வாழ்க்கையில் சுவை அதிகம் வேண்டுமா, இருக்கவே இருக்கிறதுநகைச்சுவை
குழாயில் குடி தண்ணீர் வந்தால் டக்குன்னு பிடித்து வைக்கிறோம்!
வாட்ஸ்அப்பில் செய்திகள் கண்டால் சட்டுன்னு படித்து வைக்கிறோம்!
உலர்த்திய துணிகள் காய்ந்து விட்டால் உடனே மடித்து வைக்கிறோம்!
தலையில் முடி மடியில் கனம் அதிகமானா முடித்து வைக்கிறோம்!
முடியே இல்லன்னா முடியும்போது மொட்டை அடித்து வைக்கிறோம்!
மணமான சாம்பாரில் முருங்கை என்றால் ஒரு கடி கடித்து வைக்கிறோம்!
சூடான சாதத்தில் கஞ்சி அதிகமாகி விட்டால் வடித்து வைக்கிறோம்!
பிறர் வீட்டில் காபி சரியில்லை, இருப்பினும் குடித்து வைக்கிறோம்!
வீட்டை நன்றாக சுத்தம் செய்யும் போது ஒட்டடையை அடித்து வைக்கிறோம்!
என்னை மாதிரி ஒருத்தன் கத்தி குதறினான்னா அவன் போடும் ஆட்டத்தை முடித்து வைக்கிறோம்!
'வயது என்பது மனதில் தான்' என்ற கருத்து மனதுக்கு ஒரு உற்சாகம் ஊட்டுகிறது!
ஆனால் உண்மையில் நோய்கள் அறுவது வயதுக்குப் பிறகு தான் அதிகம் தாக்குகிறது!
ஒரு புது கார் பத்து வருடங்களுக்குப் பின்னர் பிரச்சினைகள் கொடுக்கத் தான் செய்கிறது!
இதே சிக்கல் தான் அறுபது வயதுக்கு மேற்பட்ட யாரையும் உபத்திரவம் செய்கிறது!
எனவே, முடிந்தவரை பெருங்குடிமகன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தான்!
ஆனால் நோய் வந்து விட்டால் தைரியமாக வெறுக்காமல், அதை வரவேற்க வேண்டும்!
நம் வீட்டுக்கு ஒரு விருந்தினர் வந்தால் முகமலர்ச்சியுடன் வரவேற்கிறோம் அன்றோ? நோயும், நொடியும் கூட அப்படித்தான்! வரவேற்று விட்டால், விருந்தினரைப் போல அதிகமாக மூன்று நாட்களில் சென்று விடும்! அவ்வளவே !