அனுமதி இல்லாமல்

அனுமதி இல்லாமல்
அதிகாரமாய் உள்நுழைந்து
ஆக்கிரமித்துக்கொள்கிறது
உன் நினைவுகள் எல்லாம் ...

விலக்கிட முடியாமல் விட்டு விடுகிறேன்
உள்நுழையும் நினைவுகள்
எல்லாம் என் உயிர் கொள்ளும்
என்று அறிந்தாலும் ...

விலகிச்சென்று பல காலம்
ஆனபோதும் ஆக்கிரமிக்கும்
உன் நினைவுகளை நிராகரிக்க
முடியமால் நித்திரை தொலைத்து
நித்தம் தொலையுது காலம்...

இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் (மகோ)
+91 - 98438 -12650
கோவை-35

எழுதியவர் : மகேஸ்வரன் கோவிந்தன் (மகோ) (25-Aug-21, 10:50 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
Tanglish : anumathi illamal
பார்வை : 1509

சிறந்த கவிதைகள்

மேலே