அவள் ஒரு முடிவில்லா பயணம் 11
பெற்றோரும் உதவவில்லை மாமனார் மாமியாரும் இவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை பக்கத்து வீட்டுப் பாட்டி செய்யும் உதவி கடவுளின் கருணை என தெரிகிறது மிகவும் கஷ்டமான நிலைமை பணம் கடனாக யார் இடம் கேட்பது அதை எப்படி கேட்பது என கூட பாரதிக்கு தெரியவில்லை ஏனென்றால் கதிர் இருந்த வரைக்கும் பணத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை வேலைக்கு போவான் அவளிடம் பேசவில்லை என்றாலும் பணத்தை கொடுத்து விடுவான் வீட்டு வாடகை இருந்து தேவையான அனைத்துமே அவன்னே பார்த்துக் கொள்வான் இவ்வளவு தான் வாடகை இதுதான் பொருள்களுக்கான செலவு என எதுவுமே அவன் வாய் திறந்து சொன்னதில்லை அவளும் கேட்டதில்லை கேட்டால் அவன் சொல்வதில்லை என்பதுதான் காரணம் பேசாத அவரிடம் எத்தனை முறை பொய் பேசுவது அவர்ராக பேசுவார் என காத்திருந்த நாட்கள் கனவானது இனி கதிரும் இல்லை அவன் நினைவும் இல்லை வேலை தேடி தேடி பாரதி மிகவும் சேர்ந்து விடுகிறாள் காரணம் அவள் இன்னும் பட்டப்படிப்பு முடிக்கவில்லை அவள் முடித்த பின் தான் அவளுக்கான வேலை கிடைக்கும் ஆனால் இப்பொழுது அவள் குழந்தையை காப்பாற்ற வேண்டும் அதற்கு அவளுக்கு வேலை கிடைக்க வேண்டும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது யாரிடமும் பொய் உதவி கேட்கக் கூடாது என நினைக்கிறாள் அதாவது தன் குடும்பத்திடமும் தன் மாமனார் மாமியார் இடமோ பண்ணையார் மிகுந்த வேதனையில் இருக்கிறார் நம் மகளின் வாழ்க்கை இப்படியாக நம்மே காரணம் ஆகிவிட்டோம் எத்தனை பேர் சொன்னார்கள் யோசித்துச் செய் என்று பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து விடாதே அவன் யார் என்ன என்று நன்றாக விசாரித்து பார் நம்ம ஊரிலே நீ கொடுத்திருக்கலாம் தானே என பல பேர் பல விதமாக பேசுகின்றனர் அவசரப்பட்டு விட்டோமோ அதனால் தான் நம் பெண்ணின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகிவிட்டது என பூங்கொடி என்ன சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை கண்ணீரைத் தவிர வேறு எதுவும் அவளிடம் இல்லை நம் மகள் நம்மோடு வந்து விடமாட்டாளா அவள் வந்தால் நம்மோடு இருக்கலாம் இப்படிப்பட்ட வாழ்க்கை அவளுக்கு தேவையா என நினைத்து நினைத்து அழுது கொண்டே இருக்கிறாள் பண்ணையாருக்கும் மிகுந்த கவலையாகி விட்டது பாரதிக்கும் மிகுந்த கஷ்டமாகிவிட்டது வாழ முடியுமா இல்லையா என்று தெரியவில்லையே என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே இருக்கிறார் அவர் ஏறாத கடையில்லை எல்லா மிடத்திலும் யாரும் வேலைதார தயாராக இல்லை நீ யார் எங்கிருந்து வந்தாய் என்ன படித்திருக்கிறாய்? என கார்த்திகாவிடம் கேட்ட அனைத்து கேள்வியுமே பாரதிக்கும் பொருந்தியது முன்ன அனுபவம் இருக்க உனக்கு சிபாரிசு செய்ய தெரிந்தவர்கள் யாராவது முன் பணம் கட்ட முடியுமா நீ ஏன் வேலைக்கு வருகிறாய் என பல கேள்விகள் பல விதமாக கேட்கப்பட்டது பதில் ஒன்றுதான் நம் வாழ வேண்டும் அதற்கு வேலை வேண்டும் பக்கத்து வீட்டு பாட்டி பாரதி நீ இவ்வளவு கஷ்டப்படுகிறாய் அல்லவா உன் அப்பாவிடம் ஆவது ஏதாவது கொஞ்சம் இப்பொழுது கடனாக பணம் கேட்கலாம் தானே உன் குழந்தைக்காக இல்லை நீ சாப்பிடுவதற்காகவது ஏதாவது கொஞ்சம் கேட்கலாம் தானே என சொல்கிறாய் இல்லை பாட்டி வேண்டாம் நான் இன்று கையேந்தி போனால் அதற்கு என் அப்பா நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் அந்த குழந்தை வேண்டாம் அதை எங்கேயாவது அனாதை ஆசிரமம் அல்லது அதன் பெற்றோரிடம் கொடுத்துவிடு என சொல்வார் ஆனால் அவர் என்னை நம்பி கொடுத்தது அவள் இல்லாமல் நான் இல்லை பாட்டி அவள் வந்து கொஞ்ச நாள் தான் ஆகிறது ஆனால் அவளை விட்டு என்னால் இருக்க முடியவில்லை அவ்வளவு பாசம் வைத்து விட்டேன் அவளும் என்னை அம்மா என நினைத்து விட்டால் என் வாழ்க்கையில் முடிவும் இவர்தான் முதலும் இவர்தான் பாட்டி என பாரதி பேசுகிறார் நீ சொல்வது எனக்கு புரிகிறது ஆனால் நீ படுவதை பார்க்க என்னால் முடியவில்லை. கஷ்டம் தானே பாட்டி அது விருந்தாளி போல் எல்லோரும் வாழ்க்கையிலும் வருவது தான் எனக்கு இப்பொழுது என் வீட்டுக்கு வந்திருக்கிறது பார்ப்போம் என்ன செய்கிறது என முடிந்தவரை போராடாலாம் இல்லை என்றால் அதற்குப் பின் ஏதாவது ஒரு முடிவெடுக்கலாம் என பாரதி பேசுகிறார் பண்ணையார் மிகுந்த வேதனைக்குள்ளாகி விட்டதால் அவரின் உடல்நிலை மிகுந்த மோசமாகிவிட்டது பாரதி உனக்கு நான் இவ்வளவு பெரிய கொடுமை செய்துவிட்டேன் பாரதி பாரதி என அவள் பெயரையே சொல்லிக் கொண்டு புலம்ப ஆரம்பிக்கிறார் என் மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்ன செய்வது என எனக்கு தெரியவில்லையே அவளை நான் எப்படி பார்ப்பது அவள் வாழ்க்கைக்கு என்ன செய்வது என அவர் அதையே நினைக்கிறார் இப்படி இருக்க பாரதிக்கு ஒரு வேலை அதாவது ஒரு சிறிய கம்பெனி அதில் வேலை கிடைக்கிறது அதில் எம்டி ஒரு பெண்அவள் பெயர் அனிதா அவள் இவளுக்கு இவள் படிப்பை பார்த்து வேலை தரவில்லை பெண்கள் வாழ்வில் உயர வேண்டும் மேலும் மேலும் வளர வேண்டும் என்று எண்ணம் கொண்டவள் அதனால் பாரதிக்கு வேலை கொடுத்து விடுகிறார் முதலில் பார்ப்பது மிகச் சிறிய வேலை தான் அங்கு இருக்கும் வேலை செய்பவர்களுக்கு தேவையானதை அதாவது பொருட்கள் என்றால் சாப்பாடு அல்ல கம்பெனியில் வேலை அதைக் கொண்டு வந்து கொடுப்பதும் அதில் சரி பார்ப்பதும் என முதலில் ஆரம்பத்தில் கற்றுக் கொள்கிறாள் இப்படியே அதாவது 5000 என சம்பளம் ஆரம்பத்தில் இருக்க ஏதோ ஒரு வேலை நமக்கு கிடைத்தது இனி இந்த வேலையிலே நம் முன்னேற வேண்டும் என பாரதிக்கு மனதில் ஒரு எண்ணம் அவள் இருக்கும் வீடு பெருசு ஆனால் வாடகை இதெல்லாம் பார்த்தாள் அவள் வாங்கும் பணம் பத்தாது அதனால் என்ன செய்கிறாள் அந்த வீடு காலி செய்துவிட்டு இந்த கம்பெனிக்கு பக்கத்திலே என ஒரு சிறிய வீட்டை பார்த்துக்கொண்டு அவள் வசதி கேட்டது போல் குடி வந்து விடுகிறாள்.