தமிழ்தாங்க, சிலைட் மிக்ஸிங் அம்புட்டுத்தேன்

டேய் மச்சி இன்னிக்கு பீச்சுக்கு போலாமாடா?
வேணாம்டா , சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்

செல் போனில் சார்ஜ் குறைவா இருக்குடா!
வாழ்க்கையில் இதெல்லாம் ஒரு குறையே இல்லடா

காலைல என்ன டிபன் சாப்பிட்டாய்?
நான் என்ன சாப்பிட்டா உனக்கு என்னடா

சாயங்காலம் வாக்கிங் போய் வரலாமா?
ஏன் காலைல போனா கால் வலிக்குமா?

பசங்க ஸ்கூலுக்கு நேரமாச்சு;
பசங்களுக்குத்தான் ஸ்கூலுக்கு இல்லை

இரவு டின்னருக்கு என்ன பண்ணலாம்?
ஹோட்டலுக்கு போய் பாத்திரம் விளக்கலாம்

படுக்கை போட்டாயே, பில்லோ எங்க?
பில்லோ போட்டா அப்புறம் தூக்கம் எங்கேன்னு கேட்பீங்க

இந்த பஸ் எப்போவும் லேட்டாதான் வருதுடா
பஸ் கரெக்டாதான் வருது நாம்தான்டா சீக்கிரம் வரோம்

தமிழ் டீச்சர் இன்னிக்கு என்ன சொல்லி கொடுத்தாங்க?
இங்கிலிஷ் எப்படி பேசணும்னு..ஹிஹிஹி

இந்த படத்துல மியூசிக் நல்லா இருக்குடா;
டேய் கொல்லாதே, எனக்கு சிக்கா இருக்குடா

அம்மா கொஞ்சம் பாக்கெட் மணி தம்மா;
எனக்கே அப்பாகிட்ட தான் கேக்கணும்டா

அப்பா இன்னிக்கு காலேஜ் பீஸ் கட்டணும்;
ஏன்டா நேத்து கட்டினா வாங்கிக்க மாட்டாங்களா?

சாயங்காலம் ஸ்னாக்ஸ் என்ன இருக்கு?
வாடா மைனரு, சூடா உதையும், கரகரன்னு அடியும் இருக்கு

ஆபீஸ்ல வேலை கொஞ்சம் ஜாஸ்திப்பா;
கொஞ்சதாம்பா ஜாஸ்த்தி அதிகமா ஜாஸ்தி இல்லையே

டாக்டர் ஆப்பரேஷன் தியேட்டர்ல இருக்கார்;
அய்யய்யோ டாக்டருக்கு என்னாச்சுங்க?

பாயாசத்துல ஸ்வீட் ரொம்ப கம்மி?
ஒரு கிலோக்கு பதில் கால் கிலோ சுகர் வாங்கினா ஸ்வீட் எப்படி இருக்கும்?

பையனுக்கு மேரேஜ் எப்ப பண்ணலாம்?
நிச்சயதார்த்தம் முடிஞ்சு பண்ணலாம்.

கோரியர்ல பார்சல் வந்திருக்கு;
மொதல்ல அதுக்கு சானிட்டைசர் ஆரத்தி காண்பி

கார்லா பெட்ரோல் புல்லா இருக்கு;
டீசல் போட்டா கார்ல டீசல் புல்லா இருக்கும்

ஹீரோவும் ஹீரோயினும் பியூட்டிபுல் பா;
ஆனா படம் பியூடிபுலா இல்லையேப்பா

ட்ரெயின் பத்தாவது பிளாட்பாரத்துல வருதாம்;
நல்ல வேளை, பதினொண்ணாம் பிளாட்பாரம் இல்லை.

மேலே குறிப்பிட்ட உரையாடல்களில் ஏதேனும் ஒன்றிலாவது ஆங்கிலம் கலக்காமல் இருக்கிறதா? நாம் எந்த அளவுக்கு ஆங்கிலத்தில் ஊறிவிட்டோம் என்பதை எடுத்து காட்டத்தான் இந்த சிறிய உரையாடல் தொகுப்பை பதிவிட்டேன். உரையாடல்களில் இத்தனை கலப்படம் இருந்தும் நம் அமுத தமிழ் மொழி எப்போதும் நம் காதுகளில் தேனாகத்தான் ஒலித்து கொண்டு இருக்கிறது. அப்படி என்றால் ஆதியில் தொடங்கிய, அகத்தியர் வழங்கிய, சொற்கள் சிலவற்றையும் இழந்த போதும், மாபெரும் தமிழ் மொழி அதன் கவர்ச்சியான அழகை இழக்கவில்லை. ஏனெனில் கன்னி தமிழ் மொழிக்கு முதுமை என்பதே இல்லை.

பின்குறிப்பு:

முதலில் எழுதியது என்னவோ ஒவ்வொரு சொல்லின் முதல் பகுதியை தான். ஆனால் எழுதி முடித்த பின், ஏன் இந்த சொற்றொடர்களை கொஞ்சம் நகைச்சுவையாய் மாற்றக்கூடாது என்று. அதன் விளைவு தான் ஒவ்வொரு சொல்லின் இரண்டாம் பகுதி.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (7-Jul-21, 1:00 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 65

மேலே