அன்பின் அழியாத இணைச்சிறகு
காலமெல்லாம் கலந்திருப்பது போல,
எதிர்பார்ப்பதல்ல மணவாழ்க்கை.
ஞாலமெல்லாம் பயணித்தாலும் ஒரேகூட்டில்,
கதிரெனவாழும் இணைப்பறவைகள்.
நெருப்பின்மீது சத்தியமா? நீர்மேல்
எழுத்துப் போலாகுமா?
அருவருப்பான வாழ்க்கை வாழ,
கழுதைகளுக்கே தெரியும்.
கண்டபடி காணொளி செய்ய,
காதலிக்கும் சில.
கண்டபடி பேசுதலும் உள்ளடக்கமாக,
பேதலிக்கும் புத்தி.
அறியா மானிடர் புரியா
மொழி பேசவே,
முறியா பந்தம் இல்லை,
பழிக்குபழி என்றே.
பொறுமையிலா காதலதும் வாழ்வதில்லை,
பொலிவோடு ஞாநிலத்தே.
பொறுத்திருந்த காதலது வாழ்கிறது,
வேலிக்குள் பயிராய்.