ன சரிதானே. எல்லாருக்கும் குட் நைட்.
**************************