காதலர் தின நினைவஞ்சலி
காதலை அறிந்த வயதில்
நான் கால் சட்டை போட்டிருந்தேன்;
கண்ணில் கண்ட பெண்களையெல்லாம்
மானசீகமாய் காதலித்த போது
நான் முழுக்கால் சட்டைக்கு மாறியிருந்தேன்;
காதல் இதுவேதான் என்றறிந்த போது
அரும்பு மீசைக்கு சொந்தக்காரனாகியிருந்தேன்;
முதல் காதல் வயபட்டபோது
பைத்தியக்காரனாய் திரிந்து நின்றேன்;
காதல் கைகூடியபோது அழகன் நானேயென
கண்ணாடி முன்னே நின்றிருந்தேன்;
காதலை அனுபவித்த தினங்களில்
முழுதாய் காதலை மட்டுமே அனுபவித்திருந்தேன்;
மூன்று காதலர் தினங்களை எனக்கு நானே
சொந்தமாக்கியிருந்தேன்;
காதலின் ஆழம் இவ்வளவுதான் என மிகச்சரியாய்
மில்லி மீட்டர் வரை அறிந்திருந்தேன்;
காதலின் ஆழம் கணித்ததால் என்னவோ
காதல் தோல்வி என் உயிரை காப்பாற்றியது
ஆனால் காதலின் வலி மட்டும்
நினைவு அஞ்சலியாய் உறுத்திக்கொண்டே இருக்கும்
எல்லா காதலர் தினங்களிலும்!