நதி எங்கே போகிறது கடலைத் தேடி

நதி எங்கே போகிறது? கடலைத் தேடி
மதி எங்கே போகிறது? ஆசையைத் தேடி
நிதி எங்கே போகிறது? வளர்ச்சியைத் தேடி
விதி எங்கே போகிறது? நம்மைத் தேடி???

தினம் எங்கே போகிறது? இரவைத் தேடி
குணம் எங்கே போகிறது? ஏழையைத் தேடி
பணம் எங்கே போகிறது? புகழைத் தேடி
மனம் எங்கே போகிறது? இல்லாததைத் தேடி

ஒளி எங்கே போகிறது? இருட்டைத் தேடி
கிளி எங்கே போகிறது? கனியைத் தேடி
உளி எங்கே போகிறது? ஆணியைத் தேடி
களி எங்கே போகிறது? இன்பத்தைத் தேடி

கண் எங்கே போகிறது? அழகைத் தேடி
மூக்கெங்கே போகிறது? வாசனைத் தேடி
நாக்கெங்கே போகிறது? ருசியைத் தேடி
வாய் எங்கே போகிறது? உணவைத் தேடி

நட்பு எங்கே போகிறது? முடிவைத் தேடி
உப்பு எங்கே போகிறது? BP...ஐத் தேடி
தப்பு எங்கே போகிறது? சரியைத் தேடி
நீங்க எங்கே போகிறது? மருத்துவரைத் தேடி..

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-Jun-21, 10:20 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 176

சிறந்த நகைச்சுவைகள்

மேலே