உழைப்பின் பெருமை

உழைப்பின் பெருமை

பழையதை புதுப்பிக்க பலபேர் படையெதற்கு
பக்குவசீர் புத்திரர் பக்கபலம் போதும்
பகலிரவு பகிர்த்துண்ணும் பந்தம் ஏற்கும்
பகைவர் பலவார் பயங்கொண்டு கதரும்

பெரியோர் சொல் பொதுமொழி சிதறா
பெருமை காணுது பெயர்சொல் சிறக்க
பெண்தவம் பரிசு பெரியார் வியக்க
பெயர்சூடா மன்னன் பெயர் எற்பார் உண்டோ !

கற்ற கல்வி கடல் கடக்க போதாயினி
கதறி அழுதாலும் கரைந்த நாளும் வாரா இனி
கருத்தாய் உழைக்க கங்கணம் ஏற்பாய் எனில்
கடல்போல் குவியும் கணக்கிடா செல்வமணி !

எழுதியவர் : மு.தருமராஜு (15-Jan-25, 3:14 pm)
Tanglish : ulaippin perumai
பார்வை : 14

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே