பொங்கல் புகழ்

பொங்கி வழிகின்ற மகிழ்ச்சியில்
தூங்க மறுத்த இனிய நினைவுகள்
விடிந்தும் விடியா விடியல்
காலைப் பொழுதில் களிப்புடன்
குடும்பம் குடும்பமாய் வீடுகள் தோறும்
ஆரவாரம் ஆனந்தம் ஆடலும் பாடலும்
அனைவரும் மகிழ்வுடன்
அடடா எத்துணை மகிழ்ச்சி
புத்துணர்வுடன் பொங்கலிட்டு
அன்புடனும் ஆசையுடனும் பகிர்ந்துண்ணும்
பொங்கலோ பொங்கலிது
பொங்கலோ பொங்கல்
உள்ளமெல்லாம் உவகையுடன்
உறவுகள் புடை சூழ இன்பக் களிப்பில்
பொங்கி வரும் பொங்கலோ பொங்கலிது
போற்றுவோம் பொங்கல் திருநாளை
வாழ்த்துவோம் விவசாயியை
எல்லாமும் தந்திட்ட
இறைவனை வணங்கிடுவோம்

எழுதியவர் : பாத்திமா மலர் (14-Jan-25, 5:04 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : pongal pukazh
பார்வை : 18

மேலே