மானல்ல நான்
ஐம்புலனுக்குள்
அகப்படா உன்னை...
கை பேசி புலனத்தில் தேடினேன் ...கிடைத்தாய்.
தனியாகப்
பேசிச் சிரிக்க
பயந்த நீயோ ...
குழுவிலே
பேசிச் சிரிக்கிறாய்...
தயங்கும் உன்
பேச்சுக் கூட
கவியிலே
வீச்சாய்க் கண்டேன்...
புவியிலே
உனைப்போல்
பெண்ணை ...
இனியும் நான்
விரும்பினதில்லை...
சுருக்கமாய்ச்
சொல்லப்போனால் ...
இணையத்தில்
இணைந்த நாமோ ...
இதையத்தில்
இணைவது என்றோ?...
என்றுனக்குக்
குறுஞ் செய்தி
அனுப்பியபோது ...
பதிலுக்கு நீயோ...
நான்
நீங்கள் தேடும்
மானல்ல...
Man என்கிறாய்.