டெல்லிக்கு முதல் பயணம்

பல வருடங்கள் முன்பு நான் என் உறவினர் ஒருவருடன், அவரை டெல்லி வழி அனுப்பிவைக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தேன். என் உறவினர் மிகவும் உத்ஸாகமாக இருந்தார். ஏனெனில் அப்போது தான் முதல் முறையாக அவர் டெல்லி பயணம் செய்ய போகிறார். அப்போது வெயில் காலமானதால் குளிர் சாதன பெட்டியில் அவர் டிக்கெட் போட்டிருந்தார். நானும் அவரும் அவரது உடமைகளை அவர் சீட் எண்ணிற்கு கீழ் வைத்து விட்டு வெளியில் பிளாட்பாரத்தில் பில்டர் காபி வாங்கி அருந்தியபடி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ரயில் கிளம்ப இன்னும் அரை மணி இருந்தது. அப்போது ரயில் டிக்கெட் பரிசோதகர் அங்கே வந்தார். சிலர் அவரிடம் அவரவர் டிக்கெட்டை காட்டி சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தனர். நான் உறவினரிடம் சொன்னேன் " இன்னும் டிக்கெட் சார்ட் ஒட்டாததால் ஒரு முறை அவரிடம் உன் டிக்கெட்டை காட்டி செக் பண்ணிக்கோ" என்றேன். அவர் உடனேயே விரைந்து டிக்கெட்டை பரிசோதகரிடம் அவர் டிக்கெட்டை காண்பித்தார். பரிசோதகர் அதை அவர் கையில் இருந்த சார்ட்இல் செக் செய்து விட்டு என் உறவினரை வியப்புடன் பார்த்து " உங்கள் டிக்கெட்டுக்கான ரயில் நேற்றே டெல்லிக்கு புறப்பட்டு சென்று விட்டதே" என்றார் . என் உறவினர் மின்சாரம் பாய்ந்தவர் போல ஆகிவிட்டார். டிக்கெட்டை பார்த்தவுடன் தான் தெரிந்தது, மார்ச் 30 என்பதை அவர் மார்ச் 31 என்று நினைத்து விட்டார். பதிவு செய்த பின் ஒருமுறை கூட அவர் டிக்கெட்டில் என்ன தேதி இருக்கிறது என்பதை பார்க்கவேயில்லை.

பாவம், என்ன செய்ய, இருவரும் ரயிலிலிருந்து பெட்டிபடுக்கைகளை வெளியே எடுத்து வந்தோம். நான் அவருக்கு ஆறுதல் கூறினேன் " கவலை வேணாம். சீக்கிரமே நீயும் நானும் சேர்ந்து டெல்லிக்கு போவோம்' பிறகு அவரை நல்ல ஹோட்டலுக்கு கூட்டி சென்று நல்ல சாப்பாடு வாங்கி கொடுத்து அவரை வீட்டில் வீட்டேன். அவர் வீட்டிலே கேட்டார்கள் " என்ன, போன மச்சான் திரும்பி வந்துட்டார் "

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Jun-21, 10:01 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 102

சிறந்த நகைச்சுவைகள்

மேலே