தபதப தாளங்கள்

ஏனோ..? ஏனடி...?
ஏனோ..? ஏனடி...?

எந்தன் கண்
உந்தன் முகம்
திடீரென்று கண்டு
திடுக்கென்று விழுந்து
சட்டென்று சரிந்து
பட்டென்று பற்றிப் பறந்து
பின்னே தொடர்ந்து சென்று
வாழாத வாழ்வை தேடுதே...

உன்னாலே..கண்ணே...பெண்ணே..
O2 வெல்லாம் ஓடி ஒழியுதே...
அதனாலே மூச்சு திணறுதே...

இதயத்துனுள் தபதப தாளங்கள் கேக்குதே ...
வார்த்தைகள் வழுக்கி ஏக்கங்கள்
எழுதே...

ஏழெட்டு சொற்கள் எழவே
உடல்மேல் நீர்க்கோர்வை
பூக்குதே..

மகிழ்வென்று வாழும் மழலைப்போல மனதும்
மாற நினைக்குதே...

எழுதியவர் : BARATHRAJ M (25-Jun-21, 8:36 pm)
பார்வை : 58

மேலே