நேற்று நான் உண்ணா விரதம்

நேற்று நான் உண்ணாநோன்பு விரதம் , ஆன்மீக சிந்தனைகள் தான் எனக்கு ஆகாரம்.
காலையில் எழுந்தவுடன் சூடாக காபி, இதற்கும் உண்ணா விரதத்திற்கும் சம்பந்தம் இல்லை
காலையில் குளித்து சிறிது நேரம் தியானம் செய்த பின்னர் ஒரு கிளாஸ் சூடாக ஹார்லிக்ஸ்.
ஹார்லிக்ஸ்ல ஊட்ட சத்துக்கள் இருக்கிறது அனால் அது ஒரு உணவாகுமா? இல்லவே இல்லை.
மதியம் 12 மணிக்கு நான்கு வாழை பழங்கள், கொஞ்சமா ஒரு கிளாஸ் சூடான பால், இவ்வளவே.

இடையில் சொட்டு தண்ணீர் கூட இல்லை, அரிசி சாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை
மதியம் 2 மணிக்கு சூடாக ஒரு கிளாஸ் காபி, வெறும் காபி தான், பிஸ்கட் கூட இல்லை
மீண்டும் மலை 5 மணிக்கு கொஞ்சமா ஹார்லிக்ஸ் (ஒரே ஒரு கிளாஸ் தான்) , ஒரு பன் கூட இல்லை
மீண்டும் விரதம், இரவு 8 மணிக்கு இரண்டு வாழை பழங்கள், வேறொன்றும் இல்லை.
இரவு 10 மணிக்கு தூக்கம் வேண்டுமே, அதனால் இரன்டு கிளாஸ் சூடாக பால். அரிசியோ கோதுமையோ ஒரு பருக்கை கூட கிடையாது. எவ்வளவோ கஷ்டப்பட்டு உண்ணாநோன்பு இருந்தேன்.
அதன் பலம் நிச்சயம் எனக்கு கிட்டும்.

நேத்து நோன்பு என்பதால் இன்று மூன்று வேளை மட்டும் சாப்பாடு.
காலை சிற்றுண்டி எட்டு இட்லி, சாம்பார், அம்புட்டுதான். மதியம் அளவு சாப்பாடு ( ஒரு படி சாதம், இரண்டு பொரியல், ஒரு கூட்டு, ஒரு தயிர் பச்சிடி, இரண்டு அப்பளம், தயிர் , ஊறுகாய், அவ்வளவே , அளவு சாப்பாடு இல்லையா?. இரவுக்கு பார்த்து கொள்ளலாம், இட்லியோ , தோசையோ கிடைக்காமலா போயிடும்.

நீங்களும் உண்ணா நோன்பு இருந்து உடலை நல்ல வச்சுக்கோங்க.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-Jun-21, 1:10 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 87

மேலே