ஆளவந்தான்

தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகிவிட்ட முகமது நிஷாத் தன் உயர்விற்கு அல்லும் பகலும் பாடுபட்ட நெருக்கமானவர்களைத் தனியே சந்தித்தார்.

”உங்களுக்கெல்லாம் நான் எப்படி கைமாறு செய்யப்போறேனோ !” நெகிழ்ந்தார்.

”பெரிய வார்த்தையெல்லாம் வேணாம். அதெல்லாம் அப்புறம். மொதல்ல நாம ஒரு முக்கியமான காரியம் செய்யனும்.” கராராய்ச் சொன்னான் காசிநாதன்.

”என்ன சொல்லு ?” ஏறிட்டார் முகமது நிஷாத்;

”என் தெரு ஆனந்து பயல் தான் அரசாங்க உத்தியோகஸ்த்தன் என்கிறதை மறந்து நமக்கு எதிராய் வேலை செய்து ஓட்டையெல்லாம் பிரிச்சான். அவனை மொதல்ல தண்ணி இல்லா காட்டுக்குத் தூக்கனும்.”

”அப்புறம் ?”
முகமது நிஷாத் அடுத்தவனைப் பார்த்தார்.

”நம்ம கூட்டத்துல கல்லெறிஞ்சவனை அந்த ஸ்டீபன் ராஜ் இன்ஸ்பெக்டர் கண்டுக்கவே இல்லே. அவனை மாத்தனும்.”

”அடுத்து…?”

"நம்ம கிட்ட காசு வாங்கிட்டு அந்த கீழத்தெருமக்கள் நம்ம ஆப்போசிட் பார்ட்டிக்கு ஓட்டு போட்டுட்டானுங்க. .. அவனுகளுக்கு எதுவும் நம்ம நல்லது செய்யக்கூடாது... நம்ம யாருன்னு காட்டணும்" இது அருமை நாயகம் குரல்...

ஒவ்வொருவராய் சொல்லி முடிக்க அனைத்தையும் அமைதியாய் காதில் வாங்கிக் கொண்டிருந்தார்

ஐந்து நிமிடம் அமைதியாய் இருந்த அமைச்சர் முகமது நிஷாத் மெதுவாய் பேசத் தொடங்கினார்……

”நேத்திவரை நான் உங்களுக்கு நண்பன். இன்னைக்கு நம்ப தொகுதியில் உள்ள மொத்தப்பேருக்கும் நான் பொதுவானவன். எதிரியைப் பழிவாங்குறது சரி இல்லே. நண்பனாக்கிக்கிறதுதான் சரி.
மறந்து மன்னிச்சாலே நண்பனாகிடுவான். இது அடுத்த தேர்தலுக்கு நமக்கு இன்னும் பலம். சுலபமா ஜெயிக்கலாம்.” – அரசியல் அரிச்சுவடியைச் மிகச் சரியாக சொல்லி முடிக்கிறார் அமைச்சர் முகமது நிஷாத்.

இவனைப் போன்றவர்கள் தொகுதியை ஆள வந்தால் நமது பிழைப்பு என்னாவது என கேட்டவர்கள் தலை சுழன்றது. இந்நேரம் அந்த தொண்டர்கள் உட்கட்சி பூசல் கலவரத்தை உருவெடுக்க தயாராகி இருப்பார்கள்...

மக்களுக்கு தேவையை பூர்த்தி செய்து கொடுப்பதன் மூலம் அடுத்தடுத்த தேர்தல்களில் ஜெய்க்கலாம்
அல்லது
அடுத்த தேர்தலில் எதிர் வேட்பாளர் பண பலத்திற்கு முன்னால் தோற்றுக்கூட போகலாம் நாம் என்பது முகமது நிஷாத்தின் என்ன ஓட்டமாக இருந்தாலும் கூட அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு அமைச்சராய் ஒரு எம்எல்ஏ வாய் தனக்கு ஒதுக்கப்படும் நிதியை வைத்து தொகுதி மக்களுக்கும் சரி மாநில மக்களுக்கும் சரி தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதன் மூலம் என்றும் மக்களின் மனதில் தான் ஆளவந்தான் என்னும் புனைப்பெயர் வரலாற்றில் இடம்பெற்றால் அதுவே போதும் எனக்கு என முகமது நிஷாத் மனதிற்குள் ஒரு கணக்கு போட்டு அமைச்சர் பதவியில் அமர்கிறான்.

🙏

எழுதியவர் : மன்னை சுரேஷ் (4-Jul-23, 10:34 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 91

மேலே