மகிழ்ச்சி அடைவது எப்படி

மகிழ்ச்சி அடைவது எப்படி இயற்கையோ கோபப்படுவதும் இயற்கையே
மகிழ்ச்சி இருக்கும் இடத்தில கோபம் இல்லை கோபம் உள்ள இடத்தில மகிழ்ச்சி இல்லை
சொல்ல போனால் மகிழ்ச்சியும் கோபமும் கணவன் மனைவி போல
ஒரு சமயத்தில் மகிழ்ச்சி மனைவியாக இருக்கும், இன்னொரு சமயம் கணவனாக
அதேபோல் கோபம் ஒரு நேரத்தில் கணவனாகவும் இன்னொரு நேரத்தில் மனைவியாகவும் இருக்கும்
கணவன் பயந்தவன் இல்லையெனில் அவன் மனைவியை கட்டுப்படுத்துவான்
மனைவி பயந்தவள் இல்லையேல் கணவனை ஒரு வழி படுத்திவிடுவாள்
மகிழ்ச்சி முன்னாடி சென்றால் கோபம் அடக்கமாக பின்னால் வரும்
கோபம் முன்னாடி சென்றாலோ மகிழ்ச்சி ஓசை இல்லாமல் பின்னாடி செல்லும்
ஒரு சில நேரங்களில் மகிழ்ச்சியும் கோபமும் ஆசையாக கட்டி கொள்ளும்
இன்னும் சில வேளைகளில் இரண்டும் முட்டி கொண்டு அடித்து கொள்ளும்
கோபத்தை பார்த்தாலோ மகிழ்ச்சிக்கு கோபம்
மகிழ்ச்சியை பார்த்தாலோ கோபத்துக்கு மகிழ்ச்சி
இதனால் தான் அவ்வப்போது ஒருவர் மகிழ்ச்சியாக இருக்காரா கோபமா இருக்காரா என்று சந்தேகம்
இந்த சந்தேகம் தீரணும்னா மகிழ்ச்சியை பார்த்து சிரிக்கணும் கோபத்தை பார்த்து முறைக்கணும்
மகிழ்ச்சி கோபப்பட்டா அங்கிருந்து ஓடிவிட வேண்டும், கோபம் இளித்தால் கிட்ட போயி உட்காரனும்
இந்த மாதிரி மகிழ்ச்சியையும் கோபத்தையும் அனுசரிச்சு போனா, மகிழ்ச்சியை அடிக்கடி சந்திக்கலாம், கோபத்தை கொஞ்சம் தள்ளி வைக்கலாம் !

என்ன அண்ணாச்சி, தம்பி சொல்லுறது சரிதான்னே ?

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்ரமணியன் (22-Jun-21, 10:12 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 156

மேலே